வரலாற்றில் இன்று ( ஜூன்23)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜூன் 23 கிரிகோரியன் ஆண்டின் 174 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 175 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 191 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1305 – பிளெமிசு, பிரான்சியருக்கிடயே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1532 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர்.
1565 – மால்ட்டா மீதான படையெடுப்பின் போது உதுமானியக் கடற்படைத் தளபதி திராகுத் இறந்தார்.
1594 – அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்ற போர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர்.[1]
1611 – என்றி அட்சனின் நான்காவது பயணத்தின் போது என்றி, அவரது மகன், மற்றும் ஏழு மாலுமிகளும் அட்சன் விரிகுடாவில் தரையிறங்கினர். இவர்கள் பின்னர் காணாமல் போயினர்.
1658 – இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.[2]
1713 – அகாடியாவின் பிரெஞ்சுக் குடிகள் பிரித்தானியாவுடன் பற்றுறுதியை ஏற்படுத்த ஓராண்டு காலம் தவணை கொடுக்கப்பட்டது. இல்லையேல் அவர்கள் நோவா ஸ்கோசியாவை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டனர்.
1757 – பிளாசி சண்டை: ராபர்ட் கிளைவ் தலைமையிலான 3,000 படையினர் சிராச் உத் தவ்லா தலைமையிலான 50,000 இந்தியப் படையினரைத் தோற்கடித்தனர்.
1760 – ஏழாண்டுப் போர்: லாண்டிசட் சமரில் ஆஸ்திரியா புருசியாவைத் தோற்கடித்தது.
1794 – உருசியாவின் இரண்டாம் கத்தரீன் கீவ் நகரில் யூதர்கள் குடியேற அனுமதி வழங்கினார்.
1865 – இலங்கையில் இராணுவ செலவீனங்களை விசாரிக்கும் பொருட்டு அரச ஆணைக்குழு அமைக்கப்பட்டது.[3]
1868 – தட்டச்சுக் கருவி கண்டுபிடிப்புக்கான காப்புரிமத்தை கிறித்தோபர் சோலசு பெற்றார்.
1894 – பியர் தெ குபர்த்தென்னின் முன்னெடுப்பில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு பாரிசில் அமைக்கப்பட்டது.
1940 – இட்லர் மூன்று மணித்தியால சுற்றுப் பயணமாக பாரிசு சென்றார். ஒரேயொரு தடவை மட்டுமே அவர் பாரிசு சென்றார்.
1940 – என்றி லார்சன் வடமேற்குப் பெருவழியால் மேற்கில் இருந்து கிழக்கு வரையான பயணத்தை வான்கூவரில் இருந்து ஆரம்பித்தார்.[4]
1941 – இலித்துவேனிய செயற்பாட்டு முன்னணி சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்து, இடைக்கால அரசை அமைத்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் போர் வானூர்தி வேல்சில் தவறுதலாகத் தரையிறங்கிய போது கைப்பற்றப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுசுவித்சு வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.
1946 – கனடாவின் வான்கூவர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1960 – பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
1961 – பனிப்போர்: அண்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடை செய்யும் அண்டார்டிக்கா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1967 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் சோவியத் பிரதமர் அலெக்சி கொசிஜினை நியூ செர்சியில் சந்தித்தார்.
1980 – இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார்.
1985 – அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.
2001 – பெருவின் தெற்கே இடம்பெற்ற 8.4 Mw நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 74 பேர் உயிரிழந்தனர்.
2010 – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது.
2016 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் 52 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
2017 – பாக்கித்தானில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 96 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1616 – ஷா ஷுஜா, முகலாய இளவரசர் (இ. 1661)
1668 – கியாம்பாட்டிஸ்டா விக்கோ, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1744)
1876 – க. பாலசிங்கம், இலங்கை அரசியல்வாதி (இ. 1952)
1877 – நார்மன் பிரிட்சர்டு, இந்திய-ஆங்கிலேய நடிகர் (இ. 1929)
1889 – அன்னா அக்மதோவா, உக்ரைனிய-உருசியக் கவிஞர் (இ. 1966)
1906 – திரிபுவன் வீர விக்ரம் ஷா, நேபாள மன்னர் (இ. 1955)
1912 – அலன் டூரிங், ஆங்கிலேயக் கணிதவியலாளர், கணினி அறிவியலாளர் (இ. 1954)
1922 – ராஜகோபால தொண்டைமான், புதுக்கோட்டை சமத்தான அரசர் (இ. 1997)
1925 – ஜான் ஷெப்பர்ட் பேரோன், தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் (இ. 2010)
1924 – ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அரசுத்தலைவர் (இ. 1993)
1934 – வீரபத்ர சிங், இந்திய அரசியல்வாதி
1937 – மார்ட்டி ஆத்திசாரி, பின்லாந்தின் 10வது அரசுத்தலைவர், நோபல் பரிசு பெற்றவர்
1940 – வில்மா ருடோல்ஃப், அமெரிக்க ஓட்ட வீரர் (இ. 1994)
1943 – வின்டு செர்ப்பு, அமெரிக்க இணைய முன்னோடி
1946 – இறபீக் சாமி, சிரிய-செருமனிய எழுத்தாளர்
1972 – ஜீனடின் ஜிதேன், பிரான்சியக் காற்பந்தாட்ட வீரர்
1974 – ஜோல் எட்கர்டன், ஆத்திரேலிய நடிகர்
1980 – ராம்நரேஷ் சர்வான், கயானாத் துடுப்பாளர்
1980 – பிரான்செசுகா இசுகியவோனி, இத்தாலிய டென்னிசு வீராங்கனை

இறப்புகள்

79 – வெசுப்பாசியான், Roman உரோமைப் பேரரசர் (பி. 9)
1836 – ஜேம்ஸ் மில், இசுக்காட்டிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (பி. 1773)
1891 – வில்கெம் எடுவர்டு வெபர், செருமானிய இயற்பியலாளர் (பி. 1804)
1891 – நார்மன் இராபர்ட் போகுசன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1829)
1939 – கிஜூபாய் பதேக்கா, இந்தியக் கல்வியாளர் (பி. 1885)
1953 – சியாமா பிரசாத் முகர்ஜி, இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (பி. 1901)
1971 – சிறீ பிரகாசா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், நிர்வாகி (பி. 1890)
1980 – சஞ்சய் காந்தி, இந்தியப் பொறியியலாளர், அரசியல்வாதி (பி. 1946)
1983 – மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து, இலங்கை-ஆங்கிலேய கவிஞர், இதழாசிரியர், திறனாய்வாளர், பதிப்பாளர் (பி. 1915)
1984 – அலெக்சாண்டர் செமியோனவ், உருசிய ஓவியர் (பி. 1922)
1995 – யோனாசு சால்க், அமெரிக்க உயிரியலாளர், மருத்துவர் (பி. 1914)
2015 – நிர்மலா ஜோஷி, இந்திய கத்தோலிக்க அருட் சகோதரி (பி. 1934)
2015 – பிரபுல் பிட்வாய், இந்திய இதழாளர், செயற்பாட்டாளர் (பி. 1949)

சிறப்பு நாள்

தந்தையர் தினம் (நிக்கராகுவா, போலந்து)
பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள்
வெற்றி விழா (எசுத்தோனியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!