வரலாற்றில் இன்று (செப்டம்பர் 04)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

செப்டம்பர் 4 (September 4) கிரிகோரியன் ஆண்டின் 247 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 248 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 118 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

476 – கடைசி ரோமப் பேரரசன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் முடிதுறந்தான்.
1666 – லண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.
1781 – லாஸ் ஏஞ்சலஸ் நகரம் ஸ்பானிய ஆளுநரான ஃபிலிப்பே டி நெவெ என்பவரால் அமைக்கப்பட்டது.
1870 – பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பதவியில் இருந்து அகற்றப்பட்டான். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள். மூன்றாவது குடியரசு அமைக்கப்பட்டது.
1884 – குற்றவாளிகளை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சுக்கு அனுப்பும் கொள்கையை பிரித்தானியா கைவிட்டது.
1886 – 30 ஆண்டுகள் போரின் பின்னர் அப்பாச்சி பழங்குடிகளின் தலைவன் ஜெரனிமோ தனது படைகளுடன் அரிசோனாவில் சரணடைந்தான்.
1888 – தான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஜார்ஜ் ஈஸ்ட்மன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாக காப்புரிமை பெற்றுக் கொண்டார்.
1939 – இரண்டாம் உலகப் போர்: நேபாளம் ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஐரோப்பியப் போரில் ஜப்பான் நடுநிலையை அறிவித்தது.
1951 – கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி ஜப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாஅட்டில் இருந்து இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்டது.
1956 – வன்தட்டு நினைவகத்தைக் கொண்ட உலகின் முதலாவது கணினியை ஐபிஎம் அறிமுகப்படுத்தியது.
1963 – சுவிஸ் எயார் விமானம் சுவிட்சர்லாந்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து 80 பேரும் கொல்லப்பட்டனர்.
1970 – சல்வடோர் அலெண்டே சிலி நாட்டின் அதிபரானார்.
1971 – அலாஸ்காவில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 111 பேரும் கொல்லப்பட்டனர்.
1972 – ஐக்கிய அமெரிக்காவின் மார்க் ஸ்பிட்ஸ் ஜெர்மனியின் மியூனிக் நகரில் இடம்பெற்ற 1972 ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சலில் ஏழாவது தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்தார்.
1978 – அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1996 – கொலம்பிய புரட்சி இராணுவப் படையினர் கொலம்பியாவின் இரணுவ முகாமொன்றைத் தாக்கினர். மூன்று வாரங்கள் நீடித்த இக்கரந்தடிப் போரில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – இஸ்ரேலின் டெல் அவீவ் நகரின் பாடசாலை ஒன்றின் அடியில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு புதைகுழிக் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
2007 – சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

பிறப்புகள்

1824 – ஆன்டன் புரூக்னர், ஆஸ்திரிய இசையமைப்பாளர் (இ. 1896)
1825 – தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல்வாதி (இ. 1917)
1902 – தாமஸ் மிட்ச்சல், இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் (இ. 1996)
1910 – டெனிஸ் டொம்லிங்சன், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர் (இ. 1993)
1926 – ஐவன் ஈலிச், ஆஸ்திரிய மெய்பியலாளர் (இ. 2002)
1927 – ஜோன் மெக்கார்த்தி, அமெரிக்கக் கணினியியலாளர் (இ. 2011)
1939 – டெனிஸ் லின்ட்சி, தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர் (இ. 2005)
1941 – சுசில்குமார் சிண்டே, இந்திய அரசியல்வாதி
1950 – இகுத்திசாமுத்தீன், பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர்
1952 – ரிசி கபூர், இந்திய நடிகர்
1955 – கார்த் லே ரூ, தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1961 – ரிஸ்வான் உஸ் சமான், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்
1962 – கிரான் மோரி, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1962 – சின்யா யாமானாக்கா, சப்பானிய மருத்துவர், நோபல் பரிசு பெற்றவர்
1971 – லான்சு குளுசுனர், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1974 – நவீட் அஸ்ரப், பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர்
1981 – பியான்சே நோல்ஸ், அமெரிக்க நடிகை

இறப்புகள்

422 – முதலாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
1907 – எட்வர்டு கிரெய்கு, நார்வேயைச் சேர்ந்த இசையமைப்பாளர் (பி. 1843)
1987 – பில் போவ்ஸ், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1908)
2006, ஸ்டீவ் ஏர்வின், ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலர், (பி 1962)

சிறப்பு நாள்

******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!