இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜூலை 29)

இன்று உலக புலிகள் தினம் (Global Tiger Day). புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புலிகளின் இனம் அழிந்து போகாமல் காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 உலக புலிகள் தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. வீரத்தின் உருவாய், கம்பீரத்தின் காட்சியாய், துணிச்சலின் சாட்சியாய் உலா வரும் விலங்குகள் புலிகள். அசாத்திய அறிவுத்திறன் கொண்ட விலங்காக ராஜ நடை போட்டு காட்டை சுற்றும் சூறாவளிகள் புலிகள். புலிகளின் வரலாறு வலி மிகுந்தது. 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு முன்பு உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புலிகள் இருந்தன. இதில் சுமார் 80 சதவிகி தம் புலிகள் இந்தியாவில் வசித்தன. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் தான் புலிகளுக் கான அழிவு காலம் பெரியளவில் தொடங்கி யது. புலி வேட்டையை வீரத்தின் அடையா ளமாக இந்திய மன்னர்கள் கருதினார்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் இது வீர விளை யாட்டாக ஊக்குவிக்கபட்டது. அதிக புலி களை வேட்டையாடிக் கொல்பவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதனால் வேட்டை சங்கங்களும் பெருகின. ஜெய்பூர் மகாராஜாவின் வேட்டை சங்கத்திற்கு கிரேக்க மன்னர் ஜார்ஜ் உள்பட உலகம் முழுவதும் மன்னர்கள், இளவரசர்கள் விருந் தினர்களாக வந்து தங்கி, புலிகளை வேட் டையாடி உள்ளனர். 1950ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் 18,000 புலிகள் இருந்த நிலையில் 1960ஆம் ஆண்டுகளில் இவை 15,000 மாக குறைந் தது. மத்திய அரசு முதன்முதலில் 1972ஆம் ஆண்டில் புலிகளுக்கான கணக்கெடுப்பை நடத்தியது. இதில் இந்தியாவில் வெறும் 1,827 புலிகள் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. இந்த எண்ணிக்கை அனைவரை யும் அதிர்ந்து போகச்செய்தது. இதனையடுத்து 1973-ஆம் ஆண்டு “ப்ராஜெக்ட் டைகர்” திட்டம் துவங்கப்பட்டது. புலிகள் காக்கப்பட வேண்டிய விலங்கின பட்டிய லில் சேர்த்து, அதற்கான காப்பகங்கள் அமைக்கப்பட்டு புலிகளின் எண்ணிக் கையை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. இதன் பின்னர் 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய அளவிலான கணக்கெ டுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை சற்றே உயர்ந்து 3 ஆயிரமாகி-ஆக இருகின்றது. ஒரு காட்டில் புலிகள் இருந்தால் அக்காடு அனைத்து வகையிலும் வளமான காடாக கருதப்படும். பிறந்த இரண்டு மாதங் கள் வரை புலிக்குட்டிகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு. நான்காம் மாதத்தில் இருந்து எட்டாம் மாதம் வரை குட்டிகள் தாயு டன் நீண்ட தூரம் பயணித்து, மோப்பம் பிடிப் பது, முன்னங்கால்களால் சண்டையிடுவது, தனது பலத்திற்கேற்ற இறை விலங்கினை தேர்வு செய்வது, அவற்றை வேட்டையாடி வீழ்த்துவது, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, காட்டெருது போன்ற ஆபத்தான விலங்குக ளிடம் காயம்படாமல் நேர்த்தியாக வேட் டையாடுவது போன்றவை தாய்ப்புலியால் குட்டிகளுக்கு கற்றுத்தரப்படும். இதன் பின்னர் தாய்ப்புலி தனது குட்டிகளை தனித்து செயல்பட அனுமதிக்கும். ஆனாலும் வனத்தில் மனிதர் களால் நடத்தப்படும் அத்துமீறல்களால் புலி களின் வாழ்விடம் சுருங்கி