கேரளாவில் கோயில் விழாக்களில் யானைகள் பயன்படுத்த கட்டுப்பாடு..!

 கேரளாவில் கோயில் விழாக்களில் யானைகள் பயன்படுத்த கட்டுப்பாடு..!

கேரளாவில், கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது வழக்கம். அப்போது யானைகளுக்கு மதம் பிடித்து சில அசம்பாவிதங்களும் நடந்துள்ளன. இந்நிலையில் கோவில் விழாக்களில் யானைகள் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள ஐகோர்ட் பிறப்பித்தது. அதன் விபரம்:

திருவிழாவில் யானைகளை பயன்படுத்தும் போது ஒரு யானைக்கும், மற்றொரு யானைக்கும் இடையே, 10 அடி துார இடைவெளி இருக்க வேண்டும்

பொது மக்கள் இருக்கும் பகுதியில் இருந்து, குறைந்தது 25 அடி துாரத்தில் மட்டுமே யானைகளை நிறுத்த வேண்டும்

பட்டாசுகள் வெடிக்கும் இடத்தில் இருந்து, 320 அடி துாரத்தில் யானைகளை நிறுத்த வேண்டும்

யானைகளுக்கு குறைந்தது மூன்று நாட்கள் ஓய்வு அளிக்க வேண்டும்

கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது அத்தியாவசிய மத சம்பிரதாயம் அல்ல.

இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை நடத்தும் திருவம்பாடி மற்றும் பரமேக்காவு தேவசம் வாரியங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இம்மனுவை விசாரித்த கோர்ட், ‘கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் சாத்தியமற்றவை’ என தெரிவித்தது. ‘மேலும், விதிகளை உருவாக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், அதற்கென தனி அதிகாரம் படைத்த அதிகாரிகள் உள்ளனர்’ என்றும் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, கேரள ஐகோர்ட் விதித்த கட்டுப்பாடுகளுக்கு தடை விதித்ததுடன், கேரளாவில் சிறைபிடிக்கப்பட்ட யானைகள் மேலாண்மை மற்றும் பராமரிப்பு விதிகள், 2012ன் கீழ் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்த அனுமதி அளித்தது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...