சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீஸ் கேரளா செல்கிறது. பாத்திமாவின் தாய், சகோதரியிடம் விசாரணை நடத்த கொல்லம் செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ். விடுமுறைக்காக சென்றுள்ள பாத்திமாவின் தோழிகளிடம் விசாரணை நடத்த திட்டம்.Read More
Tags :மாயா
கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு ஆலை அலுவலகத்தில், 4வது நாளாக, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக ஐஐடி பேராசிரியர்கள், 3 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன். பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு. சென்னை ஐஐடி வளாகத்தில், 6 மாணவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கி […]Read More
14 மாநில தலைநகரங்களின் குடி தண்ணீர் குடிக்கவே தகுதியற்றது – மத்திய அமைச்சர். இந்தியாவில், 14 மாநிலங்களின் தலைநகரங்களில் கிடைக்கும் தண்ணீர் குடிக்க தகுதியற்றது என, மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் 21 நகரங்களில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகளை பரிசோதித்ததில், சென்னை, டெல்லி, பெங்களூரு உட்பட 14 மாநில தலைநகரங்களில் கிடைக்கும் குடிநீர் குடிக்கவே தகுதியற்றது என, முடிவுகள் தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். மும்பை மாநகராட்சியில் […]Read More
திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ரயில்வே மேலாளர் முத்துராமலிங்கம், ரயில்வே அதிகாரி சீனிவாசனுக்கு, 2 ஆண்டுகள் சிறை. ஒப்பந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்டதாக வணிக துறையின் இன்பராஜ் என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.Read More
ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு – மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம். விசாரணைக்கு பின் பேட்டியளித்த ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு. சிபிஐ-ல் பணியாற்றியவர் தலைமையில் சிறப்புக்குழு அமைப்பு. ஐ.ஐ.டியின் 3 பேராசிரியர்களே காரணம் என மாணவி கடிதம்.Read More
ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம். ஐஐடி மாணவி, ஃபாத்திமா லத்திப் தற்கொலை விவகாரத்தில், தமிழக முதல்வருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்! மாணவியின் தந்தை எழுதிய கடிதத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பினார் கேரள முதல்வர். பேராசிரியர்களின் துன்புறுத்தலால் தான் மாணவி தற்கொலை என தந்தை புகார். கேரள முதல்வரின் கடிதத்தை அடுத்து சென்னை கோட்டூர்புரம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.Read More
நெல்லை – தென்காசி மாவட்டங்களின் கீழ் செயல்படும் கிராமங்களின் விவரம் வெளியீடு. பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை ஆகிய தாலுகாக்கள் நெல்லை மாவட்டத்தின் கீழ் இயங்கும் என அறிவிப்பு. சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே புதூர், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய தாலுகாக்கள் தென்காசி மாவட்டத்தின் கீழ் இயங்கும். குருக்கள் பட்டி, சேர்ந்தமங்கலம், கரிவலம்வந்த நல்லூர், வீரசிகாமணி ஆகிய வருவாய் கிராமங்களை கொண்ட சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.Read More
இடமாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளருக்கு ஆதரவாக பொதுமக்கள் சாலைமறியல் தமிழ் சினிமாக்களில் எப்போதும், ரவுடிகளை ஆதரிப்போர் போலவே சித்தரிக்கப்படும், காசிமேடு மக்களின் அன்பை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….! இங்கே பெண்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்வது, குடிநீர் கேட்டோ, அல்லது நிவாரண நிதி கேட்டோ அல்ல- நியாயமான காவல் ஆய்வாளர் ஒருவரை, தங்கள் பகுதியில் இருந்து பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான் இந்த போராட்டம்..! தாயைக் கண்ட […]Read More
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் ஏ.பி சாஹி.ஆளுநர் பன்வரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்Read More
சென்னையில் இரண்டாவது விமானநிலையம் அமைக்க மாநில அரசு 3500 ஏக்கர் நிலத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்திற்கு நடுவே அமைந்திருக்கும் பரந்தூர் மற்றும் மாமண்டூர்- செய்யூருக்கு இடையே உள்ள இடம் இதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிக தூரம் அமைந்து விடக்கூடாது என்பதில் அக்கறை கொள்ளும் மாநில அரசு ஏற்கனவே தாம்பரம் மற்றும் அரக்கோணம் பகுதிகளில் பாதுகாப்பு படைக்கான விமானதளம் உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாமா என்று மத்திய அரசிடம் ஆலோசனையில் ஈடுபடவும் வாய்ப்பு […]Read More