சென்னையில் 1500 முதல் 2000 ஏக்கரில் தயாராகும் இரண்டாவது விமானம்
சென்னையில் இரண்டாவது விமானநிலையம் அமைக்க மாநில அரசு 3500 ஏக்கர் நிலத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணத்திற்கு நடுவே அமைந்திருக்கும் பரந்தூர் மற்றும் மாமண்டூர்- செய்யூருக்கு இடையே உள்ள இடம் இதற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிக தூரம் அமைந்து விடக்கூடாது என்பதில் அக்கறை கொள்ளும் மாநில அரசு ஏற்கனவே தாம்பரம் மற்றும் அரக்கோணம் பகுதிகளில் பாதுகாப்பு படைக்கான விமானதளம் உள்ளது. அதனை மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாமா என்று மத்திய அரசிடம் ஆலோசனையில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது.
இரண்டு விமானங்கள் அருகருகே அமைவதால் ஏர் ட்ராபிக்கை எளிதில் சீர் செய்து கொள்ளலாம். மும்பை மற்றும் நவி மும்பை விமான நிலையத்திற்கும் இடையே வெறும் 45கி.மீ தொலைவே உள்ளது. இந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை புது டெல்லியில் ஏ.ஏ.ஐ. கமிட்டி உறுப்பினர்கள் விரைவில் சமர்பிப்பார்கள். இந்த விமான நிலையத்திற்காக 1500 முதல் 2000 ஏக்கர் வரையிலான நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது