புதுவைப் பரணி இலக்கிய இதழ் சார்பில் நடத்தப்பட்ட “ராஜகோபாலன் சரஸ்வதி நினைவு இலக்கியப் போட்டி 2025”

புதுவை பரணி இலக்கிய இதழ் சார்பில் நடத்தப்பட்ட “ராஜகோபாலன் சரஸ்வதி நினைவு இலக்கியப் போட்டி 2025” இல் பங்கேற்று வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு பரிசளிப்பு விழா இன்று புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு வந்திருந்தோரை புதுமைப் பரணி ஆசிரியர் லெனின்பாரதி வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து தோழர் கே முருகன்சிஐடியு, தோழர் பி முனுசாமி (பொதுச் செயலர், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம்), தோழர் சு. ராமச்சந்திரன் (செயற்குழு உறுப்பினர் த.மு.எ.க.ச) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.. அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார் திரு குறிஞ்சி வேலன் (எழுத்தாளர்- மொழிபெயர்ப்பாளர் – ஆசிரியர் திசையெட்டும் காலாண்டிதழ், குறிஞ்சிப்பாடி). போட்டிக்கு வந்த நூல்களை ஆழ்ந்து படித்து சிறந்த நூல்களை தேர்வு செய்த நடுவர்களை கௌரவித்து உரையாற்றினார் கவிஞர் பால்கி (மாநில குழு உறுப்பினர்  (தமுஎகச -கடலூர்) .

அதனைத் தொடர்ந்து பரிசு பெற்ற நூல்களை வழங்கிய படைப்பாளிகளான திரு பாரதிவாணர் சிவா – புதுச்சேரி, திரு பல்லவி குமார் – விருத்தாசலம், திரு பூபதி பெரியசாமி – புதுச்சேரி, திரு ஹரணி – தஞ்சாவூர், திரு அன்பாதவன் – விழுப்புரம், கே சி ஜெயலட்சுமி புதுச்சேரி அவர்களுக்கு சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிறப்பான நூல்களை தேர்வு செய்த நடுவர்கள் பாவலர் உசேன், பாவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . அதனைத் தொடர்ந்து விழாவிற்கு வந்திருந்தோர்க்கு நன்றி கூறி நிகழ்வு நிறைவு கண்டது.

நெஞ்சார்ந்த வணக்கங்களுடன்,

கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!