14 மாநில தலைநகரங்களின் குடி தண்ணீர் குடிக்கவே தகுதியற்றது – மத்திய அமைச்சர்
14 மாநில தலைநகரங்களின் குடி தண்ணீர் குடிக்கவே தகுதியற்றது – மத்திய அமைச்சர். இந்தியாவில், 14 மாநிலங்களின் தலைநகரங்களில் கிடைக்கும் தண்ணீர் குடிக்க தகுதியற்றது என, மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் 21 நகரங்களில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகளை பரிசோதித்ததில், சென்னை, டெல்லி, பெங்களூரு உட்பட 14 மாநில தலைநகரங்களில் கிடைக்கும் குடிநீர் குடிக்கவே தகுதியற்றது என, முடிவுகள் தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
மும்பை மாநகராட்சியில் கிடைக்கும் தண்ணீர் பாதுகாப்பானதாக இருப்பதாகவும், டெல்லியில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் மாசடைந்து நீரின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.