வரலாற்றில் இன்று (நவம்பர் 04)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

நவம்பர் 4 (November 4) கிரிகோரியன் ஆண்டின் 308 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 309 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 57 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1333 – ஆர்னோ ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் பரவியதில் இத்தாலியின் புளோரென்ஸ் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1576 – ஸ்பானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரிதும் சேதப்படுத்தப்பட்டது.
1861 – வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
1914 – பிரித்தானியாவும் பிரான்சும் துருக்கியுடன் போரை அறிவித்தன.
1918 – முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆஸ்திரியா-ஹங்கேரி அரசு சரணடைந்தது.
1918 – 40,000 கடற்படையினர் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றியதை அடுத்து ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது.
1921 – ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1956 – அக்டோபர் 23 இல் ஆரம்பமான ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
1966 – இத்தாலியின் புளோரென்ஸ் நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளப் பெருக்கில் அழிந்தது. 113 பேர் கொல்லப்பட்டனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன.
1967 – எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
1979 – ஈரானியத் தீவிரவாதிகள் டெஹ்ரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
1984 – நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.
1995 – இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இஸ்ரேலியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2004 – ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரெஞ்சுப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1650 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் (இ. 1702)

1845 – வாசுதேவ் பல்வந்த் பட்கே, இந்தியப் புரட்சியாளர் (இ. 1883)

1884 – ஜம்னாலால் பஜாஜ், இந்தியத் தொழிலதிபர் (இ. 1942)

1897 – ஜானகி அம்மாள், இந்தியத் தாவரவியலாளர் (இ. 1984)

1906 – ழான் ஃபில்லியொசா, பிரான்சியத் தமிழறிஞர் (இ. 1982)

1915 – வீ கிம் வீ, சிங்கப்பூரின் 4வது குடியரசுத் தலைவர் (இ. 2005)

1929 – சகுந்தலா தேவி, இந்தியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 2013)

1933 – சார்லசு காவோ, நோபல் பரிசு பெற்ற சீன இயற்பியலாளர்

1947 – ரோட் மார்ஷ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2022)

1957 – டோனி அபோட், ஆத்திரேலியாவின் 28வது பிரதமர்

1969 – மேத்திவ் மெக்கானாகே, அமெரிக்க நடிகை

1972 – தபூ, இந்திய நடிகை

1983 – அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ், உருசிய வானியற்பியலாளர் (இ. 2014)

1991 – வித்யுலேகா ராமன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1918 – வில்ஃபிரட் ஓவன், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1893)

1920 – உலூத்விக் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (பி. 1858)

1981 – திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1926)

1985 – தி. க. இராமானுசக் கவிராயர், தமிழறிஞர், புலவர் (பி. 1905)

1988 – கி. வா. ஜகந்நாதன், தமிழக இதழாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் (பி. 1906)

1988 – ஜேம்ஸ் இரத்தினம், ஈழத்து எழுத்தாளர். (பி. 1905)

1991 – மொகிதீன் பேக், இலங்கை திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1919)

1994 – கு. மா. பாலசுப்பிரமணியம், திரைப்பட பாடலாசிரியர் (பி. 1920)

1995 – இட்சாக் ரபீன், இசுரேலின் 5வது பிரதமர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)

1998 – மரியோன் தொனோவன், அமெரிக்கப் புதுமைப்புனைவாளர், தொழிலதிபர் (பி. 1917)

1999 – அப்துல் சமது, தமிழக அரசியல்வாதி (பி. 1926)

2008 – மைக்கேல் கிரைட்டன், அமெரிக்க மருத்துவர், இயக்குநர் (பி. 1942)

2012 – ஜேக்கப் சகாயகுமார் அருணி, தமிழக சமையல் கலை நிபுணர் (பி. 1974)

2022 – க. நெடுஞ்செழியன், தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1944)

சிறப்பு நாள்

பனாமா – கொடி நாள்
ரஷ்யா – மக்கள் ஒற்றுமை நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!