பள்ளிகளில் இனி லாஸ்ட் பெஞ்ச் இருக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.பள்ளிகளில் இனி மாணவர்களை ‘ப‘ வடிவில் அமரவைக்க வேண்டும் என இன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு, தான் கடைசி பெஞ்ச் என்ற எண்ணம் உருவாகாத வகையில் இத்தகைய அறிவிப்பை தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாற்றம், மாணவர்களிடையே சமத்துவமான கற்றல் சூழலை உருவாக்கவும்,ஆசிரியர்களுடனான தொடர்பை மேம்படுத்தவும் உதவும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. ‘ப‘ வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் என்ற கருத்தை நீக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
Category: நகரில் இன்று
அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு த.வெ.க. இன்று போராட்டம..!
20 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில்…
13.89 லட்சம் பேர் தமிழகத்தில் இன்று குரூப்-4 தேர்வு எழுதுகிறார்கள்..!
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் தேர்வை எழுத இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர்,…
மத்திய அரசு எல்.ஐ.சி. பங்குகளை விற்கிறது..!
எல்.ஐ.சி.யில் மத்திய அரசுக்கு 96.5 சதவீத பங்குகள் உள்ளன. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 3.5 சதவீத பங்குகளை கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு விற்பனை செய்தது. அதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.21 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. தற்போது,…
தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்..!
வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என இந்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கமும் அறிவித்து உள்ளது. அகில இந்திய அளவில், இன்று அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் தி.மு.க.வின் தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யூ, உள்பட 13…
நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது..!
போராட்டம் அறிவிக்கப்பட்டநிலையில், பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை…
ஜூலை 18-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்..!
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் முன்வைக்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட்…
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவருக்கும் நிபந்தனை ஜாமீன்..!
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை போதைப்பொருள்…
நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்..!
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் நாளை (புதன்கிழமை) வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. விலைவாசி உயர்வை…
சென்னையில் மின்சார ரெயில்கள் ரத்து..!
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-கும்மிடிப்பூண்டி உள்பட 24 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரெயில் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 10 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணி முதல் மாலை…