வருவதால், அவை காப்பகங்களை விட்டு காப்புக்காடுகளிலும் வாழ துவங்கி விட்டன. இவை வாழும் காட்டில் இயற்கை சூழல் பாதித்து அதற்கான இரை விலங்கு கள் கிடைக்காவிட்டால் வனத்தை ஒட்டி ள்ள பகுதிகளில் மனிதர்களால் வளர்க்கப் படும் ஆடு மாடுகளை உணவாக்க முயற் சிக்கும் என்பதால், புலிகள் வாழும் காட்டில் சிறப்புக் கவனம் செலுத்துவது மிக மிக அவ சியம். குறிப்பாக கள்ள வேட்டை முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்

இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவிய கலைத்தந்தை கருமுத்து தியாகராஜன் செட்டியார் காலமான தினம் இன்று இவருடைய குடும்பம் இலங்கையில் துணி வாணிகத்தில் ஈடுபட்டிருந்தது. இவருடைய அண்ணன் அருணாசலம் செட்டியார் துணியின் தரம் அறிவதில் ஆற்றல் பெற்றிருந்தார். இவருடைய மற்றொரு அண்ணன் இராமநாதன் செட்டியார் மான்செஸ்டர் ஆலைகளின் நடைமுறையை பற்றித் தெரிந்து கொள்வதற்காக 1907ல் #இங்கிலாந்துக்குச் சென்றார். #நகரத்தாருள் மேலைநாடுகளுக்கு முதலில் சென்றவர் அவரே ஆவார். நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1940ல் மதுரைக்கு வந்திருந்த போது இவரது வீட்டில் #விருந்தினராகத் தங்கினார். மகாத்மா காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்த போது அப்போது தியாகராசச் செட்டியார் வாழ்ந்த மேலமாசி வீதி வீட்டில் அவருடைய விருந்தாளியாகத் தங்கினார் இலங்கையில் தமிழர்களுக்கு உடலில் அடையாளச் சூடு போடும் பழக்கத்தினை தடுத்து நிறுத்தினார். ஆதாரம்: மதராஸ் மாகாணகவர்னர் பெண்ட்லாண்ட் பிரபுவிற்கு 1916ல் கருமுத்து தியாகராசர் எழுதிய கடிதம் இன்றும் சென்னை #எழும்பூர் ஆவணக்காப்பகத்தில் பேணப்பட்டு வருகின்றது. கலைத்தந்தை சைவசமயத்தில் அழுத்தமான பற்றுக் கொண்டிருந்தார். தம் மக்களுக்கு நாயன்மார்கள் பெயர்களை இட்டார். நாள்தோறும் திருவாசகத்தை ஓதி வந்தார். நகரக்கோயில் பிரிவுகளுள் கலைத்தந்தை #மாத்தூர் கோயிலைச் சேர்ந்தவர் இலங்கையில் தமிழர்களுக்கு அடையாள சூடு போடும் வழக்கத்தை தடுத்து நிறுத்தக் காரணமாக இருந்தவர். இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர் நலனுக்காக ஒரு பத்திரிகை நடத்தினார். இந்தியா திரும்பியவர், காங்கிரஸில் 1917-ல் சேர்ந்து தொழிலாளர் தலைவராக வும், மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் இருந்தார். மதுரையில் 1925-ல் மீனாட்சி மில் நிறுவனத்தைத் தொடங்கி, நூற்பாலை, நெசவு ஆலையையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார். மீனாட்சி ஆலையின் ஆரம்பகால இயக்குநர்களாக தேசியத் தலைவர்கள் பலரும் இருந்துள்ளனர். மகாத்மா காந்தி, நேதாஜி உள்ளிட்ட தலைவர்கள் மதுரைக்கு வந்தபோது இவரது விருந்தினர்களாகத் தங்கினார்கள் என்று கூறப்படுகிறது. இளம் வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு உட்பட பல நூல்கள் வெளிவர அதிகம் பொருளுதவி செய்துள்ளார். சென்னை தமிழிசை சங்கம், மதுரை திருவள்ளுவர் கழகம், காரைக்குடி கம்பன் கழகம், உ.வே.