ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலக சீனியர் சிட்டிசன் தினம் (World Senior Citizen) தினம் கொண்டாடப்படுகிறது. சமூகத்துக்கு சீனியர் சிட்டிசன்கள் ஆற்றியுள்ள பங்கை போற்றும் வகையில் சீனியர் சிட்டிசன் தினம் கொண்டாடப்படுகிறது. சீனியர் சிட்டிசன்கள் என்பவர்கள் சமூகத்துக்கு பெரும்பங்கு அளித்தவர்கள் மட்டுமல்லாமல், வளமான அனுபவம் பெற்றவர்கள். சீனியர் சிட்டிசன்களை போற்றுவது மட்டுமல்லாமல், அவர்களுக்கான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம். 1988ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் உலக சீனியர் சிட்டிசன் தினத்தை அறிவித்தார். இதுகுறித்து அதிபர் ரொனால்ட் ரீகன் வெளியிட்ட பிரகடனத்தில், அமெரிக்க குடும்பங்களில் சீனியர் சிட்டிசன்கள் அளித்த பங்களிப்பு மற்றும் சாதனைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. உலகளவில் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 2050ஆம் ஆனுக்குள் 150 கோடியை எட்டும் என ஐநா கணித்துள்ளது. எனவே, அதற்குள் சீனியர் சிட்டிசன்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைப்பு தேவை என வலியுறுத்தப்படுகிறது.
வேர்ல்ட் ஃபேமஸ் ஷெனாய் இசை மேதை ‘பாரத ரத்னா’ உஸ்தாத் பிஸ்மில்லா கான் (Ustad Bismillah Khan) நினைவு தினம் இன்று. பிஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் (1916) பிறந்தார். பெற் றோர் வைத்த பெயர் கமருதீன். குழந்தை யைப் பார்க்க வந்த தாத்தா ‘பிஸ்மில்லா’ என்று அழைத்தார். அந்த பெயரே நிலைத்து விட்டது. l இவரது மாமா அலி பக் ஷ், காசி விசுவநாதர் ஆலயத்தில் இசைச் சேவை செய்தவர். 3 வயது குழந்தையாக இருந்தபோதே அதை மெய்மறந்து கேட்டார் பிஸ்மில்லா. பிறகு மாமாவே குருவானார். கங்கைக் கரையோரம் உள்ள பாலாஜி ஆலயத்தில் இவருக்கு ஷெனாய் பயிற்றுவித்தார். l மாமா இறந்த பிறகு தானாகவே பயிற்சி செய்து தும்ரி, சைத்தி, கஜ்ரி, ஸவானி ஆகிய இசை வடிவங்களில் நிபுணத்துவம் பெற்றார். கயால் (Khayal) இசையிலும் வல்லுநர் ஆனார். கொல்கத்தாவில் 1937-ல் நடந்த தேசிய இசை மாநாட்டில் தனது அற்புத இசையால் அனைவரையும் கவர்ந்தார். l 1938-ல் லக்னோ அகில இந்திய வானொலியில் ஷெனாய் இசைத்தார். அதன் பிறகு வானொலியில் அடிக்கடி இவரது இசை உலா வந்தது. அனைத்துக்கும் பாலாஜியின் அருளே காரணம் என்பார். l கல்யாண வீடுகளில் மட்டுமே இசைக்கப்பட்ட ஷெனாய் இசைக் கருவியை சாஸ்திரீய கச்சேரி மேடைக்கு கொண்டுவந்து உலகப்புகழ் பெறவைத்தார். உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் என்று உலகம் முழுவதும் இவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உண்டு. இந்தியாவிலும் இவரது கால்படாத முக்கிய நகரங்களே இல்லை. l கூஞ்ச் உடீ ஷெனாய் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ஷெனாய் வாசித்துள்ளார். ஜல்சாகர் என்ற படத்தில் நடித்துள்ளார். l பனாரஸ், சாந்தி நிகேதன் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. சங்கீத நாடக அகாடமி விருது முதல் பத்மபூஷண் வரை ஏராளமான விருதுகளைப் பெற்றவர். 2001-ல் நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது. l 1947-ல் இந்திய சுதந்திரம் செங்கோட்டையில் இவரது இசையுடன்தான் பிறந்தது. 1950-ல் நாட்டின் முதல் குடியரசு தின விழாவிலும் இவரது இசை இடம்பெற்றது. தேசிய அளவிலான முக்கிய விழாக்கள் எதுவும் இவரது இசை இல்லாமல் நடந்ததில்லை. l கங்கா மாயி (அன்னை கங்கா) என்று கங்கையைப் போற்றியபடி தன் வாழ்நாள் முழுவதும் காசியில் கழித்தவர். எளிமையாக வாழ்ந்தவர். காசி நகர தெருக்களில் சைக்கிள் ரிக் ஷாவில்தான் போய்வருவார். இவரைத் தேடி வருபவர்களுக்கு வீட்டில் எந்நேரத்திலும் உணவு இருக்கும்.
