சட்டென்று விழிப்பு வந்துவிட்டது புஷ்பாவிற்கு, சீக்கிரம் எழுந்திருக்கணுமே.! எழுந்து செல்போனைப் பார்த்தாள். ’3 மணிக்கு அலாரம் வைத்திருந்தேனே!’ ஏன் அடிக்கவில்லை. சந்தேக உணர்வு மன்னிப்பாய் மாறியது நேற்று இரவு போனை சைலண்ட் மோடில் போட்டு இருந்ததால் – அது தன் கடமையைச்…
Category: சிறுகதை
“பல்லவியே சரணம்” – சிறுகதை |இராஜலட்சுமி
(நகைச்சுவை சிறுகதை) அனுபல்லவி, சரண்யன் இவர்களின் காதல், கலாட்டாவில் துவங்கி கவிதை போல எப்படி கனிந்தது? அதாங்க இந்த கதை. வாங்க முதல்ல இவங்க குடும்பத்தை பத்தி சொல்லிடுறேன் நான் வசிக்கிற குமரன் காலனியில தான் இவங்களும் குடியிருக்காங்க. என்…
தாதாக்கள் பிரபஞ்சம் கூட்டணி – சிறுகதை | ஆர்னிகா நாசர்
வொண்டர்லான்ட் ஸ்டுடியோ. குளிர்பதன மூட்டப்பட்ட கேரவன். ரெட்டணங்கால் போட்டு சரிவாய் அமர்ந்திருந்தார் சூப்பர் ஸ்டார் விமல் கிருஷ்ணா. வயது 72. நீரழிவு நோயால் நலிந்து மெலிந்த உடல். இடுங்கிய யானைக்கண்கள். கத்திமூக்கு. காக்டெய்ல் வாய். பல் செட்டின் செயற்கை பற்கள்…
பஞ்சத்து ஆண்டி – தி. ஜானகிராமன்
அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது: “எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை, முடிச்சு, பானை, சட்டி எல்லாத்தையும். கிளம்புங்க… ம்! வரவரச் சத்திரமாப் போயிடுச்சு, இந்தத் திண்ணை… எழுந்திருக்க மாட்டிஙக்?… இன்னிக்கிப் புரட்டாசி…
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் – புதுமைப்பித்தன்
மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார். ‘டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா…
இளம்சிவப்பு நீலம் பச்சை | ஆர்னிகா நாசர் | சிறுகதை
மின்னல் திருமண மையம். ஓட்டிவந்த சூரியசக்தி இரண்டு சக்கரவாகனத்தை ஸ்டாண்டிட்டு நிறுத்தினான் கனலேந்தி. வயது 28. பச்சைப்பாசி வளர்ப்பு மையத்தில் மேற்பார்வையாளனாகப் பணிபுரிகிறான். 165செமீ உயரன். திராவிடநிறம். கோரை முடி தலைகேசம். நிக்கோட்டின் உதடுகள். இடுங்கிய ஏகாந்தக்கண்கள். பெற்றோரை இளவயதில் இழந்தவன்.…
வி.சி.11 – சதுர பூமி | ஆர்னிகா நாசர்
டோல்கின் எழுதிய ‘மிடில் எர்த்’ புத்தகத்தை கையில் வைத்திருந்தான் மாயவன். மாயவனுக்கு வயது முப்பது. நடுவகிடு எடுத்து தலைகேசத்தை வாரியிருந்தான். பால்வழி பிரபஞ்சத்தின் முதுகை தடவி விடும் கண்கள். பௌர்ணமித்த நுனி மூக்கு. மீசையின் இரு நுனிகளும் கீழ் நோக்கி வளைந்திருந்தன.…
வி.சி.10 – அந்த ஐந்து நொடிகள் | ஆர்னிகா நாசர்
அந்த ஐம்பது மாடி கட்டடத்தின் மொட்டைமாடியில் பத்து வயது சிறுமி மீயாழ் நுவலியும் அவளது தந்தை காரிமாறனும் அமர்ந்திருந்தனர். இருவரின் கண்களும் இரவு வானத்தை மேய்ந்தன. “அப்பா!” “என்னம்மா?” “இந்த நட்சத்திரங்களை எல்லாம் பார்த்தால் எனக்கு ஒரு வித்தியாசமான கற்பனை தோன்றுகிறது!”…
நலம் நலமறிய ஆவல் | இயக்குனர் மணிபாரதி
குன்னூர் சிம்ஸ் பார்க் வாசலில், அந்த வேன் வந்து நின்றது. தோழிகள் பத்து பேரும், வேனிலிருந்து இறங்கினார்கள். வருடத்திற்கு ஒருமுறை, அவர்கள் இப்படி எதாவது ஒரு சுற்றுலா தளத்திற்கு, டூர் வருவது வாடிக்கை. அதுவும் கணவன்மார்களின் தொல்லையிலிருந்து விடுபட்டு. தோழிகளின் குழுவிற்கு…
வி.சி.8 – நகம் | ஆர்னிகா நாசர்
விஞ்ஞான சிறுகதை தொடர் – 8 என் பெயர் கமலகண்ணன். இலக்கண சுத்தத்தின் படி பார்த்தால் என் பெயரை கமலக்கண்ணன் என்றுதான் எழுதவேண்டும் ‘க்’ வேண்டாம் என்று நான் கழற்றி விட்டேன். எனக்கு வயது 25 உயரம் 170செமீ தலைகேசத்தை வகிடு…