ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வரும் “அவதார்: பயர் அண்ட் ஆஷ்” திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’ படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ என்ற பெயரில் வெளியானது.
இதனையடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இதற்கு “அவதார்: பயர் அண்ட் ஆஷ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் வரும் 25ம் தேதி “தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்” படத்துடன் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.

இந்த நிலையில், “அவதார்: பயர் அண்ட் ஆஷ்” படத்தின் டிரெய்லர் வெளியாகி வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