நிழலில்லா நாள் இன்று. நிழலில்லா நாள் (Zero Shadow Day) என்றால் என்ன? தினமும் காலையிலும் மாலையிலும் பொருட்களின் நிழல் மிகவும் நீளமாக இருக்கும். சூரியன் உச்சிக்கு செல்ல செல்ல நிழல் சிறிதாகிக் கொண்டே வரும். சூரியன் மேற்கில் நகர ஆரம்பித்ததும் நிழல் மீண்டும் பெரிதாகிக் கொண்டே வரும். ஒரு இடத்திலுள்ள ஒரு பொருளின் நிழலின் நீளம் ஆண்டிற்கு இருமுறை பூஜ்ஜியமாகின்றது அந்த நாளையே ‘நிழலில்லா நாள்’ என்கிறோம். வருடத்தின் மற்ற நாட்களில் உச்சி வெயில் நேரத்திலும் கூட சிறிதளவு நிழல் பூமி மீது விழத்தான் செய்யும். இந்த வானியல் நிகழ்வு ஆண்டுக்கு 2 நாட்கள் மட்டுமே இருக்கும் (ஏப்ரல் 21 மற்றும் ஆகஸ்ட் 21 ) சூரியனின் வட நகர்வு நாள்களில் ஒரு நாளும், தென் நகர்வு நாள்களில் ஒரு நாளும், என ஆண்டுக்கு இருமுறை இது நிகழும். மேலும் பகல் 12 மணிக்குத்தான் நிழல் பூஜ்ஜியமாகும். வருடத்தில் இரண்டு முறை மட்டுமே நடக்கும் இந்தநிகழ்வு, இதைக்காண எந்த வித அறிவியல் உபகரணம் தேவையில்லை
இதே ஆகஸ்ட் 21, 1778 அன்று பாண்டிச்சேரி ஆங்கிலேயர்களால் முற்றுகையிடப்பட்டது. இது அமெரிக்க விடுதலைப் போரின் (American War of Independence) ஒரு பகுதியாக நடந்த நிகழ்வு என்பது பலருக்கு வியப்பூட்டும் தகவலாக இருக்கலாம். #### *பின்னணி:* அமெரிக்காவில் 1775 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் குடியேற்றங்கள் இங்கிலாந்துக்கு எதிராகப் போரைத் தொடங்கின. இந்த விடுதலைப் போரில், இங்கிலாந்தின் பரம எதிரியான பிரான்ஸ், அமெரிக்கர்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தது. 1778 ஆம் ஆண்டு, பிரான்ஸ் இங்கிலாந்துக்கு எதிராகப் போர் அறிவிப்பு செய்தது. இந்த மோதல், வெறும் அமெரிக்காவுடன் நின்றுவிடாமல், உலகம் முழுவதும் உள்ள இங்கிலாந்து மற்றும் பிரான்சின் காலனி நாடுகளுக்கும் பரவியது. இதுவே *ஆங்கிலோ-பிரெஞ்சுப் போர் (Anglo-French War)* என்று அழைக்கப்படுகிறது. #### *பாண்டிச்சேரி முற்றுகை:*
- *சூழ்ச்சி:* பிரான்ஸ் போரில் நுழைந்தவுடன், இங்கிலாந்து இந்தியாவிலுள்ள பிரெஞ்சு குடியேற்றங்களை உடனடியாகக் கைப்பற்ற உத்தரவிட்டது. பாண்டிச்சேரி மட்டுமே வலுவான பிரெஞ்சு கோட்டையாக இருந்தது. மற்ற பகுதிகள் எளிதாக வீழ்த்தப்பட்டன.
