விஜயின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு ஒன்றை அளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய், 13-ந்தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். இதற்கான அனுமதி கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். ஆனால், விஜயின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து விஜயின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் விஜயின் சுற்றுப்பயண விபரம் வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
| வ.எண் | தேதி | கிழமை | மாவட்டம் |
| 1 | 13-09-2025 | சனிக்கிழமை | திருச்சி, பெரம்பலூர், அரியலூர் |
| 2 | 20-09-2025 | சனிக்கிழமை | நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை |
| 3 | 27-09-2025 | சனிக்கிழமை | திருவள்ளூர், வட சென்னை |
| 4 | 04-10-2025 | சனிக்கிழமை | கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு |
| 5 | 05-10-2025 | ஞாயிற்றுக்கிழமை | கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு |
| 6 | 11-10-2025 | சனிக்கிழமை | குமரி, நெல்லை, தூத்துக்குடி |
| 7 | 18-10-2025 | சனிக்கிழமை | காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை |
| 8 | 25-10-2025 | சனிக்கிழமை | தென் சென்னை, செங்கல்பட்டு |
| 9 | 01-11-2025 | சனிக்கிழமை | கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் |
| 10 | 08-11-2025 | சனிக்கிழமை | திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் |
| 11 | 15-11-2025 | சனிக்கிழமை | தென்காசி, விருதுநகர் |
| 12 | 22-11-2025 | சனிக்கிழமை | கடலுர் |
| 13 | 29-11-2025 | சனிக்கிழமை | சிவகங்கை, ராமநாதபுரம் |
| 14 | 06-12-2025 | சனிக்கிழமை | தஞ்சாவூர், புதுக்கோட்டை |
| 15 | 13-12-2025 | சனிக்கிழமை | சேலம், நாமக்கல், கரூர் |
| 16 | 20-12-2025 | சனிக்கிழமை | திண்டுக்கல், தேனி, மதுரை |
