திருச்சி M.A.M School of Engineering, மற்றும் A. M. Polytechnic College மாணவர்கள் பங்கேற்க,Executive Chairman திரு. பீர் முகமது தலைமையில் 21.1.26 அன்று நடைபெற்றது.
முனைவர் திருமதி. லில்லி பிளாரன்ஸ் வரவேற்புரை வழங்கினார்.
உரத்தசிந்தனை அமைப்பின் தலைவர் திருமதி. பத்மினி பட்டாபிராமன் வழங்கிய அறிமுக உரையைத் தொடர்ந்து, மாணவ மாணவிகளின் பாடல் மற்றும் பேச்சரங்கம் நடைபெற்றது.
மாணவர்களின் பேச்சிலிருந்து கேள்வி கேட்கப்பட்டு, சரியான பதில் சொன்ன மாணவர்களுக்கு, பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய திருக்குறள் விளக்க உரைப் புத்தகம் பரிசு அளிக்கப் பட்டது.

M.A.M பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் N. பன்னீர்செல்வம் ,
Controller of Examinations முனைவர் பாண்டியன், ஆகியோரின் வாழ்த்துரையைத் தொடர்ந்து,சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரைப்பட இயக்குனர் திரு. ராசி அழகப்பன் அவர்கள் மாணவர்களுக்கு பரிசு, பாரதியார் பாடல்கள் நூல், சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
திருச்சி உரத்த சிந்தனைக் கிளைச் செயலாளர் திரு. அப்துல் சலாம் நன்றியுரை வழங்கினார்.
உரத்த சிந்தனை பொதுச் செயலாளர் உதயம்ராம் விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
நிகழ்ச்சியில், பேராசிரியர் தி. பட்டாபிராமன், பொதுச் செயலாளர் உதயம் ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்
படங்கள் : ராம் – ராஜாராம்
செய்தி தொகுப்பு – பத்மினி பட்டாபிராமன்
காணொலிப்பதிவு – மு .மனோன்மணி
