முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலுவின் மனைவியும், (TR Balu Wife) தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி காலமானார். அவருக்கு வயது 79. உடலநலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரேணுகா தேவி இன்று உயிரிழந்தார். இன்று சென்னையில் அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது.
திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டிஆர் பாலுவின் மனைவி ரேணுகா தேவி. இவருக்கு வயது 79. தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் தாயார் ஆவார். ரேணுகா தேவிக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2 வாரங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார். இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ரேணுகா தேவியின் மறைவு செய்தி அறிந்து, திமுக தலைவர்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இன்று மாலையில் ரேணுகா தேவியில் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ரேணுகா தேவியின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலில் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டி.ஆர்.பாலு அவர்களின் துணைவியாரும், மாண்புமிகு தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான திருமதி ரேணுகாதேவி பாலு அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி ரிவித்துள்ளார்.
