பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும் மத்திய உள்துறை மந்திரி கூறியுள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அளித்த பங்களிப்பு பாராட்டத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலை ஜியின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு செல்கிறார். பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும் என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து விடைபெறுகிறார் அண்ணாமலை. 2021 ஜூலை 8-ல் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை 4 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார்.
அண்ணாமலை தலைமையில் 2024 மக்களவைத் தேர்தலை தமிழ்நாடு பாஜக எதிர்கொண்டது.
இதனிடையே தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. தமிழக பாஜகவின் 13ஆவது தலைவராக தேர்வாகி உள்ளார் நயினார் நாகேந்திரன்.