சற்று முன் நெல்லை பாளை பஸ் ஸ்டாண்டு அருகில் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் அரசு விரைவுப் பேருந்து செல்லும் போது டிவிஎஸ் எக்ஸ்எல் 16 வயது மதிக்கத்தக்க உள்ள சிறுவன் ஓட்டி சென்றான் தடுமாறி பஸ் முன்பகுதியில் விழுந்து தலை நசுங்கி நிலையில் இறந்தான் சிறுவனுக்கு எந்த ஊர் என்று தெரியவில்லை போலீஸ் விசாரணைRead More
Tags :ஜானவி
ரேஷன் கார்டுகளில் மாற்றம்: அமைச்சரவை ஒப்புதல். ரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் கார்டுகளை, அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை மட்டும் வாங்கியவர்கள், அனைத்துப் பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம் .10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன,இந்த பயனாளர்கள் அரிசி கார்டுக்கு உரிய அனைத்தும் பெற்றுக் கொள்ளலாம். ஆன்-லைன் வாயிலாக, வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.Read More
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவு.கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண் குராலா, செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ் நியமனம். தென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், ராணிப்பேட்டை ஆட்சியராக திவ்யதர்ஷினி ஆகியோர் நியமனம்Read More
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டி வரும் விவகாரம். தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டி வருகிறது, கர்நாடகா. யார்கோல் பகுதியில் 50 மீட்டர் உயரத்தில் அணை கட்டி வருகிறது, கர்நாடகா. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.Read More
ஐதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில், 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிரே வந்ததால் விபத்து. விபத்தில் ஒருவர் பலி, 20 பேர் காயம் என தகவல். தவறான சிக்னல் காரணமாக ஒரே தண்டவாளத்தில், 2 ரயில்கள் வந்துள்ளன.Read More
ரத்தாகிறது முப்பருவ கல்வி முறை திட்டம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்ட முப்பருவ கல்வித் திட்டம் ரத்து. 9ம் வகுப்பை தொடர்ந்து, 8ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை திட்டம் ரத்தாகிறது. அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என அறிவிப்புRead More
ஜப்பானில் ஹபிகிஸ் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், மேலும் இரண்டு புயல்கள் ஜப்பானை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசுபிக் பெருங்கடலில் உருவாகிய ஹகிபிஸ் புயல் ஜப்பான் நாட்டின் டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. கடந்தவாரம் ஏற்பட்ட இந்த புயலால் ஜப்பான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. மற்றும் சூறைக்காற்று சுழன்றடித்தது. மழை வெள்ளம் காரணமாக 140இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. பல […]Read More
3வது டெஸ்ட் போட்டி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு. தென்னாப்பிரிக்கா எதிரான 3வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு. 3rd Test. India XI: R Sharma, M Agarwal, C Pujara, V Kohli, A Rahane, R Jadeja, W Saha, R Ashwin, S Nadeem, U Yadav, M Shami. 3rd Test. South Africa XI: D Elgar, […]Read More
நீட் தேர்வு முறைகேடு – அடுத்த அதிரடி! மருத்துவ படிப்பில் மாணவர்கள் முறைகேடாக சேர்ந்திருக்கிறார்களா? அடுத்தக்கட்ட ஆய்வுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் அதிரடி. 5 ஆயிரம் மாணவர்களின் கைரேகையை, ஒப்பிட்டு பார்க்க முடிவு. தேசிய தேர்வு முகமையிடம், மாணவர்களின் கைரேகை பதிவுகளை பெற நடவடிக்கை.Read More
நீட் ஆள்மாறாட்ட மோசடியில் மேலும் 19 மாணவர்கள் மீது சந்தேகம்: சி.பி.சி.ஐ.டி. உயர்நீதிமன்றத்தில் தகவல். மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 4,250 மாணவர்களின் சேர்க்கையை மறு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு.Read More