கோவில் சுற்றி
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா..!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தேசம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. அயோத்தி நகரில் சாரை சாரையாக பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். அயோத்தி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் ராமர் கோவில் வளாகம் முழுவதும் அலங்கார விளக்குகளால் ஜொலிக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதனையொட்டி […]
முருகு தமிழ் | வைகுண்ட ஏகாதசி பாடல்| நவதிருப்பதி நாயகா| கவிஞர் முனைவர் ச.பொன்மணி
தூத்துக்குடி மாவட்டம் தாபிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள நவதிருப்பதிகளான திருவைகுண்டம், நத்தம், திரும்புலியங் குளம், பெருங்குளம். தொலைவில் மங்கலம் என்னும் இரட்டைத் திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகர் என்னும் ஒன்பது திருத்தலங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் அடியார்கள் நடைப்பயணமாக காலையில் திருவைகுண்டத்தில் தொடங்கி மாலை சொர்க்கவாசல் அங்கு வந்தே காணும் வகையில் தரிசனம் செய்வர். அத்தலத்தங்களைப் பற்றிக் கூறும் வகையில் இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது .https://youtu.be/VMyfV8Wi5pQ?feature=shared பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் ச.பொன்மணி
நாகூர் தர்ஹாவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..! | நா.சதீஸ்குமார்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற தர்ஹாவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உலக பிரசித்திப் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்ஹா உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் நாகூர் ஆண்டவரை வழிபாடு செய்து வருகின்றனர். நாகூர் ஆண்டவர் தர்ஹாவில் 467-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழாவையொட்டி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நேற்று இரவு அதிர்வேட்டுகள் முழக்கத்துடன் 5 மினராக்களில் ஒரே நேரத்தில் புனிதக் கொடியேற்றத்துடன் துவங்கியது. […]
திருவண்ணாமலை தீபம் பாடல் | சிவனே சிவனே
திருவண்ணாமலை தீபம் பாடல் | சிவனே சிவனே | கவிஞர் முனைவர் ச.பொன்மணி | பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் கவிஞர் முனைவர் ச.பொன்மணி
திருவண்ணாமலை தீபம் பாடல் | அருணாசல சிவனே | கவிஞர் முனைவர் ச.பொன்மணி
முருகு தமிழ் | திருவண்ணாமலை தீபம் பாடல் | அருணாசல சிவனே | கவிஞர் முனைவர் ச.பொன்மணி பாடல், இசை, குரல் & ஒளிவடிவம் கவிஞர் முனைவர் ச.பொன்மணி
கள்ளழகர் கோவிலில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி குடமுழுக்கு விழா கோலாகலம்! | நா.சதீஸ்குமார்
மதுரை அருகே அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோயில் உள்ளது. அங்கு கடந்த 2011-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதற்காக இந்த கோயிலில் ரூ.2 கோடியில் ராஜகோபுர திருப்பணிகள் நிறைவு பெற்றன. இதையொட்டி நேற்று முன்தினம் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 பட்டர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக […]
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்..! | நா.சதீஸ்குமார்
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்செந்தூரே விழாக்கோலம் பூண்டுள்ளது. அறுபடை வீடுகளில் 2ம்படைவீடான திருச்செந்தூர் முருகன் கோவில், கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால், ஏகப்பட்ட ஸ்பெஷல் சிறப்புக்களை கொண்டுள்ளது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள கடற்கரையில் நீராடி முருகனை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். அதிலும், கந்தசஷ்டி திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் அங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும், இந்த […]
திருப்பதி கோயில் ஒரே ஆண்டில் ஒரு டன் தங்கம் மற்றும் 1800 கோடி ரூபாய் பணம் சேமிப்பு..! | நா.சதீஸ்குமார்
திருப்பதி கோயில் டெபாசிட் கணக்கில், ஒரே ஆண்டில் ஒரு டன் தங்கம் மற்றும் 1800 கோடி ரூபாய் பணம் ஆகியவற்றை சேமித்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் ஏராளமான அளவில் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் ஆகியவை நடைபெறுவதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியது. தெலுங்கு தேசம் கட்சியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில், இன்று திருப்பதி மலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். “திருப்பதி […]
சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கியது..! | நா.சதீஸ்குமார்
கார்த்திகை மாதம் பிறந்துள்ளதை முன்னிட்டு மண்டல பூஜை விழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. புதிய மேல் சாந்திகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கேரளா மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரிமலை. பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் தரிசனம் தரும் ஐயப்பனை தரிசனம் செய்த பல நாட்கள் கடுமையான விரதம் இருந்து வந்து காடு மேடு கடந்து மலையேறி பக்தர்கள் தரிசனம் […]
திருவண்ணாமலை தீப திருவிழா கொடியேற்றம்! | நா.சதீஸ்குமார்
திருக்கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்ட போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக திகழ்வது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். மலையே சிவமாக திகழ்வதால் இங்கு பக்தர்கள் கிரிவலம் வந்து வணங்குகின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலம் வந்து பக்தர்கள் […]