- *போர்:* 1778, ஆகஸ்ட் 21 அன்று, சுமார் 20,000 வீரர்களைக் கொண்ட ஆங்கிலேயப் படை, பாண்டிச்சேரியை முற்றுகையிட்டது. பிரெஞ்சு ஆளுநரிடம் வெறும் 700 பிரெஞ்சு மற்றும் 400 இந்திய வீரர்கள் மட்டுமே இருந்தனர். இந்தப் பெரும் படை பலத்திற்கு முன்னால், பிரெஞ்சுப் படை இரண்டு மாதங்கள் வரை வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தியது.
- *முடிவு:* எனினும், படை பலம் குறைந்த காரணத்தினால், அக்டோபர் 19 அன்று பாண்டிச்சேரி ஆங்கிலேயர்களிடம் வீழ்ந்தது.
— ### *பாரிஸ் அமைதி ஒப்பந்தமும், பாண்டிச்சேரியின் பயணமும்* பாண்டிச்சேரி, வரலாற்றில் பலமுறை கைமாறியுள்ளது. 1. *டச்சு ஆதிக்கம் (1693):* 1693-ல் டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரிஜ்ஸ்விக் ஒப்பந்தப்படி பிரான்சிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. 2. *ஏழாண்டுப் போர் (1761):* 1761-ல் நடந்த ஏழாண்டுப் போரின்போது, ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு, 1763 பாரிஸ் ஒப்பந்தத்தின்படி மீண்டும் பிரான்சிடம் திரும்பியது. 3. *அமெரிக்க விடுதலைப் போர் (1778):* 1778-ல் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு, அமெரிக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த 1783-ன் பாரிஸ் அமைதி ஒப்பந்தத்தின்படி மீண்டும் பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டது. 4. *பிரெஞ்சுப் புரட்சி (1793):* பிரெஞ்சுப் புரட்சியின்போது, 1793-ல் மீண்டும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு, 1814-ல் திரும்பக் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர், இந்தியா சுதந்திரம் அடையும் வரை, அதாவது 1954 ஆம் ஆண்டு வரை, பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த நிகழ்வுகள் அனைத்தும், இந்திய வரலாற்றில் மட்டுமல்லாமல், உலகளாவிய அரசியல் மற்றும் ராணுவ வியூகங்களின் ஒரு பகுதியாகவும் இருந்தன என்பதைப் பார்க்கும்போது, அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெளிவாகிறது.
இத்தாலிய நாட்டு வானியல் அறிஞர் கலிலியோ டெலஸ்கோப் எனப்படும் தொலை நோக்கிக் கருவியைக் கண்டுபிடித்து உலகுக்களித்தார். “நவீன அறிவியலின் தந்தை என்று பெருமையாக அழைக்கப் படுகிறார். வெள்ளி கிரகத்தின் வெவ்வேறு பரிமாணங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களை கண்டுபிடித்தல், மற்றும் கதிரவனில் காணப்படும் கரும்புள்ளியை ஆராய்தல் ஆகியவை கலிலியோ அவரது கண்டு பிடிப்பான தொலைநோக்கி மூலம் வானியல் ஆராய்ச்சியில் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும்.
சுப்பிரமணியன் சந்திரசேகர் காலமான நாள் இவரு ஒரு வானியல்- இயற்பியல் விஞ்ஞானி. பக்கா தமிழரான இவரு ஆங்கியேர் கால இந்தியாவில் இப்போதைய பாகிஸ்தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன்- சீதாலட்சுமி தம்பதிக்கு இதே அக்டோபர் 19ம் தேதி பிறந்தவர். அவர் லாகூரிலும், பிறகு லக்னோவிலும் வாழ்ந்த பின், சென்னை வந்த சேந்தாரு. 11 வயசிலே அவர் நம்ம டிரிப்பிளிகேன் இந்து ஐஸ்கூலில் சேர்ந்தார். அப்பாலே இங்குள்ள மாநிலக்கல்லூரியில் பிசிக்ஸ் படிச்சார். அப்போதான் அவரோட சித்தப்பா சர். சி. வி. ராமனுக்கு நோபல் பரிசு கிடைச்சுது. இந்த சந்திர சேகரோட அம்மா உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஹென்ரிக் இப்சனின் நாடகத்தைத் தமிழாக்கியவர். அந்தம்மாவோட அறிவார்ந்த ஆற்றலும் இளம் சந்திரசேகருக்கு மாபெரும் தூண்டுதலாக இருந்தது. சந்திரசேகர் 19 வயது ஸ்டூடண்டா இருக்கறச்சேயே ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். 