சாமிநாத ஐயர் நிலையம் போன்ற ஏராளமான அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். நலிந்த ஆலைகளை ஏற்று தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, வெற்றிகரமாக நடத்தியவர். இந்தியாவின் மாபெரும் தொழில் மேதைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். தொழிலாளர்கள், இதர ஆலை முதலாளிகள் மத்தியில் பெருமதிப்பும் மரியாதையும் பெற்றவர். ஆலைகளின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் தொடங்கி கல்விப் பணியாற்றினார். ‘தமிழ்நாடு’ என்ற நாளிதழை பல ஆண்டுகள் நடத்தினார். இவர் கட்டிடக் கலைஞரும்கூட. இசை, ஓவியம், குதிரைச் சவாரியிலும் ஆர்வம் உள்ளவர். தினமும் திருவாசகம் ஓதும் வழக்கம் கொண்டவர். மத்திய அரசின் கட்டாய இந்திக் கல்வி திட்டத்தை எதிர்த்தார். இதனால், காங்கிரஸில் இருந்து விலகினார். இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திய சோமசுந்தர பாரதியார், பெரியாருக்கு உறுதுணையாக இருந்தார். ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றபோதிலும் ஆங்கிலம் கலவாது தமிழில் பேசி, எழுதுவார். ராமநாதபுரம் சேதுபதி, பண்டித மணி, பேராசிரியர் ரத்தின சபாபதி ஆகியோரின் நூல் நிலையங்களை விலைக்கு வாங்கி மேம்படுத்தினார். தன் மனைவியை தமிழில் அரிச்சுவடியில் இருந்து கற்க வைத்து, ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவது, சொற்பொழிவுகள் ஆற்றும் அளவுக்கு புலமைபெறச் செய்தார். 14 ஜவுளி ஆலைகள், 19 கல்வி நிலையங்கள், மதுரை வங்கி, மதுரை காப்பீடு நிறுவனம் ஆகியவற்றை நிறுவியவர்.

ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவி காலமான நாளின்று ராஜஸ்தான் சரித்திரத்தில் ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவிக்கு சிறப்பான ஒரு இடம் எப்போதுமே உண்டு. ‘மக்களின் மகாராணி’ என அழைக்கப்பட்டார் என கூறுவதோடு, மக்களால் அவர் மிகவும் நேசிக்கப்பட்டார் என்றே கூற வேண்டும். 1962 நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுவராஜ்யா கட்சி சார்பாக ஜெய்பூர் பாராளுமன்ற தொகுதியில் மகாராணி போட்டியிட்டார். அந்த தேர்தலில் பதிவான 2,46,516, வாக்குகளில் 1,92,909 வாக்குகளை பெற்று கின்னஸ் சாதனையை காயத்ரி தேவி படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல, 1967, 1971 ஆகிய பாராளுமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்து மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்ற பெருமைக்கு உரியவர். மகாராணி காயத்ரி தேவிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் மீது வரி மோசடி வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளுவதற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி முயற்சி செய்தார் எனில் அவருடைய செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். மேற்கு வங்காளம் கூச்பிகார் ராஜா ஜிதேந்திர நாராயணனின் மகள் காயத்ரி தேவி. ஜெய்ப்பூர் மகாராஜா மான்சிங்கை 1940&ம் ஆண்டு மணந்தார். 12 வயது சிறுமியாக காயத்திரி தேவி இருந்தபோதே, அவருடைய அழகில் மான்சிங் மனதை பறி கொடுத்திருந்தார். அதனாலேயே, காத்திருந்து 3&வது மனைவியாக காயத்திரி தேவியை மான்சிங் மணந்து கொண்டார் என்றும் கூறுகிறார்கள். இரைப்பை சார்ந்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட இவர் லண்டனில் கிங் எட்வர்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அங்கிருந்த தனிமை பிடிக்காமல் ஜெய்ப்பூர் திரும்பிய இவர் ஜூலை 17ஆம் நாள் சந்தோக்பாய் துர்லாபாய் நினைவு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். வேறுபல உபாதைகளும் தாக்க, சிகிச்சைபலன் இன்றி இதே ஜூலை 29-ஆம் நாள் 2009 உயிர் நீத்தார்.

