இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மே 28)

உலக பட்டினி நாள் பட்டினி என்றால் என்ன? பட்டினி (Hunger) என்பது உடல் நலத்திற்கு தேவையான போதுமான அளவு உணவு அல்லது ஊட்டச்சத்து கிடைக்காத நிலையைக் குறிக்கிறது. இது உடல் பலவீனம், ஊட்டச்சத்து குறைபாடு, நோய்கள் மற்றும் தீவிர நிலைகளில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். பட்டினி இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படலாம்: கடுமையான பட்டினி (Acute Hunger): உணவு உட்கொள்ளல் மிகவும் குறைவாக இருக்கும் நிலை, இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். நாள்பட்ட பட்டினி (Chronic Hunger): நீண்டகால ஊட்டச்சத்து குறைபாடு, இது உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கிறது, குறிப்பாக குழந்தைகளுக்கு. பட்டினியின் காரணங்கள் பலவாக இருக்கலாம்: வறுமை, மோதல்கள், இயற்கை பேரழிவுகள், உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் உள்ள பிரச்சினைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வு, மற்றும் காலநிலை மாற்றம். உலக பட்டினி நாள் ஏன்? உலக பட்டினி நாள் (World Hunger Day) ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் 2011 இல் The Hunger Project என்ற அமைப்பால் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கங்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: உலகளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்துவது. நிலையான தீர்வுகளை ஊக்குவித்தல்: உணவு பாதுகாப்பு, வேளாண்மை மேம்பாடு, மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான நிலையான முயற்சிகளை மேற்கொள்ள ஊக்குவிப்பது. சமூக ஈடுபாடு: தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களை ஒன்றிணைத்து பசிக்கு எதிரான செயல்பாடுகளை முன்னெடுப்பது. ஐ.நா. நிலையான வளர்ச்சி இலக்குகள்: 2030 ஆம் ஆண்டுக்குள் பசியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற ஐ.நா.வின் இரண்டாவது நிலையான வளர்ச்சி இலக்கை (SDG 2: Zero Hunger) ஆதரிப்பது. முக்கிய புள்ளிவிவரங்கள்: ஐ.நா.வின் 2023 அறிக்கையின்படி, உலகில் சுமார் 783 மில்லியன் மக்கள் பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பட்டினி மிகவும் தீவிரமாக உள்ளது. குழந்தைகளில் 22% (149 மில்லியன்) வயது வளர்ச்சி குறைபாட்டால் (stunting) பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நாளில் செய்யப்படும் முயற்சிகள்: நிதி திரட்டல்: உணவு வங்கிகள், அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள். விழிப்புணர்வு பிரச்சாரங்கள்: சமூக ஊடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் பசி குறித்து பேசுதல். கல்வி மற்றும் செயல்பாடுகள்: உள்ளூர் சமூகங்களில் உணவு விநியோகம், வேளாண் பயிற்சிகள் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்த கருத்தரங்குகள். நீங்கள் இந்த நாளில் பங்கேற்க விரும்பினால், உள்ளூர் தொண்டு நிறுவனங்களுக்கு உதவலாம், பசி குறித்து விழிப்புணர்வு பரப்பலாம் அல்லது நன்கொடை அளிக்கலாம்.