1930-ம் ஆண்டு, இந்திய அரசின் பண உதவி பெற்று, மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குப் போனார்.அவர் தனது 19 –வது வயதில் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தையும் குவாண்டம் கோட்பாட்டையும் பயன்படுத்தி ஒரு வானியல் கோட்பாட்டை உருவாக்கினார். விண்வெளியில் உள்ள ஒரு நட்சத்திரத்தின் இறுதிக் காலம் அது எவ்வளவு பொருள்நிறையைக் கொண்டதாக உள்ளது என்பதைப் பொறுத்ததாக அமைகிறது. மிக அதிகமான பொருள்நிறையை கொண்டுள்ள நட்சத்திரங்கள் தங்களின் இறுதிநாளில் நியூட்ரான் நட்சத்திரங்களாகவோ அல்லது கருந்துளைகளாகவோ மாறுகின்றன.பொருள்நிறை குறைவாக உள்ள அல்லது நடுத்தரமான பொருள்நிறை உள்ள நட்சத் திரங்கள்- உதாரணமாக – நமது சூரியனைவிட ஏறத்தாழ எட்டு மடங்கு பொருள்நிறை குறைவாக உள்ள நட்சத்திரங்கள்- வெள்ளைக் குள்ளன் எனும் ஒரு அடர்த்தியான நிலையை அடைகின்றன.இந்த நிகழ்ச்சிப்போக்கை நாம் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு வரையறையை கணித அவதானிப்புகள் மூலம் அவர் அறிவிச்சார். அவரது இந்த வரையறைதான் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு பற்றிய ஆய்வில் இன்றும் வழிகாட்டுகிறது. இந்த ஆய்வுக்காக இவருக்கு, 1983- ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வில்லியம் பவுலர் என்பவரோடு இணைத்து வழங்கப்பட்டது. 1937 – ல் சந்திரசேகர் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகச் சேர்ந்தார். 1995 -ல் 84 வயதில் இறக்கும்வரை அதே பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். இவர் 1953 முதல் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்தார். அமெரிக்காவில் 50 முனைவர் பட்டதாரிகளை உருவாக்கினார். அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா உள்ளிட்ட பல இடங்களுக்கு அவரது நினைவாகப் பெயர்கள் சூட்டப் பட்டுள்ளன.
ஞானபீட விருது பெற்ற ஒடிசா கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சச்சிதானந்த ராவுத்ராய் காலமான நாளின்று ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில் உள்ள குருஜங் என்ற இடத்தில் (1916) பிறந்தார். இன்றைய கிழக்கு வங்காளத்தில்தான் வளர்ந்தார். அங்கேயே கல்வி பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். 11 வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். ‘பாதேய’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தபோது இவருக்கு 16 வயது. புரட்சிகர கருத்துகள் கொண்ட இவரது கவிதைகள் பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்டன. சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் அனைத்திலும் தீவிரமாகப் பங்கேற்று பலமுறை சிறை சென்றார். பட்டப்படிப்பை முடித்து, கொல்கத்தாவில் 30 ஆண்டுகள் பணியாற்றினார். இவரது நீண்ட கவிதையான ‘பாஜி ராவுத்’ 1939-ல் வெளிவந்த பிறகு பிரபலமானார். இது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த ஒரு சிறுவனைப் பற்றியது. இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்த இக்கவிதை சிறிய மகா காவியமாகப் போற்றப்படுகிறது. மிகவும் பாராட்டப்பட்ட மற்றொரு கவிதைத் தொகுப்பு ‘பல்லீ’. கிராமப்புறத்தின் எளிமை, கிராம வாழ்க்கையின் ஆனந்தம் ஆகியவற்றையும் இவரது கவிதைகள் வெளிப்படுத்தின. சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர், ஒடிசாவுக்கு வெளியேயும் இவரது புகழ் பரவியது. ‘பாண்டுலிபி’, ‘அபிஜான்’ போன்ற கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த பிறகு, ஒடிசா நவீன கவிதை யுகத்தின் முன்னணிக் கவிஞராகப் போற்றப்பட்டார். ஒடிசா கவிதைகளுக்கு புதிய மரபு, புதிய பாணியை வகுத்துத் தந்தார். கதைகளில் பேச்சுமொழியைப் பயன்படுத்தினார். ஓரளவு படித்தவர்கள்கூட புரிந்துகொள்ளும் விதத்தில் இவரது படைப்புகள் எளிமையாக இருந்தன. கதை, நாடகம், நாவல்கள் எழுதுவதிலும் சிறந்து விளங்கினார். 18 கவிதைத் தொகுப்புகள், 4 கதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு காவிய நாடகம், 3 விமர்சன நூல்களைப் படைத்துள்ளார். 1935-ல் வெளியான இவரது ‘சித்ரக்ரீவ்’ நாவல் மிகவும் பிரசித்தி பெற்றது. ‘வசந்த் கே ஏகாந்த் ஜிலே மே’ காவியம் ஆங்கிலத்திலும் இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இவரது கதைகள் பெரும்பாலும் பாட்டாளிகள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், நலிவுற்றோரைப் பற்றியே இருந்ததால் வெகுஜனங்களை அதிகம் கவர்ந்தன. மனித உரிமைகளை வலியுறுத்தும் விதமாகவும், மோசமான சமூக கட்டமைப்புக்கு எதிராகவும் இவரது படைப்புகள் திகழ்ந்தன. இலக்கியப் பங்களிப்புகளுக்காக 1986-ல் இவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் ஒடிசா கவிஞர் இவர். பத்ம, சாகித்ய அகாடமி, சோவியத் லேண்ட் நேரு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஆந்திர பல்கலைக்கழகம், பிரம்மபூர் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. பல்வேறு நாடுகளில் நடந்த இலக்கிய மாநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார். ‘ஒடிசா கலா பரிஷத்’ என்ற அமைப்பை உருவாக்கினார். 50 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து, ‘ஜனங்களின் படைப்பாளி’ என்று போற்றப்பட்ட சச்சிதானந்த ராவுத்ராய் 88-வது வயதில் இதே ஆகஸ்ட் 21 (2004) மறைந்தார்.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணை, நாட்டுக்காக அர்பணிக்கப்பட்டு 91 ஆண்டுகள் நிறைவு பெற்று 92வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்நாளில் அணை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை தெரிந்து கொள்வோமா. மேட்டூர் அணை வரலாறு: கர்நாடகாவின் குடகு மாவட்டம் தலைக் காவிரியில் உருவாகும் காவிரியாறு 20க்கும் மேற்பட்ட துணை ஆறுகளுடன் கலந்து அகன்ற காவிரியாக உருவாகி கர்நாடகா மற்றும் தமிழகத்தில் 748 கிலோ மீட்டர் பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மேட்டூர் அணை கட்டுவதற்கு முன் அடிக்கடி காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டன. அதைத் தடுக்க காவிரி குறுக்கே அணைகட்ட அப்போதைய சென்னை மாகாண ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. தொடர்ந்து அதற்கான ஆய்வு 1834ஆம் ஆண்டு முதல் 1924ஆம் ஆண்டு வரை வரை 90 ஆண்டுகள் நடந்தன. அணை கட்டுமானம்: ஆங்கிலேய அரசின் கண்காணிப்பு வடிவமைப்பு பொறியாளர் கர்னல் எல்லீஸ், நிர்வாகப் பொறியாளர் வெங்கட்ராமன் ஐயர், முதன்மை தலைமைப் பொறியாளர் முல்லிங்கி அடங்கிய 24 பொறியாளர்கள் குழுவினருடன் பல ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். மேட்டூர் அணை முதலில் திட்டமிடப்பட்டப்போது, தற்போது அணை இருக்கும் இடத்தில் கட்டுவதற்குத் திட்டமிடப்படவில்லை. மாறாக, தற்போதுள்ள இடத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரம் தள்ளி இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால், 1924ஆம் ஆண்டு காவிரியில் மிகப்பெரிய வெள்ளம் ஒன்று ஏற்பட்டது. அப்போதுதான், முன்பு திட்டமிட்டதைவிடக் கூடுதல் நீரைத் தேக்கும் வகையில் அணை கட்டப்பட வேண்டும் என்பதற்காகத் தற்போதுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ஏழு கோடியே 37 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, வரி வருவாய் உயர்வதன் மூலம், செய்யப்பட்ட முதலீட்டிற்கு 6 