மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது கோவை சிறுவர்கள் கொலைவழக்கில்
கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த சிறுமி முஸ்கான்(11), சிறுவன் ரித்திக்(8) ஆகியோர், வாடகைக் கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன. போலீஸ் விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மோகன்ராஜூம், அவரது நண்பர் மனோகரும் கைது செய்யப்பட்டனர். இதில், போலீசாரிடம் இருந்து தப்பியோடியபோது, மோகன்ராஜ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க மனோகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஏற்கனவே உறுதி செய்திருந்த தீர்ப்பில் எந்த திருத்தமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் மனோகரனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். மனோகரனுக்கு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது.