வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 09)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 9 கிரிகோரியன் ஆண்டின் 99 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 100 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 266 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

190 – தொங் சூவோவும் அவனது படையினரும் தலைநகர் இலுவோயங்கை தீக்கிரையாக்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினர்.
1241 – மங்கோலியப் படையினர் போலந்து மற்றும் செருமனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.
1288 – மங்கோலியரின் வியட்நாம் படையெடுப்பு: பாக் டாங் (இன்றைய வடக்கு வியட்நாம்) சமரில் யுவான் படைகள் திரான் படைகளிடம் தோற்றன.
1413 – ஐந்தாம் என்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினார்.
1440 – பவேரியாவின் கிறித்தோபர் டென்மார்க் மன்னராக முடிசூடினார்.
1609 – எண்பதாண்டுப் போர்: எசுப்பானியாவும் இடச்சுக் குடியரசும் 12 ஆண்டுகள் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1860 – எதுவார்து-லேயோன் இசுக்காட் டெ மார்ட்டின்வில் என்பவர் தனது போனோட்டோகிராஃப் இயந்திரத்தில் முதல் தடவையாக மனித ஒலியைப் பதிவு செய்தார்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தளபதி ராபர்ட் ஈ. லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வர்ஜீனியாவில் யுலிசீஸ் கிராண்ட்டிடம் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1916 – முதலாம் உலகப் போர்: வெர்டன் சமரில், செருமனிப் படைகள் தமது மூன்றாவது தாக்குதலை ஆரம்பித்தன.
1937 – கமிக்காசு என்ற வானூர்தி இலண்டன் வந்தது. இதுவே சப்பானில் தயாரிக்கப்பட்டு ஐரோப்பாவுக்கு வந்த முதலாவது வானூர்தி ஆகும்.
1940 – இரண்டாம் உலகப் போர்: வெசெரியூபங் நடவடிக்கை: டென்மார்க், நோர்வே மீது செருமனி தாக்குதலை ஆரம்பித்தது.
1940 – விட்குன் குவிசிலிங்கு நோர்வேயின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை இலங்கையின் திருகோணமலை நகரைத் தாக்கியது.
1942 – இரண்டாம் உலகப் போர்: பட்டான் சமர் முடிவுற்றது. சப்பானின் 1-ஆம் வான்படை இந்தியப் பெருங்கடலில் நடத்திய தாக்குதலில் பிரித்தானியாவின் எர்மெசு என்ற வானூர்தித் தாங்கிக் கப்பல், ஆத்திரேலியாவின் வம்பயர் என்ற போர்க் கப்பல் ஆகியன மூழ்கின.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் அட்மிரல் சீர் என்ற போர்க்கப்பல் பிரித்தானிய வான்படையால் மூழ்கடிக்கப்பட்டது.
1947 – அமெரிக்காவில் டெக்சாஸ், ஒக்லகோமா, மற்றும் கேன்சசு மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் உயிரிழந்தனர். 970 பேர் காயமடைந்தனர்.
1948 – எருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் சீயோனிசத் துணை இராணுவக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1952 – ஊகோ பாலிவியானின் அரசு பொலிவிய தேசியப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் வேளாண்மைச் சீர்திருத்தம், பொது வாக்குரிமை, தேசியமயமாக்கல் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன.
1957 – சூயெசு நெருக்கடி: எகிப்தில், சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
1957 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலன்ப்பிரச்சினைத் தீர்வுக்காக ஏற்றுக் கொண்ட பண்டார-செல்வா ஒப்பந்தத்தை பௌத்த பிக்குகளின் எதிர்ப்பை அடுத்து மீளப்பெறுவதாக அறிவித்தார்.[1]
1959 – மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.
1967 – போயிங் 737 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
1969 – முதலாவது பிரித்தானியத் தயாரிப்பான கான்கோர்டு 002 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
