சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் திருவிவிலியத்தை எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாக லத்தினுக்கு மொழி பெயர்த்த புனித ஜெரோமின் என்பவரின் நினைவு நாளான இன்று செப்டம்பர் 30ம் நாள் சர்வதேச மொழிபெயர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.குரோசியாவில் பிறந்த ஜெரோமின் மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார். கிறிஸ்துவ குருவும், இறையியல்லாளர், வரலாற்று ஆசிரியராக இருந்தவர்.இவர் ரோமில் படித்த பின்னர் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல்வேறு நாடுகளுக்கு சென்றார். இதன் காரணமாக செம்மொழிகளான கிரேக்கம், லத்தின், எபிரேயம் ஆகிய மொழிகளில் மேதையானார். இவர் எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளில் இருந்து கிறிஸ்துவர்களின் புனித நூலான திருவிவிலியத்தை லத்தின் மொழியில் மொழி பெயர்த்தார். இதன் மூலம் இவர் உலகிற்கு பெரிதும் அறியப்பட்டார்.இவரின் மொழிபெயர்ப்பை ட்ரென்ட் பொதுச்சங்கம் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு என அறிவித்தது. இவரை சிறப்பிக்கும் விதமாக 1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ‘பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்’ இவரின் நினைவுதினத்தில் சர்வதேச மொழிபெயர்ப்பாளர்களர்களின் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் விக்கிப்பீடியாவுக்கு பர்த் டே விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் ஜனவரி 21, 2001ம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது. அனைத்து மனித அறிவும் இலவசமாக, மொழிகளைக் கடந்து எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கம். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, நடுநிலைமையை வலியுறுத்துவது. இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாக சேர்த்து 1 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 2.7 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. எண்ணற்ற தகவல்களை அள்ளித் தரும் விக்கிபீடியா தமிழ் 2003 ஆம் ஆண்டு இதே நாளில்தான் தொடங்கப் பட்டது. தமிழ் விக்கிப்பீடியாவின் 60000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன. பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்க முடியும்.
தாமஸ் ஆல்வா எடிசனின் ‘வல்கன் தெரு தொழிற்சாலை‘ என்ற நீர்மின் உற்பத்தி நிலையம் செயல்படத்துவங்கிய நாள் இதுதான் உலகின் முதல் நீர்மின் உற்பத்தி நிலையமாகக் கொள்ளப்படுகிறது. இதற்கு முன்னரே, 1878ல் இங்கிலாந்தின் நார்தம்பர்லேண்ட் என்ற இடத்தில் வில்லியம் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவர் ஒரு நீர்மின் உற்பத்தி அமைப்பை உருவாக்கினார். இது, ஒரே ஒரு ஆர்க் விளக்கு ஒளிர்வதற்கான மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்தது. 1881ல் நயாகரா அருவியின் அமெரிக்கப் பக்கத்தில் ‘ஷோகாப் மின் உற்பத்தி நிலையம் எண்-1’ என்பது அமைக்கப்பட்டு அதுவும் மிகக் குறைந்த மின்சாரத்தையே உற்பத்தி செய்தது. 12.5 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்த எடிசனின் நிறுவனமே ஒரு தொழில்முறை மின்னுற்பத்தி நிலையமாக முதலில் செயல்பட்டது. 