சதவீதம் அளவுக்குப் பலன் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், இந்த அணையின் மூலமாக டெல்டா மாவட்டங்களில் உருவாகும் வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம் உயர்ந்தது போன்றவற்றைக் கணக்கிடும்போது இந்த வருவாய் மிகக் குறைவுதான். இந்த அணைக்கான செலவைத் திட்டமிடும்போது, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது. கட்டுமானப் பணிக்கான செலவு, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான செலவு, ஊழியர்களின் வீடுகளுக்கான செலவு, கால்வாய்கள், இயந்திரங்கள், ஓய்வூதியம், இவ்வளவு ஏன் வரைபடம் உள்ளிட்ட காகிதங்களுக்கு ஆகும் செலவுகள்கூட துல்லியமாகக் கணக்கிடப்பட்டன. இந்த அணையைக் கட்ட 2,16,000 டன் சிமென்ட் தேவைப்பட்டது. இந்த அளவுக்கு சிமென்ட் சப்ளை செய்ய ஷகாபாத் சிமென்ட் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சிமென்ட்டை எடுத்துவர, சேலத்தில் இருந்து மேட்டூர் வரை ஒரு ரயில் பாதை போடப்பட்டது. அந்த ரயில் பாதைக்கான செலவின் ஒரு பகுதி மேட்டூர் திட்டச் செலவிலிருந்தே அளிக்கப்பட்டது. மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பாக மேட்டூர் ஒரு குக்கிராமம். ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து 37 மைல் தூரத்தில் இருந்தது. அங்கிருந்து மேட்டூரை வந்தடைய மண் சாலைதான் இருந்தது. அணை குறித்த நேரத்தில் கட்டப்பட வேண்டுமென்றால், அணையின் கட்டுமானப் பணிகளுக்காக வரும் தொழிலாளர்கள், பொறியாளர்கள் தங்கும் அளவுக்கு ஒரு சிறிய நகரத்தையாவது மேட்டூரில் உருவாக்க வேண்டியிருந்தது. இதையடுத்துதான் பொருட்களை எடுத்துவர, சேலத்தில் இருந்து ஒரு ரயில் பாதையும் தார் சாலையும் போடப்பட்டது. பிறகு, அணையின் பணியாளர்களுக்காக வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டது. மொத்தமாக 10,000 பேர் தங்கும் அளவுக்கான வீடுகள் இதற்காகக் கட்டப்பட்டன. ஒரு குக்கிராமம், ஒரு சிறு நகரமாக உருவெடுக்க ஆரம்பித்தது மேட்டூர் டவுன் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. தூய்மையான குடிநீர், பாதாள சாக்கடை வசதிகளுடன் இந்தச் சிறுநகர் உருவாக்கப்பட்டது. மைசூர் அரசுக்கு உட்பட்டிருந்த சிவசமுத்திரத்தில் இருந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது. இங்கு வசித்த மக்களுக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மிகப்பெரிய வாரச் சந்தை கூடியது. நிலம் எடுக்கும் பணிகளுக்காக, மேட்டூர் தனி மாவட்டம் என அறிவிக்கப்பட்டது. மேட்டூர் அணை அமையும் இடம், அணையின் நீர் தேங்கும் இடம், தொழிலாளர்களின் கேம்ப், மின் நிலையம், ஒர்க் ஷாப் பகுதிகள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த அந்தஸ்து நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நில எடுப்புப் பணிகள் முடிந்த பிறகு, 1929 ஜூலையில் மேட்டூர் மாவட்டம், சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக கீழிறக்கப்பட்டது. 9 ஆண்டு காலம் நடந்த இந்த கட்டுமானப் பணியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். சுண்ணாம்பு, காரை மட்டுமின்றி சிமெண்ட்டை கொண்டும் அணை கட்டப்பட்டுள்ளது. அணை கட்டப்படும் இடத்தில் காவேரிபுரம் என்ற ஊர் ஒன்று இருந்தது. அணை கட்டப்பட்ட தருணத்தில் இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் வசித்து வந்தனர். சிதிலமடைந்த நிலையில் ஒரு கோட்டையும் ஒரு சிவன் கோவிலும் இந்தக் கிராமத்தில் இருந்தன. மைசூருக்கு செல்லும் கணவாயின் துவக்கத்தில் இந்தக் கோட்டை அமைந்திருந்தது. மைசூரிலிருந்து வரும் படையெடுப்பைக் கண்காணிக்க, திருமலை நாயக்கரால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இந்தக் கோட்டை 