உலக மாத​வி​டாய் சுகா​தார தினம் மாத​வி​டாய் குறித்து வெளிப்​படை​யாகப் பேசுவ​தில் உள்ள தயக்​கத்​தைப் போக்​கு​வதற்​கும், தவறானப் புரிதல்​களைக்களை​ய​வும், விழிப்​புணர்வை ஏற்​படுத்​த​வும் ஜெர்​மனி​யில் உள்ள வாஷ் யுனைடெட் தொண்டு நிறு​வனத்​தால் 2013-ல் மாத​வி​டாய் தினம் தொடங்​கப்​பட்​டு, 2014 முதல் இந்த தினம் கடைபிடிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த ஆண்​டின் மாத​வி​டாய் சுகா​தார தினத்​தின் கருப்​பொருள் ‘மாத​வி​டாய் விழிப்​புணர்​வுமிக்க உலகம்’ என்​ப​தாகும். மாத​வி​டாய் சுகா​தார தினம் மருத்​து​வர்​கள் கூறிய​தாவது: பெண்​களுக்கு மாத​வி​டாய் என்​பது 28 முதல் 35 நாட்​களுக்​குள் சுழற்சி முறை​யில் நடைபெறக்​கூடியது. மாத​வி​டாய் 3 நாட்​கள் முதல் 5 நாட்​கள் இருக்​கும். மாத​வி​டாய் காலத்​தில் பெண்​களுக்கு சுகா​தா​ரம் முக்​கி​யம் என்​ப​தால் இந்த தினம் கடைப்​பிடிக்​கப்​படு​கிறது. அந்​தக்​காலத்​தில் மாத​வி​டாய் காலத்​தில் வீட்​டில் உள்ள பழைய துணி​களை கிழித்​துப் பயன்​படுத்தி வந்​தனர். தற்​போது ஏற்​பட்​டுள்ள விழிப்​புணர்​வால் சானிட்​டரி நாப்​கின்​,​டாம்​பூன், மென்​ஸ்ட்​ரு​வல் கப் போன்​றவற்​றைப் பயன்​படுத்​துகின்​றனர். பள்​ளி​களி​லும் மாணவி​களுக்கு சானிட்​டரி நாப்​கின் வழங்​கப்​படு​கிறது. துணி​களைப் பயன்​படுத்​து​வது சுகா​தா​ரமற்ற முறை​யாகும். இதனால், தொற்​றுப் பாதிப்பு ஏற்பட வாய்ப்​புள்​ளது. அதனால், மாத​வி​டாய் காலத்​தில் யாரும் துணி​களைப் பயன்​படுத்த வேண்​டாம். மாத​வி​டாய் காலத்​தில் சுகா​தா​ரம் முக்​கி​யம் என்​பதை ஒவ்​வொரு பெண்​ணும் கவனத்​தில் கொள்​ளவேண்​டும். மாத​வி​டாய் காலங்​களில் வயிற்று வலி, கை, கால்​களில் வலி​போன்ற உடல் உபாதைகள் இருக்​கும். அதற்​காக பயப்பட வேண்​டாம். மாத​வி​டாய் காலம் முடிந்​தவுடன் சரி​யாகி விடும். அதி​க​மான வலி இருந்​தால் மருத்​து​வரை அணுகலாம். வழக்​க​மாக சாப்​பிடும் உணவு​களை சாப்​பிடலாம். அதில் எவ்​விதக் கட்​டுப்​பாடும் இல்​லை. சிறிய அளவி​லான உடற்​ப​யிற்சி மேற்​கொள்​ளலாம். யோகா செய்​ய​லாம். வழக்​க​மாக மேற்​கொள்​ளும் செயல்​பாடு​களை மாற்ற வேண்​டிய​தில்​லை. அந்​தக்​காலத்​தில் மாத​வி​டாய் காலத்​தில் வலி இருப்​ப​தா​லும், சோர்​வாகக் காணப்​படு​வார்​கள் என்​ப​தா​லும், எந்த வேலை​யை​யும் செய்ய வி​டா​மல்​ தனிமைப்​படுத்​திகொள்​வது வழக்கம்.

PLO –பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பு அரபு லீக் இனால் உருவாக்கப்பட்டதாகும். இதன் நிறுவனத் தலைவராக யாசர் அராபத் பதவி வகித்தார். இவ்வமைப்பினுடைய துவக்க கால குறிக்கோள், ஆயுதப்போராட்டம் ஒன்றின் மூலம் இஸ்ரேல் நாட்டு அரசினை அழித்தொழித்து சுதந்திர பலஸ்தீன நாட்டினை ஜோர்தான் ஆற்றுக்கும் மத்தியதரைக்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் உருவாக்குவதாகவே இருந்தது. ஆயினும் பின்னர் இஸ்ரேலும் பலஸ்தீனமுமாக இரு நாடுகள் அருகருகே இருப்பதை பரிந்துரைக்கும் இரு நாட்டு தீர்வு என்ற கருத்தை ஏற்று அதனையே தனது குறிக்கோளாக ஏற்றுக் கொண்டது. , பாலஸ்தீன அரபிக்கள் தமது சொந்த நிலத்தின் மீது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் கோரும் உரிமை கொண்டவர்கள் என்ற அடிப்படைக் கொள்கையை நிலைநாட்டிட அடிக்கடி இஸ்ரேலுடன் இவ்வமைப்பு மோதவேண்டியுள்ளது.

