ஜெயிலர் படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்திருக்கும் சூழலில் அதன் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியாகியிருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன் லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், வசந்த் ரவி, யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்தது. ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகிய இரண்டு பேருக்குமே […]Read More
தமிழ் சினிமாவை உலுக்கி எடுத்த படம்.. இன்று வரை மறக்க முடியாத ‘உதிரிப்பூக்கள்
’ August 15, 2023 by Bala S தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி சினிமா உலகையே உலுக்கி எடுக்கும் என்றும் மறக்க முடியாத படமாக வெகு சில படங்கள் மட்டுமே அமையும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் தான் கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் திரைப்படம் தமிழ் சினிமா உலகினர்களை ஆச்சரியப்பட வைத்தது என்பதும் இன்று பார்த்தால் கூட அந்த படத்தின் உள்ள ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. […]Read More
இளையராஜா இசையமைக்காமல் இசையமைத்த படம்.. தேசிய விருது பெற்ற ‘வீடு’..! பாலு மகேந்திரா இயக்கத்தில் உருவான ’வீடு’ என்ற திரைப்படத்தில் பிஸி காரணமாக இளையராஜாவால் பின்னணி இசை அமைக்க முடியாமல் போனது. ஆனால் அவர் ஏற்கனவே உருவாக்கி இருந்த இசை கோர்வையை எடுத்து பாலு மகேந்திரா மிகச் சரியான இடத்தில் பின்னணி இசையாக வைத்து இந்த படத்தை ரிலீஸ் செய்தார். மொத்தத்தில் இளையராஜா இசை அமைக்காமல் ஆனால் அவருடைய இசையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படம் தான் ’வீடு’ […]Read More
சரத்குமார் – அமிதாஷ் நடித்திருக்கும் ‘பரம்பொருள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கவி கிரியேஷன்ஸ் மனோஜ் & கிரிஷ் தயாரிப்பில் சி.அரவிந்த் ராஜ் இயக்கத்தில் சரத்குமார் – அமிதாஷ் நடித்திருக்கும் புதிய படம் ‘பரம்பொருள்.’ கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி.சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, ‘ரிச்சி’ படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘டான்’, ‘சாணிக் […]Read More
நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். தற்போது தன்னடைய டி50 படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் படம் டிசம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என அடுத்தடுத்த மொழிகளில் தனுஷ், சிறப்பான பல படங்களை கொடுத்து வருகிறார். கமர்ஷியல் படங்களில் மட்டுமில்லாமல் அழுத்தமான கதைக்களங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ், கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் […]Read More
நடிகர் விஜய் -இயக்குநர் மோகன்ராஜா கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது வேலாயுதம் படம். இந்தப் படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணையவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விஜய்க்காக தான் 3 ஸ்கிரிப்ட்களை உருவாக்கியுள்ளதாகவும் விரைவில் தங்களது கூட்டணி இணையும் என்றும் மோகன் ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மற்றும் மோகன்ராஜா கூட்டணியில் வெளியான வேலாயுதம் படம் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமைந்தது. எப்போதும் புதிய இயக்குநர்களின் கூட்டணியில் […]Read More
நடிகர் அர்ஜுன் சுதந்திர தினத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், லியோ படத்தில் இருந்து அவரது கேரக்டர் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் ஆண்டனி தாஸ் க்ளிம்ப்ஸ் வெளியான நிலையில், தற்போது அவரது சகோதரர் ஹரோல்ட் தாஸ் க்ளிப்ஸ் வெளியாகி உள்ளது. சும்மாவே ஆக்ஷனில் அதகளம் செய்யும் நடிகர் அர்ஜுன் லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டர் படத்தில் சொல்லவா வேண்டும் என்பது போல வெறித்தனம் காட்டி நடித்துள்ளார். நடிகர் […]Read More
பிரபல தெலுங்கு நடிகர் சுனில் தற்பொழுது தமிழ் சினிமாவில் அதிகமான திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார் நடிகர் சுனில். தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுனில், நுவே கவாலி என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். தெலுங்கு சினிமாவில் கலங்கி வந்த சுனில், தமிழ் ஆடியன்சுக்கு பரீச்சியமானது, அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா திரைப்படத்தின் […]Read More
திரையரங்கில் வெற்றி நடைபோட்டு வசூலை அள்ளிவரும் ஜெயிலர் திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்து அட்டகாசமான அப்டேட் வெளியாகி உள்ளது. ஸ்டைலு ஸ்டைலுதான்…இது சூப்பர் ஸ்டாலுதான் என்று தனது விதவிதமான ஸ்டைலால் ஆட்டிப்படைத்த ரஜினிகாந்த் நான்கு தலைமுறையின் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த படங்கள் சில கடந்த 5 ஆண்டுகளில் விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. கடைசியாக நடித்த அண்ணாத்த படமும் அதற்கு முன்னதாக நடித்திருந்த தர்பார், பேட்ட போன்ற படங்களும் வசூலில் குறைக்கவில்லை என்றாலும், […]Read More
நமது இந்திய நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நடிகர் விஷாலும் இந்த கொண்டாட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு காரைக்குடி அருகில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி டைரக்ஷனில் விஷால் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இன்று சுதந்திர தினம் என்பதால் காரைக்குடி அருகில் […]Read More
- 2024-ல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் இடம்பெற்ற 3 இந்திய பள்ளிகள்..!
- பின்னணி இசைக்கான தனது யூடியூப் சேனல் தொடங்கினார் “இசைஞானி’
- தீபாவளி நெரிசலைத் தவிர்க்க சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை..!
- குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி..!
- மதுரை மாசி வீதிகளில் களைகட்டிய தீபாவளி விற்பனை..!
- தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய பாடல் இன்று வெளியீடு..!
- வரலாற்றில் இன்று (27.10.2024 )
- இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மதுரையை மூழ்கடித்த வடகிழக்கு பருவமழை..!
- மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை..!