1770லேயே, பெர்னார்ட் ஃபாரஸ்ட் டி பெலிடார் என்னும் ஃப்ரெஞ்சுப் பொறியாளர், நீரோட்டத்தின் சக்தியை (மின்சாரமாக மாற்றாமல்) பயன்படுத்தி எந்திரங்களைச் சுழலச் செய்வதுகுறித்த ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டார். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் 19ம் நூற்றாண்டில் இவையிரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன. நீர்மின்னுற்பத்தி ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகும். நிலக்கரி, எரிவாயு ஆகியவை பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்யும்போது அவை செலவாவதுபோல, இதற்கு நீர் செலவாவதில்லை. உற்பத்திச் செலவும் பெரும்பாலான மற்ற உற்பத்தி முறைகளைவிட மிகவும் குறைவு. சுற்றுச் சூழல் மாசுபாடுகளையும் ஏற்படுத்துவதில்லை. உலகின் மொத்த மின் உற்பத்தியில் இன்று 26.4 சதவீதம் நீர்மின்சாரமாகும். இது இன்னும் 25 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 3.1 சதவீதம் வளரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவீதம் நீர் மின்சாரமே! மின்சார உற்பத்தியில் மிகப்பெரிய முன்னேற்றம் நீர்மின் உற்பத்தி துவங்கியபிறகுதான் வந்தது என்பது மட்டுமின்றி, 20ம் நூற்றாண்டின் மிகப்பெரும்பகுதிவரை மின்னுற்பத்தியில் நீர்மின்சாரமே பெரும்பங்கு வகித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 36வது பிறந்தநாள் திருவண்ணாமலை மாவட்டம் உருவான வரலாறு; தமிழகத்தில் ஆற்காட்டில் அவுரங்கசீப் கர்நாடகப் பகுதியில் வரிவசூல் செய்ய அனுப்பப்பட்டவர் அலி என்பவர் இவரே முதல் ஆர்க்காட்டு நவாப் ஆகும் இவருக்குப் பிறகு தோஸ்த் அலி கான், முகம்மது அலி கான், வாலாஜா ஆகியோர் ஆற்காட்டை ஆண்டுவந்த சிற்றரசர்கள் ஆகும். அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி பல்வேறு சட்டங்களால் முகலாய ஆட்சி அமைப்பு முறையில் இருந்து ஆங்கில நிர்வாக ஆட்சி அமைப்பு களாக மாற்றிக் கொண்டு வந்தனர். 1744 ஆம் ஆண்டு பிட்டிஷ் இந்திய சட்டம் சென்னை மாகாணத்தில் கவர்னர் தலைமையிலான ஆட்சி முறையை ஏற்படுத்தியது.தொடர்ந்து இப்பகுதியில் நிர்வாக நடவடிக்கைகள், ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தப்பட்டன. கர்நாடகா, மைசூர் போரில் ஆங்கிலேயர்களே வெற்றி பெற்றனர். 1760 அம் ஆண்டு வந்தவாசி போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றவுடன் பிரஞ்சு ஆதிக்கம் பாண்டிச்சேரியுடன் அடங்கியது. அதனைத் தொடர்ந்து நான்காம் ஆண்டு போரின் இறுதியில் 1799 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் திப்பு சுல்தானை போரில் கொன்றனர். அத்துடன் கர்நாடகப் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. ஆற்காடு நவாப் தனது தவறான நிர்வாகத் திறனால் ஆட்சிப் பகுதிகளை படிப்படியாக ஆங்கிலேயர்களிடம் இறந்துவிட்டார்கள். 