1768இல் ஆங்கிலேயர் வசம் வந்தது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஹைதர் அலி அதைக் கைப்பற்றினார். மைசூர் போர் நடந்த காலம் நெடுகவே இந்தக் கோட்டை வியூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், அணை கட்டப்பட்டுக் கொண்டிருந்த 20ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. முடிவில், இந்தக் கோட்டை ஊரோடு சேர்ந்து மேட்டூர் அணையில் மூழ்கியது. அன்றைய மேட்டூரை சுற்றி இருந்த சோழப்பாடி, நெருஞ்சிப்பேட்டை, சம்பள்ளி, நேயம்பாடி, செட்டிபட்டி, தாளவாடி, பழைய நாயம்பாடி, பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட 33 கிராமங்கள் மேட்டூர் அணையால் நீரில் மூழ்கின. கி.பி 10ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட நந்தி முகப்பும், ஜலகண்டீஸ்வரர் கோயிலும், ஆங்கிலேயர் காலத்தில் கட்டபப்ட்ட இரட்டை கோபுர கிறிஸ்தவ தேவாலயமும் இதன் அடையாள சின்னங்களாக நீரில் மூழ்கி உள்ளன அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு கீழ் குறைந்தால் நந்தி சிலையும், 70 அடிக்கு கீழ் குறைந்தல் கிறிஸ்தவர் கோபுரமும் இன்றைக்கும் தெரியும். சுமார் 9 ஆண்டுகள் இதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து, மேட்டூர் அணை கடந்த 1934ஆம் ஆண்டு ஜூலை 14 கடைசியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை கட்டுவதற்கு 4.80 கோடி ரூபாய் செலவானது. இதைத் தொடர்ந்து, 1934ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி அப்போதைய ஆங்கிலேய ஆட்சியில் சென்னை கர்னலாக இருந்த சர் ஜார்ஜ் பிரெட்ரிக் ஸ்டான்லி, அணையை முதன் முறையாக திறந்து வைத்தார். இதன் நினைவாக அணைக்கு ஸ்டேன்லி அணை என பெயர் சூட்டப்பட்டது. பாசன வசதி: அணைக்கட்டுமானப் பணி முடிந்த நிலையில் இதுவரை 1947, 1999, 2015 ஆண்டுகளில் அணையின் மேற்கு பகுதியில் மின்னல் தாக்கியது, எனினும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படும். இதன் மூலம் சேலம் மட்டுமல்லாது கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
ப. ஜீவானந்தம் பிறந்த தினம் -இன்று – ஆக 21 ஜீவாவும், காமராஜரும் அன்பால் இணைந்த நண்பர்களாகத் திகழ்ந்தனர். ஜீவாவின் மீது காமராஜர் பெருமதிப்பு வைத்திருந்தார். இந்நிலையில் முதல்வராக இருந்த காமராஜர் சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். அப்போது கட்சித்தொண்டர் ஒருவர் ஜீவா அந்தப் பகுதியில் வசிப்பதாகவும் அவர் மிகவும் உடல்நலம் குன்றி இருப்பதாகவும் கூற, காமராஜர் அவரை சந்திக்க பல குண்டு குழிகளையும் சாக்கடைகளையும் தாண்டி ஜீவா வசித்து வந்த குடிசைக்குச் செல்கிறார். அந்த குடிசையின் இழிந்த நிலை காமராஜரை திடுக்கிட வைக்கிறது. ஜீவாவின் பக்கத்தில் அமர்ந்து ”ஜீவா என்ன கஷ்டம் இது? முதல்வரின் கோட்டாவில் உனக்கு ஒரு அரசாங்க வீடு ஒதுக்கிக் கொடுக்கிறேன். அங்கு போய் நீ இரு” என்று காமராஜர் கூறினார். அதனைக் கேட்ட ஜீவா, ‘‘ தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் இருக்க வசதியாக அரசு வீடுகள் கிடைக்கட்டும். அன்று நான் நீங்கள் கொடுக்கும் வீட்டுக்குக் குடியேறுகிறேன்” என்றார். விரக்தியுடன் காமராஜர், ‘‘…ஜீவா நீ உருப்படமாட்டே..’’ என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார். தன்னலம் கருதாத் தகைமையாளராகவும், பொதுநலம் பேணிய புனிதராகவுமாக ஜீவா திகழ்ந்ததை இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. ஜீவா அவர்கள் தமக்கு நெருங்கியவர் முதல்வராக இருந்தும் அவருடன் கொண்ட நட்பினைத் தவறாகப் பயன்படுத்தாமல் நேர்மையுடையவராகத் தூய்மைஉடையவராக வாழ்ந்தார்.