விட்டலாச்சாரியா காலமான தினமின்று! விஜயா வாஹிணி ஸ்டுடியோ இதில் நிரந்தரமாக செட் வைத்திருந்தவர்கள் இருவர் ஒருவர் சாண்டோ சின்னப்பா தேவர் மற்றவர் விட்டலாச்சார்யா இவர்கள் இருவரும் சினிமாவில் புதிய உத்திகள் கண்டுபிடித்து உழைத்து வளர்ந்தவர்கள். இதில் விட்டலாச்சார்யா சிறந்த திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தமிழ் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நிறைய திரைப்படங்களை தயாரித்து இயக்கியிருக்கிறார். அதாவது சில திரைப்படங்கள், பார்க்கும் பார்வையாளர்கள் எந்த வயதையொத்தவர்களாக இருந்தாலும், அவர்களை குழந்தையாக மாற்றி படத்தை ரசிக்க வைக்குமளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். உதாரணத்திற்கு, அக்காலத்தில் வெளிவந்த விட்டலாச்சார்யா திரைப்படங்களை சொல்லலாம். ‘மாய மோதிரம்’, ‘ஜெகன் மோகினி’ போன்ற திரைப்படங்கள் அக்காலத்தைய ஹாரி பாட்டர்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால், ஆனால் அவைகள் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்படவில்லை..! பெரியவர் முதல் சிறியவர் வரை குழந்தையாய் மாறி ரசிக்கும்படியாய் அமைந்த திரைப்படங்கள் அவை. தன்னிடம் இருந்த குறைந்த பணத்தை வைத்துக் கொண்டு தமிழ் தெலுங்கு சினிமாவில் பல அதிசயங்கள் செய்தவர். எலும்புக் கூடுகள் கதை (gadhai)கத்தி கபட ஈட்டிஇரும்பு சங்கிலி கேடயம் பாம்பு தேளு இவைகள் தான் இவரது சொத்து. மாயா ஜாலம் மந்திரவாதி பாம்பு சூப் கரடி சண்டை இவைகள் இவரது தொழில் நுட்பம் (கட்டிங் கண்ணையா) ராஜாவின் உயிர் ஒரு கிளி கழுத்தில் இருக்கும், அந்த கிளியைக் கண்டுபிடிக்க pass word இருக்கும். ஒரு சிறுவன் ஏழு கடலைக் கடந்து கிளியின் பாஸ்வேர்ட் எல்லாம் கண்டறிந்து அதன் கழுத்தை திருக வேண்டும் திருகினால் ராஜா உயிர் பிழைப்பான் இப்படி கதையை வைத்து குறிப்பாக பெண் ரசிகர்களைக் கொண்டவர் Steven Spielber (அல்லது ஹாரிபாட்டர் இயக்கியவ்ர்) போன்றவர்கள் உலக சினிமா சந்தையில் கோடிக் கணக்கில் பெரும் பண செலவில் செய்த பல சாதனைகளை சில லட்சம் பண செலவில் எடுத்து சாதனை செய்தவர் என் டி ராமராவ், ராஜநளா, காந்த ராவ், ரேலங்கி, பாரதி, ராஜ்ஸ்ரீ, கிருஷ்ணவேணி, ஜெய மாலினி, விஜயலலிதா இப்படி பலருக்கு வாழ்வு தந்தவர் . இவர்கள் இவரது படங்களில் நிரந்தர நடிகர்கள் இவர் படத்தைக் காணும் பெண்கள் அழ வேண்டும் குழந்தைகள் சிரிக்க வேண்டும் டங்க டக்கர டங்க டக்கர டான்ஸ் காட்சி வேண்டும். படம் முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது மன மகிழ்வுடன் செல்லவேண்டும் எல்லை மீறாத ஆபாசமும் கலந்துக் கட்டுவது இவரது பாணி. அன்னாருக்கு ஆந்தை சினிமா அப்டேட் குழு கட்டிங் கண்ணையா ரிப்போர்ட் வாயிலாக அஞ்சலி செலுத்துகிறது.