1801ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பின், ஆட்சி முழுமையாக ஆங்கிலேயர்களுக்கு சென்றது ஆங்கிலேயர் கைப்பற்றிய பகுதிகளை வட்டமாக, கோட்டமாக, மாவட்டமாக பிரித்து ஆளத் தொடங்கினர். அதன்படி உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம் உருவாகின, அதன் பின்னர் மற்ற மாவட்டங்கள் உருவாகினர், அப்போது 1801ஆம் ஆண்டு பாலாற்றுக்கு தென்பகுதியிலுள்ள வட்டங்களை சேர்த்து தென் ஆற்காடு மாவட்டம் என்று பாலாற்று வடபகுதியில் வட்டங்களை சேர்த்து வட ஆர்க்காடு வட்டங்கள் என்று பிரித்தனர். அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தில் ஆரணி போளூர் திருவண்ணாமலை சேத்துப்பட்டு வந்தவாசி உள்ளிட்ட இரு வட்டங்கள் இருந்தன மீண்டும் மாவட்ட எல்லையில் சீரமைக்கப்பட்டு ஆரணி போளூர் வந்தவாசி வேலூர் ஆற்காடு வட ஆற்காடு மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன 1801 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஸ்ரேட்டன் என்பவரே முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆவார். 1911 ஆம் ஆண்டு மாவட்ட எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது அதன்படி தென்னார்க்காடு மாவட்டத்தில் இருந்த திருவண்ணாமலை வட ஆற்காடு மாவட்டத்தில் மாற்றப்பட்டது வட ஆற்காடு மாவட்டத்தில் மூன்று வருவாய் கோட்டங்கள் இருந்தன அவை வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலையாகும் 1959 ஆம் ஆண்டு செய்யாறு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1989 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக வட ஆற்காடு மாவட்டத்தில் இரண்டாக பிரித்து திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் மேலூரை தலைமையிடமாக கொண்டு வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் வருவாயென 1997ஆம் ஆண்டு தமிழகம் முழுதும் பல்வேறு பெயர்களில் இருந்த மாவட்டத்தின் பெயரில் ஊரின் பெயரைக் கொண்டு மாற்றம் செய்யப்பட்டது அதன்படி திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் தலைமை மாவட்டம் என ஆனது. அதன்பிறகு திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, செங்கம் வட்டத்தில் இருந்து ,தண்டராம்பட்டு வட்டம் 2007ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. அதன்பிறகு 2015இல் போளூர் வட்டத்தில் இருந்து கலசபாக்கம் தனியாக பிரிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஆரணி வந்தவாசி வட்டங்களில் உள்ள கிராமங்களை ஒன்றிணைந்து சேத்துப்பட்டு வட்டம் உருவானது. ஏற்கனவே 1860 ஆம் ஆண்டு சேத்துப்பட்டு வட்டத் தலைநகர் என்ற சிறப்பை இறந்தது ,அது மீண்டும் அதே வருடம் செய்யாறு வட்டத்தில் உள்ள வெம்பாக்கம் ஒன்றிய பகுதியை பிரித்து வெட்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் பிரிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு திருவண்ணாமலை இரண்டாக பிரித்து கீழ்பெண்ணாத்தூர் தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு செங்கம், போளூர், கலசபக்கம் ஆகிய வட்டங்களில் உள்ள மலை கிராமங்களை உள்ளடக்கிய ஜமுனமரத்தூர் ஊரை தலைமையிடமாக கொண்டு சட்டத்தை உருவாக்கியது. மேலும் திருவண்ணாமலை செய்யாறு வருவாய் கோட்டங்கள் பிரித்து ஜமுனமரத்தூர் ஆரணி போளூர் கலசபாக்கம் வட்டங்களை உள்ளடக்கி தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டு தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வருவாய் வட்டங்களும் 3 வருவாய் கோட்டங்கள் உடன் செயல்பட்டு வருகின்றது.
’சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா..’, ’மாம்பூவே சிறுமைனாவே’, ‘பூஞ்சிட்டுக் குருவிகளா’, ’ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே’, ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’ – இசையமைப்பாளர் சந்திரபோஸ் 15ம் வருஷ நினைவுதினம். ஆரம்பத்தில் அவரின் குரல்தான் பரிச்சயமாச்சு. அந்தப் பாடலைப் பாடியவர் யாரென்றாலும் கூட பலருக்கும் தெரியாது. எம்.எஸ்.வி. இசையமைச்ச அந்தப் படத்தின் இந்தப் பாடலும் எம்.எஸ்.வி. பாடுவது போலவே இருந்தது. ஆனாலும் குரல் மட்டும் வேறுமாதிரி. பிறகு அவர் இசையமைப்பாளராக இண்ட்ரஸ்ட்யூஸ் ஆனார். குரல் வழியே நம்மை அவர் வந்தடைந்தது… ‘ஆறு புஷ்பங்கள்’ படத்தில். அந்தப் பாடல்… ‘ஏண்டி முத்தம்மா… எது புன்னகை’ என்ற பாடல். பிறகு மியூசிக் டைரக்டரானதும் நம் உள்ளம் தொட்ட பாடல்… ‘மாம்பூவே சிறு மைனாவே’ பாடல். அந்தக் குரலுக்கும் இந்த இசைக்கும் சொந்தமானவர்… சந்திரபோஸ்.76ம் ஆண்டு இளையராஜா ‘அன்னக்கிளி’யில் அறிமுகமாகி தன் கொடியை நாட்டிய பிறகு 40க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் வந்ததாகச் சொல்லுவாய்ங்க. அப்படி வந்தவய்ங்களில், குறிப்பிடத் தகுந்த இசையை வழங்கியவர்களில், சந்திரபோஸுக்கு தனியிடம் உண்டு. சுமார் 300 படங்களுக்கு மேல் இசை அமைச்சவர் சந்திரபோஸ் ஆர்எஸ் மனோகரின் நாடகங்களுக்கு ஆரம்ப காலங்களில் இசை அமைச்சார். தேவாவுடன் இணைஞ்சு சில படங்களுக்கு இசை அமைச்சார்.1977 ல் வெளியான மதுர கீதம் படம் இவர் இசை அமைச்ச முதல் படமாகும்.1980 முதல் 1990 வரை மிக அதிகமான படங்களுக்கு இசை அமைச்சார் சந்திரபோஸ். இவரின் இசையில் சிறிது மேடை நாடக தன்மை உள்ளது என குறை சொன்னவர்கள் சிலர் இருக்கிறாய்ங்க.நாடக பின்புலத்தில் இருந்து வந்தது ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும் பல ஜனரஞ்சகமான பாடல்களை கம்போஸ் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்து விடுட்டார் போஸ். காதல், கொண்டாட்டம், சோகம் என பல உணர்வுகளை சிறப்பாக இசையில் சொன்னவர். ஆனாலும் எண்பதுகளின் மத்தியில்தான் சந்திரபோஸ் இசை வாழ்வில் ஏற்றம் வந்துச்சு. கே.பாலாஜி தயாரிச்ச ‘விடுதலை’ படத்தில் சிவாஜி, ரஜினி, விஷ்ணுவர்த்தன் முதலானோர் நடிச்சிருந்த இந்தப் படத்துக்கு சந்திரபோஸ் இசையமைத்தார். ‘நீலக்குயில்கள் ரெண்டு’ உள்ளிட்ட பாடல்கள் ஹிட் ஆச்சு. இந்தசமயத்தில்தான் ஏவி.எம். படத்தின் வாய்ப்பு சந்திரபோஸுக்குக் கிடைச்சுது. இடையிலே ’சரணம் ஐயப்பா’ படத்தில் ‘பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டுபோனால் ஐயனை நீ காணலாம்’ பாடல் ஐயப்ப பக்தர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுச்சு . அதேபோல், ‘அண்ணா வாடா ஏய் தம்பி வாடா’ என்ற பாடலும் ஹிட்டடித்தது. இந்தப் பாடலை பாடியவர்… கமல்ஹாசன். ஏவி.எம் தயாரிச்ச ரஜினியின் ‘மனிதன்’ திரைப்படமும் அர்ஜுன் நடித்த ‘சங்கர் குரு’ படமும் வெற்றிபெற்றுச்சு. இரண்டு படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட். சத்யராஜின் ‘அண்ணாநகர் முதல்தெரு’ படத்தின் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’ என்ற மெலடியைக் கொடுத்து இசை ரசிகர்களை முணுமுணுக்க வைச்சார். ஏவி.