1984 – யாழ்ப்பாணம் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தினரின் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.
1984 – இலங்கை இராணுவ வண்டி மீது யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.
1989 – திபிலீசி படுகொலை: ஜோர்ஜியாவில் சோவியத்-எதிர்ப்புப் போராட்டத்தின் போது சோவியத் இராணுவத்தினரால் மக்கள் தாக்கப்பட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
1991 – ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.
1992 – முன்னாள் பனாமா அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது.
2003 – பக்தாத் நகரை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
2005 – இளவரசர் சார்லசு கார்ன்வால் இளவரசி கமில்லாவைத் திருமணம் புரிந்தார்.
2009 – சியார்சியா தலைநகர் திபிலீசியில், 60,000 பேருக்கு மேல் மிக்கைல் சாக்கஷ்விலி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
2013 – ஈரானில் 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர், 850 பேர் காயமடைந்தனர்.
2017 – குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்பு: எகிப்தில் டன்டா, அலெக்சாந்திரியா நகரங்களில் உள்ள கோப்திக்குத் தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் 47 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1285 – புயந்து கான், சீன, மங்கோலியப் பேரரசர் (இ. 1320)
1336 – தைமூர், துருக்கிய-மங்கோலியப் பேரரசர் (இ. 1405)
1893 – ராகுல சாங்கிருத்யாயன், இந்திய மொழியியலாளர் (இ. 1963)
1899 – முசிரி சுப்பிரமணிய ஐயர், கர்நாடக இசைப் பாடகர் (இ. 1975)
1902 – ஓல்கா பெரோவ்ஸ்காயா, சோவியத் குழந்தைகள் எழுத்தாளர் (இ. 1961)
1903 – கிரிகோரி குட்வின் பிங்கஸ், அமெரிக்க உயிரியலறிஞர்.(இ. 1967)
1911 – பால் வெயிஸ், செருமன்-பிரித்தானிய கணித, கோட்பாட்டு இயற்பியலாளர் (இ. 1991)
1917 – பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை, இலங்கைத் தமிழ் ரோமன் கத்தோலிக்க ஆயர் (இ. 2003)
1918 – ஜோர்ன் உட்சன், சிட்னி ஒப்பேரா மாளிகையை வடிவமைத்த தென்மார்க்கு கட்டிடக்கலைஞர் (இ. 2008)
1921 – மேரி ஜாக்சன், ஆப்பிரிக்க-அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியியலாளர் (இ. 2005)
1923 – நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர், அரசியல்வாதி (இ. 2014)
1926 – ஹியூ ஹெஃப்னர், அமெரிக்கப் பதிப்பாளர்
1929 – சரண் ராணி பாக்லீவால், இந்திய இசைக்கலைஞர் (இ. 2008)
1948 – ஜெயபாதுரி, இந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி
1954 – ஆதித்தியன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2017)
1967 – சாம் ஆரிசு, அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர், அறிவியலாளர்
1968 – ஜெய் சந்திரசேகர், அமெரிக்க நடிகர்
1971 – விக்னேஷ், தமிழ்த் திரைப்பட நடிகர்
1974 – ஜென்னா ஜேமிசன், அமெரிக்க நடிகை
1982 – ஜே பருச்செல், கனடிய நடிகர்
1987 – ஜெசி மெக்கார்ட்னி, அமெரிக்கப் பாடகர், நடிகர்
1988 – சுவரா பாஸ்கர், இந்திய நடிகை
1990 – கிறிஸ்டென் ஸ்டீவர்ட், அமெரிக்க நடிகை

இறப்புகள்

1626 – பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய அரசியல்வாதி, மெய்யியலாளர் (பி. 1561)
1882 – டேன்டி கெய்பிரியல் ரோசட்டி, ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (பி. 1828)
1918 – நிக்கோ பிரொசுமானி, சியோர்சிய ஓவியர் (பி. 1862)
1959 – பிராங்க் லாய்டு ரைட், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (பி. 1867)
2007 – தோரித் கோப்லீட், அமெரிக்க வானியலாளர் (பி. 1907)

சிறப்பு நாள்

செருமானியப் படையெடுப்பு நினைவு நாள் (டென்மார்க்)
பக்தாது விடுதலை நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்)7)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!