இதே நாள் –1987இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை ராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண, அன்றைய தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் இணைந்து, சமரச முயற்சியில் ராஜீவ் ஈடுபட்டார். இதன் விளைவாக ஒரு சமரசத்திட்டம் உருவாயிற்று. இலங்கைத் தலைநகரான கொழும்பில் 29-7-1987-ல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. இதில் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, எம்.ஜி.ஆரை ராஜீவ் காந்தி அழைத்தார். ஆனால், எம்.ஜி.ஆர். இலங்கை செல்ல இயலாமல் இருந்ததால், தன் சார்பில் அமைச்சர் பண்ருட்டிராமச்சந்திரனை அனுப்பி வைத்தார். இந்த ஒப்பந்தத்தை இலங்கை பிரதமர் பிரேமதாசா, பாதுகாப்பு மந்திரி லலித் அதுலத் முதலி ஆகிய இருவரும் ஏற்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- (1) ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். ராணுவத் தினரும், விடுதலைப்புலிகளும் போரை நிறுத்த வேண்டும். (2) மூன்று நாட்களுக்குள் ராணுவத்தினர் அவர்களுடைய முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும். விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். (3) இலங்கையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும். ஆயுதங்களை ஒப்படைத்த விடுதலைப்புலிகள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று, மற்ற குடிமக்களோடு சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள். (4) தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒரே மாநிலமாக (“தமிழ் மாநிலம்”) அமைக்கப்படும். இந்த மாநில சட்டசபைக்கு 3 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும். ஒருவேளை தாமதம் ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன் நடைபெறும். தேர்தல் நடைபெறும்போது, அதை மேற்பார்வையிட இந்தியாவில் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள். (5) இந்த மாநிலத்துக்கு முதல்- அமைச்சர் இருப்பார். அவரை பொதுமக்கள் தேர்ந்து எடுப்பார்கள். கவர்னரை ஜனாதிபதி நியமிப்பார். “வடக்கு பகுதியுடன் நிரந்தரமாக இணைந்திருக்க விருப்பமா?” என்று, 1988-ம் ஆண்டு கடைசிக்குள் கிழக்குப் பகுதியில் பொது ஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். கலவரம் காரணமாக இலங்கையில் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய 1,30,000 தமிழ் அகதிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம். (6) இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும், சுதந்திரத்துக்கும் ஆபத்து உண்டாக்கக்கூடிய எந்த நடவடிக்கைகளும், இந்திய மண்ணில் நடக்காதபடி இந்திய அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். (7) இந்தியாவுக்கும், இலங்கைக்கும் மத்தியில் உள்ள கடல் பகுதியில் விடுதலைப்புலிகள் போர் நடவடிக்கையில் ஈடுபடாதபடி இந்திய கப்பல் படைகளும், கடலோர பாதுகாப்பு படையினரும் கவனித்துக் கொள்வார்கள். (Cool இந்த ஒப்பந்தத்துக்கு இலங்கை பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும். இதற்காக பாராளுமன்றம் கூட்டப்படும். (9) ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்றுவதில் இந்திய ராணுவ உதவியை இலங்கை அரசாங்கம் நாடினால் அதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும். (10) இந்தியா வந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்பி அனுப்பும் பணியை, இந்தியா துரிதப்படுத்தும். இவ்வாறு ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது. ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள், ராஜீவ் காந்தி டெல்லிக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்பி வைக்கும் வகையில், ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் மாளிகையில் இலங்கை கடற்படை அணி வகுப்பு நடந்தது. அந்த அணி வகுப்பு மரியாதையை ராஜீவ் காந்தி ஏற்க சென்றார். முதல் வரிசையில் நின்ற வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுவிட்டு திரும்ப முயன்றார். அப்போது இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவன் திடீரென்று பாய்ந்து வந்து, தனது துப்பாக்கியை திருப்பி, துப்பாக்கிக் கட்டையால் ராஜீவ் காந்தியை தாக்கினான். துப்பாக்கிக் கட்டை, ராஜீவ் காந்தியின் இடது தோளில் பட்டு தரையில் விழுந்தது. அதிர்ச்சியில் உறைந்துபோன ராஜீவ் கொஞ்சம் முன்னே வேகமாக நடந்து சென்று திரும்பி பார்த்தார். இதற்குள், ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்குச் சென்ற அதிகாரிகள் பாய்ந்து சென்று, துப்பாக்கியால் தாக்கிய சிப்பாயை கீழே தள்ளினார்கள். இலங்கை கடற்படை தளபதியும் விரைந்து வந்து, அந்த சிப்பாயைப் பிடித்துக்கொண்டார். இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு 20 மீட்டர் தொலைவில் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா, அவரது மனைவி, ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர். அந்த இடத்துக்கு ராஜீவ் காந்தி சென்றார். அங்கு ஜெயவர்த்தனாவிடம் விடைபெற்றுக்கொண்டு காரில் ஏறி விமான நிலையத்துக்குச் சென்றார். ராஜீவ் காந்தியை தாக்கியவன் பெயர் விஜிதா ரோதன். இவன் முன்பு “ஜனதா விமுக்தி பெரமுனா” என்ற சிங்கள தீவிரவாத அமைப்பில் இருந்தவன். ராஜீவ் காந்தியின் தலையை தாக்குவதே அவன் நோக்கம். சற்று குறி தவறி தோளில் பட்டதால் ராஜீவ் உயிர் தப்பினார். ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தும், மன்னிப்பு கேட்டும் ராஜீவ் காந்திக்கு ஜெயவர்த்தனா செய்தி அனுப்பினார். ரேடியோவிலும் பேசினார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையும் சமூக சேவகியுமான அருணா ஆசஃப் அலி நினைவுநாள் இன்று – ஜூலை 29, 1996. அருணா பிரித்தானிய பஞ்சாப் மாநிலத்தின் (இன்றைய அரியானா மாநிலம்) கல்காவில் வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். லாகூர் மற்றும் நைனிதாலில் படித்தவர். பட்டம் பெற்ற பின்னர் கொல்கத்தாவின் கோபால கிருஷ்ண கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றினார். காங்கிரசுத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஆசப் அலியை அலகாபாத்தில் சந்தித்தப்பிறகு பெற்றோர்களின் எதிர்ப்பையும் சமயவாதிகளின் எதிர்ப்பையும் இருபது ஆண்டுகளுக்கும் கூடுதலான அகவை வேறுபாட்டையும் மீறி 1928ஆம் ஆண்டு அவரை திருமணம் புரிந்து கொண்டார். அருணா இந்திய தேசிய காங்கிரசின் துடிப்பான அங்கத்தினராக விளங்கினார். உப்பு சத்தியாக்கிரகத்தின்போது சிறை சென்றார். அரசியல் கைதிகளை விடுவித்தபோது இவரை விடுவிக்காததால் மக்கள் போராட்ட நடந்தது. அதன்பின்னரே விடுவிக்கப்பட்டார். 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பல தலைவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மும்பையில் கோவாலியா குள மைதானத்தில் காங்கிரசின் கொடியை பலத்த தடைகளை மீறி ஏற்றினார். விடுதலைக்குப் பின்னர் காங்கிரசிலிருந்து வெளியேறி பல சோசலிச இயக்கங்களில் பங்காற்றி உள்ளார். 1958ஆம் ஆண்டு தில்லியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் எடதாதா நாராயணனுடன் இணைந்து பேட்ரியட் இதழையும் பல நூல்களை வெளியிட்டுள்ளார். 