முக்கிய செய்திகள்
கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு ஆலை அலுவலகத்தில், 4வது நாளாக, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக ஐஐடி பேராசிரியர்கள், 3 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன். பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு. சென்னை ஐஐடி வளாகத்தில், 6 மாணவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர்.
மதுரை ரயில் நிலையத்துக்கு தண்ணீர் கேன் கொண்டு வந்த லாரியில் ரூ.7.62 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல். ஓட்டுநர் தந்த தகவலின் பேரில் லாரியில் கிடந்த பையில் இருந்து ரூ.2,000 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாணவர் அமைப்புகள் சார்பில் ஜவகர்லால் நேரு பல்கலையில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்வதால் நாடாளுமன்ற வளாக பகுதியில், 144 தடை விதிப்பு.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு. ப.சிதம்பரத்தின் மனு நாளை அல்லது நாளைமறுநாள் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி பாப்டே அறிவிப்பு.
டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை. டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் – உச்சநீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையம் தகவல்.