எம்மின் ‘வசந்தி’, ‘பாட்டி சொல்லைத்தட்டாதே’, ‘தாய்மேல் ஆணை’, ‘மாநகர காவல்’ என்று பிரமாண்டமான படங்களுக்கு இசையமைத்து பாடல்களையும் முணுமுணுக்கச் செஞ்சார். ஒரு தொட்டில் சபதம்’ படத்தின் ‘பூஞ்சிட்டுக்குருவிகளா’ பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுச்சு. ’ஏண்டி முத்தம்ம்மா’ போலவே இவர் பாடிய இந்தப் பாடலும் ஹிட்டாச்சு. ‘வசந்தி’ படத்தின் ‘ரவிவர்மன் எழுதாத கலையோ’ பாடலும் ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தின் பூ பூப்போல் சிரிப்பிருக்கு’ பாடலும் ‘சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக்குழந்தையும் சொல்லும்’ பாடலும் ‘மனிதன்’ படத்தின் ‘வானத்தைப் பாத்தேன் பூமியைப் பாத்தேன்’, ‘காளை காளை முரட்டுக்காளை’ என்று எத்தனையோ பாடல்களைக் கொடுத்திருக்கார். பின்னர், சீரியல்களுக்கு இசையமைத்தார். நடிகர் அவதாரமும் எடுத்தார். பல சீரியல்களிலும் நடித்தார் சந்திரபோஸ். இப்பேர்பட்ட சந்திரபோஸ் போன 2010ம் வருஷம், செப்டம்பர் 30ம் தேதி காலமானார். அவரின் பதினான்காம் ஆண்டு நினைவுதினத்தில் ஆந்தை சினிமா அப்டேஸ் அவருக்கு நினைவஞ்சலி செலுத்த கடமைப்பட்டுள்ளது.
சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று. இவர் அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் நிலநடுக்கவியலாளர். நிலநடுக்கத்தை உணர்வதற்கு உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ரிக்டர் அளவீடு என்ற அலகினைக் கண்டறிந்தவர். பைனோ கூட்டன்பர்க் என்பவரின் உதவியுடன் சார்லஸ் ரிக்டர் கண்டறிந்த இந்த அலகு நிலநடுக்க விளைவுகளைக மடிமை அளவீட்டால் (logarithm) கணக்கிட பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 1941-ல் இவர் கூட்டன்பர்க்குடன் இணைந்து ‘புவியின் நிலநடுக்கம்’ என்ற நூலை எழுதி வெளியிட்டனர். 1954-ல் இந்நூல் மீண்டும் பதிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1958-ல் ‘அடிப்படை நிலநடுக்கவியல்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். இளநிலைப் பட்டப்படிப்புக்கு முற்பட்ட பாடங்களுக்குரிய ஆசிரியர்களுக்குத் தேவையான குறிப்புகளைக் கொண்டதாக இந்நூல் அமைந்தது.
தமிழ் கடல் என்றழைக்கப்பட்ட இராய.சொக்கலிங்கன் நினைவு நாள் கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என இலக்கியத்தின் பல களங்களில் செயல்பட்டவர் இ ராய. சொக்கலிங்கன்.. ஊழியன்’ இதழின் ஆசிரியர். காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். சமூக சேவகர். ராய. சொக்கலிங்கன் கம்ப ராமாயணத்திலும் வில்லி பாரதத்திலும் பல ஆயிரம் பாடல்களை மனப்பாடமாகச் சொல்லக் கூடிய ஆற்றல் பெற்றிருந்தார். கம்பன் கழக மேடைகளிலும், பட்டி மன்றங்களிலும் சொற்பொழிவாற்றி இருக்கிறார். கம்பனைப் பற்றி ஆராய்ந்து கம்ப ராமாயணத்தில் எங்கெல்லாம் சிவன் பற்றிய பாடல்கள், வர்ணனைகள் இடம்பெற்றுள்ளன என்பதைக் குறித்து ஆராய்ந்து ராய. சொக்கலிங்கன் எழுதிய நூல், ’கம்பனும் சிவனும்’. அதுபோல வில்லிபாரத்தை ஆராய்ந்து எழுதப்பட்ட நூல், ‘வில்லியும் சிவனும்’. பல சைவ சித்தாந்த மாநாடுகளிலும் சொற்பொழிவுகளிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருக்கிறார். ’அமுதும் தேனும்’ என்ற நூலில் திருவாசகத்தில் எங்கெங்கெல்லாம் ‘அமுது’ வருகிறது, ’தேன்’ வருகிறது என்றெல்லாம் ஆராய்ந்து, அந்தப் பாடல்களின் சிறப்பை உரையோடு எழுதியிருக்கிறார். ராய.