உலக பாம்புகள் தினம் இன்று… இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாம்பு வழிபடப்படுகிறது. மரத்தடிக் கோவில்களில் பாம்புச் சிலைகளைக் காணலாம். புராணங்களில் பாம்பைப் படுக்கையாக வைத்திருக்கும் கடவுள், கழுத்தில் சூடியிருக்கும் கடவுள் எனப் பல சித்தரிப்புகள் இருக்கின்றன. இங்கு மட்டுமல்ல கிரேக்கப் புராணங்களிலும் இதர பல தொன்மை இலக்கியங்களிலும் பாம்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் உண்டு. பாரசீக நாடுகளிலும், இலங்கை, சீனா, ஜப்பான், பர்மா, ஜாவா, அரேபியா, எகிப்து, கிரீஸ், இத்தாலி, பெரு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் வழிபாட்டு அடையாளங்களாகப் பாம்புகள் காணப்படுகின்றன. சில நாடுகளில் பாம்பு நல்ல தெய்வமாக வணங்கப்படுகிறது, சிலவற்றில் கெட்ட தெய்வமாக அஞ்சப்படுகிறது. உலகில் கிட்டத்தட்ட 3000 வகையான பாம்பு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன கண்டறியப்படாதது இன்னும் எத்தனையோ எனத் தெரியாது!… வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாம்புகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப் பட்டுள்ளன. அரசின் அனுமதி மற்றும் உரிமம் இல்லாமல் அவற்றை பிடித்தலோ, அடித்து கொன்றாலோ அல்லது ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றாலோ அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஏனெனில் பாம்புகள் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கது. அவைகள் மனிதர்களுக்கு பெரும் உதவிகளை செய்து வருகின்றன. பாம்பு விஷம் மருத்துவ துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. பாம்புகளும் ஆந்தைகள் போன்று எலிக்கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகித்து உணவுச்சங்கிலியில் முக்கிய இடத்தில் உள்ளதால் பாம்புகளைப் பாதுகாப்போம்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே” முதலான தேசிய கீதங்களை பாடிய இசைப் பாடகி டி. கே. பட்டம்மாள் நினைவு தினம் டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் ( மார்ச் 28 , 1919 – ஜூலை 16 ,2009 . காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் , இவரது பேத்தி ஆவார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் ‘பெண் மும் மூர்த்திகள்’ என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் பட்டம்மாள் ஒருவர் . தனது 4 ஆவது வயதிலேயே பாடத் தொடங்கினார் .. 1929 ஆம் ஆண்டில் தனது 10வது அகவையில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பின்னர் மூன்று ஆண்டுகளின் பின்னர், 1932 இல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் தனது முதல் கச்சேரியை அரங்கேற்றினார் . பின்னர் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் நிறைய தேச பக்தி பாடல்களை பாட ஆரம்பித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக் கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் பாடிவந்தார். பாபநாசம் சிவன் , கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் முத்துத் தாண்டவர் பாடல்களையும் பதங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார். பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். ஜப்பானிய ‘ அகிகோ ‘வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார். பத்ம விபூஷண், பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, இசைப் பேரறிஞர், சங்கீத கலாசிகாமணி, காளிதாஸ் சம்மான் என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ‘தேசியக் குயில்’ என்று போற்றப்பட்ட டி.கே.பட்டம்மாள் 90-வது வயதில் (2009) மறைந்தார்.
உலகின் முதல் அணுவாயுதச் சோதனை ( USA) அமெரிக்காவால் ,டிரினிடி என்ற இடத்தில் 20 கிலோ டன் எடை உள்ள அணுகுண்டு வெடிப்பின் மூலம் நடத்தப்பட்டது இந்த அணுகுண்டின் சோதனையின் தொடர்ச்சியாக அதன் உண்மையான பாதிப்புகளை கண்டறியும் பரிசோதனையாகத்தான் அடுத்த மாதமே ஆகஸ்ட் 6ம் தேதி போரில் தோற்று சரண் அடைவதாக ஜப்பான் தெரிவித்த பிறகும் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் திட்டமிட்டு அணுகுண்டு போடப்பட்டது