1964ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரசில் இணைந்தார். இருப்பினும் அரசியலில் முழுமையாக ஈடுபடவில்லை. அமைதிக்கான லெனின் பரிசும் 1992-ம் ஆண்டுக்கான ஜவஹர்லால் நேரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டன. நேர்மை, தன்னலமற்ற சேவை, நாட்டுப்பற்று ஆகியவற்றுக்கு சிறந்த முன்னுதாரணமாக விளங்கிய அருணா ஆசஃப் அலி 87 வயதில் (1996) மறைந்தார். அருணா ஆசஃப் அலிக்கு 1997ஆம் ஆண்டு மறைவிற்கு பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நினைவு நாள் ஈஸ்வரர் சந்திர பந்தோபாத்யாயா என்கிற ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (Ishwar Chandra Vidyasagar, செப்டம்பர் 26, 1820 – சூலை 29, 1891) என்பவர் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் பெண் கல்வி முன்னேற்றம், விதவைத் திருமணம் போன்ற சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டினார். இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், மேட்னிபூர் அருகிலுள்ள பிர்சிங்கா எனும் ஊரில் செப்டம்பர் 26, 1820 ஆம் ஆண்டு பிறந்தார். 1839 ஆம் ஆண்டில் இந்து சட்டக்குழு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1841 ஆம் ஆண்டில் “நியாயா” மற்றும் “ஜியோதிஷ்” தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற இவர் வேதங்களையும், சமஸ்கிருத இலக்கியங்களையும் ஆழ்ந்து படித்தார். இவருக்கு சமஸ்கிருதக் கல்லூரி “வித்யாசாகர்” எனும் பட்டத்தை அளித்தது.இவர் வங்காள மொழியில் 30 நூல்களும், சமற்கிருதத்தில் 17 நூல்களும், ஆங்கிலத்தில் 5 நூல்களும் என மொத்தம் 52 நூல்களை எழுதியிருக்கிறார். “விதவா விவாஹ்”, “பிரந்தி விலாஸ்”, “அக்யான் மஞ்சரி”, “சிதார் பான்பாஸ்”, “பீட்டல் பஞ்ச்வின் சாடி”, “வியாக்ரன் கௌமுதி”, “ஹிஸ்டரி ஆஃப் பெங்கால்”, “ஜீவன் சரித்”, “போதோதயா” என்கிற நூல்கள் இவர் எழுதியவற்றுள் மிகவும் சிறப்பு பெற்றவை.

  • 1864 ஆம் ஆண்டில் ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் சிறப்பு உறுப்பினராக ஆனார்.
  • 1880 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசியார் இவருக்கு சி. ஐ. ஈ எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தார். பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற இவரது முற்போக்கு எண்ணத்தினால் 35 பெண்கள் பள்ளிகளை நிறுவினார்.

இவர் கல்கத்தா நகரில் 29-07-1891 ஆம் நாளில் மரணமடைந்தார்.

இதே – ஜூலை 29, 1981 – இங்கிலாந்தின் பட்டது இளவரசர் சார்லசுக்கும் டயானாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இலண்டன் புனித பவுல் பேராலயத்தில் நடைபெற்ற இந்த திருமணம் உலகின் பல தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இளவரசர் சார்லசு-டயானா திருமணத்தை உலகத் தொலைக்காட்சிகளில் 700 மில்லியன் பேர் பார்வையிட்டனர்.

குச்சுபுடி நடனத்தை உலக அளவில் பிரபலப்படுத்திய மாமேதை டாக்டர் வேம்பட்டி சின்ன சத்யம் நினைவு தினம் இன்று (2012). ஆந்திர மாநிலத்தில் குச்சுபுடி நடன பாரம்பரியம் கொண்ட வேம்பட்டியில் கலைக் குடும்பத்தில் பிறந்தவர் சின்ன சத்யம். 18 வயதில் அக்கிராமத்தை விட்டு சென்னையில் குடியேறினார். சின்ன சத்யம், குச்சுபுடி நடனத்துக்கென 1963ஆம் ஆண்டு குச்சுபுடி ஆர்ட்ஸ் அகாதெமியை நிறுவினார். அதன் பின்னர் எண்ணற்ற நாட்டிய நாடகங்களை இயக்கி குருவாக இருந்து பலருக்கும் பயிற்றுவித்துள்ளார். அந்தக் கால பிரபல நடிகைகள், நாட்டிய தாரகைகள் இவருடைய வழிகாட்டலில் வெளிவந்தவர்களே. உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்துள்ள இவருக்கு நாட்டின் உயரிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. பத்ம பூஷண் விருது, சங்கீத நாடக அகாதெமியின் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது, மியூசிக் அகாதெமியின் டி.டி.கே. நினைவு விருது, மத்தியப் பிரதேச அரசின் காளிதாஸ் சம்மான் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளின் விருதுகள், பட்டங்கள் பலவும் பெற்றவர்.

பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வறிஞருமான பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த தினம் இன்று. ஜூலை 29, 1890 தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார். தான் கணிதத்தில் பட்டம் பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் , திருவையாறு மன்னர் கல்லூரியிலும் , அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்து , ஓய்வு பெற்றார். தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் இவரே. தொல்காப்பிய நூலுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் உரை எழுதியுள்ளார். குப்புசாமி ஆய்வு மையமும், அண்ணாமலை பல்கலைக் கழகமும் இதனை நூல்களாகக் கொண்டு வந்தன. பதஞ்சலி முனிவர் எழுதிய ‘மஹாபாஷ்யம்’ நூலினைத் தமிழில் மெழிபெயர்த்தார். பாணினியின் நூல்கலையும் தமிழில் கொண்டுவந்தார். புறநானூறு பாடல்களை ஆய்வு செய்து முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணங்களையும் எழுதியுள்ளார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் மட்டுமின்றி பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஜெர்மன் போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். 40 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி. மாணவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். பல நேரங்களில், ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தானே செலுத்துவார். நான்கு வகை வேதங்களையும் எல்லா மாணவர்களுக்கும் நடத்துவார். ஓய்வுக்குப் பின் உடல் நலிவடையும் காலம் வரை,திருவையாறில் , தொடர்ந்து திருக்குறள் வகுப்பு நடத்தினார். எளிமையான மனிதராக வாழ்ந்த சுப்ரமணிய சாஸ்திரி , மொழிகளின் ஆராய்ச்சியிலேயே தனது நாட்களைக் கழித்தார்.

தொழிற்துறை ஜாம்பவான் ஜே.ஆர்.டி.டாடா பிறந்த தினம் இன்று ஒரு மனிதனின் கனவுகள் ஒரு தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஜே.ஆர்.டி.டாடா. இளம் வயதில் பிரான்ஸ் தேசத்தில் இருந்த பொழுது விண்ணில் விமானத்தில் பறப்பதன் மீது காதல் கொண்டார். அவர் இந்தியாவின் முதல் விமானி ஆனார் . டாடா நிறுவனத்தில் தலைமைப்பொறுப்புக்கு வந்த பின்னர் அவர் உருவாக்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் தான் இந்தியாவின் ஏர் இந்தியாவாக உருவெடுத்தது. . இன்றைக்கு கலக்கும் டி.சி.எஸ்.டைட்டன் ,டாடா மோட்டார்ஸ் எல்லாமும் இவரின் கனவுக்குழந்தைகளே. இன்றைய இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி டாடாவில் தான் வேலை பார்த்தார். அவர் டாட்டாவை விட்டுக்கிளம்பும் பொழுது ஜே.ஆர்.டி. அவரை அழைத்தார் ,”சுதா !சமூகம் நமக்கு எவ்வளவோ தந்திருக்கிறது. அதனால் நாம் பலனடைந்து இருக்கிறோம் அதை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும். ” என்றார் அதன் தாக்கத்தில் தான் இன்போசிஸ் அறக்கட்டளை எழுந்தது. தன்னுடைய பெயரில் ஒரு சொத்தைக்கொண்டு இறுதிவரை அவர் கொண்டிருக்கவில்லை. வீட்டைக்கூட தன்னுடைய பெயரில் பதிவு செய்து கொள்ளாத எளிமை அவரிடம் இருந்தது. பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் சொன்ன வரிகள் தான் அவரின் சிந்தனை பாய்ந்த விண்ணை போல போல நம் தேசத்தின் எல்லாரின் சிந்தையிலும் வியாபித்து இருக்கவேண்டும் -அந்த வரிகள் ”இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக வேண்டாம் ;இந்த நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்வோடு, தன்னிறைவோடு வாழ்கிற தேசமாக இந்த பூமி ஆனால் போதும் !”என்ற அவரின் பிறந்த தினம் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!