நேபாளம்= 240 ஆண்டுகால மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, குடியரசாக அறிவிக்கப்பட்டது. இது நேபாளத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல் நிகழ்வாகும். இதற்கு முன்னர், நேபாளம் 1768 முதல் ஷா வம்சத்தின் கீழ் மன்னராட்சியாக இருந்தது. கடைசி மன்னரான க்யானேந்திராவின் ஆட்சி, பல அரசியல் மற்றும் சமூக மாற்றங்களால் சவாலுக்கு உள்ளானது. பின்னணி: 2001 ராஜ குடும்ப படுகொலை: மன்னர் பீரேந்திராவும் அவரது குடும்பத்தினரும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் க்யானேந்திரா மன்னராகப் பொறுப்பேற்றார். மாவோயிஸ்ட் கிளர்ச்சி: 1996 முதல் 2006 வரை, மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் மன்னராட்சிக்கு எதிராகப் போராடினர், இது நாட்டில் அரசியல் நெருக்கடியை உருவாக்கியது. 2006 மக்கள் இயக்கம்: மக்களின் புரட்சி (People’s Movement II) மன்னரின் அதிகாரங்களைக் குறைத்து, ஒரு இடைக்கால அரசியலமைப்பை உருவாக்க வழிவகுத்தது. குடியரசு அறிவிப்பு: 2007-ல் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசியலமைப்பின் கீழ், 2008-ல் அரசியலமைப்பு சபைத் தேர்தல் நடைபெற்றது. மே 28, 2008 அன்று, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியலமைப்பு சபை, 564 உறுப்பினர்களில் 560 பேர் ஆதரவுடன் மன்னராட்சியை ஒழித்து, நேபாளத்தை ஒரு கூட்டாட்சி மக்களாட்சிக் குடியரசாக அறிவித்தது. க்யானேந்திரா மன்னர் அதிகாரத்தை இழந்து, அரண்மனையை விட்டு வெளியேறினார். பின்விளைவுகள்: நேபாளம் ஒரு மதச்சார்பற்ற, கூட்டாட்சி குடியரசாக மாறியது. முதல் குடியரசுத் தலைவராக ராம்பரன் யாதவ் 2008 ஜூலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாற்றம் நேபாளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு வழிவகுத்தது, இருப்பினும் பல சவால்களும் எழுந்தன. இந்த நிகழ்வு, நேபாள மக்களின் மக்களாட்சிக்கான விருப்பத்தையும், நவீன அரசியல் முறைக்கு மாறுவதற்கான அவர்களின் முயற்சியையும் பிரதிபலிக்கிறது.

என்.டி.ராமாராவ் பிறந்த தினம் என்.டி.ஆர். என்று அழைக்கப்படும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் 1923ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி ஆந்திர மாநிலம் நிம்மகுரு என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் நன்டமுரி தாரக ராமாராவ். இவர் 1947-ல் மன தேசம் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அதன் பிறகு தயாரிப்பாளர் பி.ஏ.சுப்பாராவின் ‘பல்லேடுரி பில்ல” படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். 1951-ல் வெளிவந்த ‘பாதாள பைரவி” திரைப்படம் இவருக்கு அபார வெற்றியை பெற்றுத் தந்தது. 1968-ல் தேசிய விருதையும், பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார். 1980-களில் திரையுலகிலிருந்து ஓய்வு பெற்று தீவிர அரசியலில் ஈடுபட்ட இவர் 1983-1994 ஆண்டுகளுக்கு இடையே 3 முறை ஆந்திர மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார். மக்களின் இதயத்தில் இன்றும் வாழ்ந்து வரும் என்.டி.ராமாராவ் தனது 72வது வயதில் (1996) மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!