வரலாற்றில் இன்று ( ஆகஸ்டு 04 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஆகஸ்டு 4 (August 4) கிரிகோரியன் ஆண்டின் 216 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 217 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 149 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

70 – ரோமர்களால் ஜெருசலேம் நகரில் இரண்டாவது கோயில் அழிக்கப்பட்டது.
1578 – மொரோக்கர்கள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துக்கல் மன்னன் செபஸ்டியான் போரில் கொல்லப்பட்டான்.
1693 – சம்பைன் வைன் கண்டுபிடிக்கப்பட்டது.
1704 – ஆங்கில, டச்சுக் கூட்டுப்படைகளினால் கிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது.
1789 – பிரான்சில் நிலமானிய முறையை ஒழிக்க அந்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
1824 – ஒட்டோமான் பேரரசுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையில் கொஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1860 – இலங்கையின் கவர்னராக சேர் சார்ல்ஸ் மக்கார்த்தி நியமிக்கப்பட்டார்.
1902 – தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது.
1906 – சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.
1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மன் பெல்ஜியத்தின் மீது படையெடுத்தது. இதன் காரணமாக ஐக்கிய இராச்சியம் ஜெர்மனியின் மீது போரை அறிவித்து உலகப் போரில் முதன் முறையாகக் குதித்தது.
1916 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனியுடன் லைபீரியா போர் தொடுத்தது.
1936 – கிரேக்கத் தளபதி இயோனிஸ் மெட்டாக்சஸ் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து தன்னை நாட்டின் தலைவனாக அறிவித்தான்.
1946 – வடக்கு டொமினிக்கன் குடியரசில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 பேர் கொல்லப்பட்டு 2,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1964 – ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்களான மைக்கல் ஷ்வேர்னர், ஆண்ட்ரூ குட்மன், ஜேம்ஸ் சானி ஆகியோர் மிசிசிப்பியில் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். இவர்கள் ஜூன் 21 இல் காணாமல் போயிருந்தனர்.
1975 – மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஜப்பானிய செம்படையினர் AIA கட்டிடத்தைத் தாக்கி அமெரிக்கத் தூதுவர் உட்பட 50 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் இப்பயணக்கைதிகளை விடுவித்து சிறைக்கைதிகளாயிருந்த தமது 5 தோழர்களுடன் லிபியா பயணமாயினர்.
1984 – அப்பர் வோல்ட்டா ஆபிரிக்கக் குடியரசு புர்கினா பாசோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1987 – விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.
1991 – “ஓசியானோஸ்” என்ற கிரேக்க கப்பல் தென்னாபிரிக்காவில் மூழ்கியது. அனைத்து 571 பயணிகளும் காப்பாற்றப்பட்டனர்.
2006 – நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் அறிவிக்கப்பட்டார். இவர் ஆகஸ்ட் 23 இல் பதவியேற்ரார்.
2006 – ஈழத்துக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2006 – வறுமைக்கு எதிரான அமைப்பு (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
2007 – நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

பிறப்புகள்

1908 – ரீ. உருத்திரா, முன்னாள் கொழும்பு நகரத் தந்தை (இ. 1960)
1929 – கிஷோர் குமார், இந்தியாப் பாடகர், நடிகர் (இ. 1987)
1961 – பராக் ஒபாமா, அமெரிக்க அரசியல்வாதி

இறப்புகள்

2006 – பொன். கணேசமூர்த்தி, ஈழத்துக் கலைஞர்
2008 – ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (பி. 1929)

சிறப்பு நாள்

புர்கினா பாசோ – புரட்சி நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!