முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் லாசுப்பேட்டை கிளை சார்பில் தமிழ் புத்தாண்டு அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சிறப்பு கூட்டம் 14. 4.26 அன்று மாலை விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார மையத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு தோழர் க ராதாகிருஷ்ணன் (செயல் தலைவர் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம்) தலைமை தாங்கினார். செயலர் புதுச்சேரி லெனின் பாரதி வரவேற்புரை நிகழ்த்தினார்.



“தமிழ் மகளே வருக” எனும் தலைப்பில் கவிஞர் மாலதி இராமலிங்கம் அவர்களும், கவிஞர் ச.அன்பழகன் அவர்களும் கவிதை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து “மார்க்சிய ஒளியில் அம்பேத்கர்” எனும் தலைப்பில் தோழர் ஜே கிருஷ்ணமூர்த்தி (பொறுப்பாளர்- பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்) அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். நன்றி உரையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

