இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘ஆண்டர்சன்- தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்
விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் டெஸ்ட்டில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாடுகிறார். இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் சிறப்பான தொடக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல், கேப்டன் கில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், கருண் நாயரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணி அதிக ரன்களை எடுக்க முடியும்.