சொக்கலிங்கன், அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் ஆராய்ச்சித்துறை கெளரவத்தலைவராகப் பொறுப்பேற்றபோது, தாம் சேகரித்த அனைத்து நூல்களையும் பல்கலைக்கழகத்துக்கே வழங்கிவிட்டார். இராய.சொக்கலிங்கத்தின் படைப்புகள் தமிழக அரசால் 2009-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
கவிப் பேராசான் ரூமி பிறந்த நாளின்று 1207 ஆம் ஆண்டு முதல் 1273 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ரூமி என்கின்ற மௌலானா ஜலாலுதீன் ரூமி பதிமூன்றாம் நூற்றாண்டு பாரசீக கவிஞர் ஆவார். மிகவும் பிரபலமான கவிஞர் மட்டுமின்றி விற்பனையிலும் சிறந்து விளங்கிய படைப்புகளைக் கொடுத்தவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் பாரசீக மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இருப்பினும் சில சமயங்களில் இவர் துருக்கி, அரபு மற்றும் கிரேக்க மொழிகளையும் பயன்படுத்தியுள்ளார். இவருடைய கவிதைகள் உலகின் பல மொழிகளிலும் பரவலாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டும், பல்வேறு வடிவங்களில் மாற்றம் பெற்றும் சிறப்படைந்துள்ளன. துருக்கி, அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் இவரது படைப்புகள் மிகவும் பிரபலம். # அழகு நம்மைச்சுற்றியே உள்ளது, ஆனால் நாம் வழக்கமாக ஒரு பூங்காவில் நடந்தே அழகைத் தெரிந்துகொள்கிறோம். # துயரப்பட வேண்டாம். நீங்கள் இழக்கும் எதுவாயினும் மற்றொரு வடிவத்தில் உங்களிடமே திரும்பவும் வரும். # ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வேலைக்காகவே படைக்கப்பட்டுள்ளனர், அந்த வேலைக்கான ஆசை ஒவ்வொரு இதயத்திலும் வைக்கப்பட்டுள்ளது. # நாம் அனைவரும் அன்பாலேயே பிறந்துள்ளோம்; அன்பு நமது தாய். # நமக்குள் கண்ணுக்குத் தெரியாத வலிமை ஒன்று உள்ளது. # மிகவும் சிறியதாக செயல்படுவதை நிறுத்திவிடுங்கள். # நீங்கள் இறகுகளுடனே பிறந்துள்ளீர்கள், ஏன் வாழ்க்கையில் தவழ்ந்து செல்ல விரும்புகிறீர்கள்? # உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள், குரலை அல்ல. # உங்களை அச்சப்படுத்துபவர்களையும் துன்பப்படுத்துபவர்களையும் புறக்கணியுங்கள். # பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உங்களுக்குள்ளே உள்ளது. அனைத்தையும் உங்களிடமே கேளுங்கள். # துன்பம் என்பது ஒரு பரிசு. அதில் மறைக்கப்பட்ட கருணை உள்ளது. # நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் எதைச்செய்தாலும் அன்புடன் இருங்கள். # அன்பின் வெளிப்பாட்டில் காரணம் என்பது சக்தியற்றது. # வலிக்கான சிகிச்சை வலியிலேயே உள்ளது. # நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் அன்பு செலுத்தும் வழியே கடவுள் உங்களுடன் இருக்கப்போகும் வழி. # தாகம் மட்டும் தண்ணீரைத் தேடுவதில்லை, தண்ணீரும் தாகத்தை தேடுகிறது.