உசேன் போல்ட், பர்த் டே டு டே உலகின் அதிவேக மனிதர்’, ஆறு முறை ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்றவர், அதில், மூன்று முறை ஹாட்ரிக்… அந்தச் சாதனைக்காரர். உலகம் முழுவதிலும் சிறந்த அத்லெட் ப்ளேயர் எனப் பெயர் பெற்ற உசேன் போல்ட், ஒரு சமூகப் போராளி! விளம்பரத் தூதர்! ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றோம், நூற்றுக்கணக்கான விளம்பரங்களில் நடித்தோம், வாழ்கையில் செட்டில் ஆனோம் எனப் பல அத்லெட் ப்ளேயர்கள் இருப்பதைப்போல �#�உசேன்_போல்ட்� இருக்க விரும்பவில்லை. தன்னை நம்பி குவியும் முதலீடுகளை, தன்னை வளர்த்து எடுத்த நாட்டின் பக்கம் திருப்ப முயல்கிறார் உசேன் போல்ட். பூமா, நிச்சான் எனப் பல முன்னணி நிறுவனங்களில் விளம்பரத் தூதராக இருக்கும் உசேன் போல்ட்க்குப் பல விளம்பர வாய்ப்புகள் குவிகின்றன. விளம்பரங்களால் தான் மட்டுமல்லாமல், தன் நாடும் உயரவேண்டும் என்ற நல்ல எண்ணம் உசேன் போல்ட்க்கு உதிர்த்திருக்கிறது. தன்னைவைத்து விளம்பரம் எடுக்க அணுகும் சர்வதேச நிறுவனங்களிடம், ”ஜமைக்காவில் விளம்பர ஷூட்டிங்கை எடுத்தால் விளம்பரத்தில் நடிக்கத் தயார்” என கட் அண்டு ரைட்டாக ஒரே கண்டிஷன் போடுகிறார் உசேன் போல்ட். இந்த ஷூட்டிங் மூலம், 100 – 200 ஜமைக்கா இளைஞர்களுக்காவது வேலை கிடைக்கும் என நம்புகிறார் உசேன் போல்ட். நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்! ”ஜமைக்காவுக்கு ஷூட்டிங் எடுக்கவரும் விளம்பர நிறுவனங்கள், தங்களிடம் ஷூட்டிங்கிக்குத் தேவையான உபகரணங்கள் இருந்தாலும், ஜமைக்காவில் உள்ள நிறுவனங்களில்தான் வாடகைக்கு எடுக்க வேண்டும்” என்ற ஒப்பந்தத்தையும் உசேன் போல்ட் போட்டுள்ளார். இதனால், ஜமைக்கா பொருளாதார அளவில் வளம் பெறும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. ”நன்றி உசேன்… நீங்கள் எங்களுக்காக வேலைவாய்ப்புகளைக் கொண்டுவருகிறீர்கள்” என ஜமைக்கா மக்கள், மின்னல் மனிதனைக் கொண்டாடுகிறார்கள் ஜமைக்காவில், சாதாரண ஒரு மளிகைக்கடைக்காரருக்கு மகனாக பிறந்த உசேன் போல்ட், தன் நாட்டு மக்கள் வருமானத்துக்காக எப்படிக் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நன்கு உணர்ந்தவர். தான் ஒரு முன்மாதிரியாக இருந்து விளம்பரக் கதவுகளை ஜமைக்கா பக்கம் திறந்துவிட்டால், தொடர்ந்து விளம்பர ஷூட்டிங் வரும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. அவரது நம்பிக்கைக்கு ஏற்றாற்போல, பசுமை போர்த்திய வசந்தமாக ஜமைக்கா இருக்கிறது. உசேன் போல்ட், தான் நடத்திவரும் தன்னார்வ அமைப்பின் மூலம், ஜமைக்காவில் உள்ள லட்சக்கணக்கண பள்ளிகளுக்கு உதவிகளைச் செய்துவருகிறார். விளையாட்டு மைதானம், லைசன்ஸ் பெற்ற கணித சாப்ட்வேர், கழிவறைகள் என தனது வேகத்தை உதவி செய்வதிலும் காட்டி வருகிறார். ‘ ‘பள்ளிகளுக்கும், படிக்கும் குழந்தைகளுக்கும் உதவ வேண்டும் என்பதே என் நோக்கம். இது என்னால் முடிந்த சிறிய உதவி” என வெகுளியாகச் சிரிக்கிறார் போல்ட். உசேன் போல்ட், உலக மக்களின் இதயங்களை ஏன் வென்றார் என்று இப்போது தெரிகிறதா.
