நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட தெற்காசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியில் இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், பூடான், மாலத்தீவு உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன. நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியா – வங்கதேசம் மோதியது. இதில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணிக்கு ஏஐஎப்எப் தலைவர் பிரபுல் பட்டேல், பொதுச் செயலாளர் குஷால் தாஸ், தலைமை பயிற்சியாளர் பின்டோ பாராட்டு தெரிவித்துள்ளனர்.Read More
Tags :ஹர்ஷிதா கெளதம்
இந்தியா உலகிற்கு அமைதிக்கான செய்தியை தான் வழங்கியது. யுத்தத்திற்கான செய்தியை வழங்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் பெரிய ஜனநாயக நாடு, எனக்கு ஆதரவாகவும், எனது அரசிற்கு ஆதரவாகவும் ஒட்டு அளித்தது. 2019 தேர்தலில், மக்கள் மகத்தான தீர்ப்பு அளித்தனர்.. இங்கு பேசுவது பெருமை அளிக்கிறது. 130 கோடி இந்தியர்கள் சார்பாக பேசுகிறேன். மஹாத்மாவின் கொள்கைகள் இன்றும் சரியாக […]Read More
வரும் 27 முதல், 29ம் தேதி வரை நடைபெற உள்ள கணினி வழியிலான முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வை 1.84 லட்சம் பேர் எழுத உள்ளனர் – ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா.154 மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது, அனைத்து மையங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு இருக்கும் – ஆசிரியர் தேர்வு வாரியம். தேர்வறையில் பெல்ட், நகைகள், ஹை ஹீல்ஸ் காலணிகள், கைக்கடிகாரங்களுக்கு அனுமதியில்லை – ஆசிரியர் தேர்வு வாரியம்.Read More
டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் டெல்லி: டெல்லியில் ஆயுதக் கடத்தலில் ஈடுப்பட்டு வந்த இர்ஷத்கான் என்பவரிடம் இருந்து 40 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இர்ஷத்கானிடமிருந்து துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Read More