இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 31)

முதலாவது பூமி நேரம் நிகழ்ச்சி சிட்னியில் தொடங்கப்பட்ட நாள்: வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கக் கோரும் ஒரு நிகழ்வாக உலகம் முழுவதும் பூமி நேரம் வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்திவைக்கக் கோரும் ஒரு நிகழ்வாக உலகம் முழுவதும் பூமி நேரம் (Earth Hour) கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு ஆஸ்திரேலியாவின் இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது. முதலாவது எர்த் ஹவர் நிகழ்வு 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி சிட்னியில் நடைபெற்றது. 2008-ம் ஆண்டு உலகம் முழுவதும் 400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓபரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.

சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்ட நாள் இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும். லூனா திட்டம் (Luna programme) என்பது சோவியத் ஒன்றியத்தினால் 1959 இலிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். இப்பயணத் திட்டம் “லூனிக்” என்றும் சிலவேளைகளில் கூறப்படுவதுண்டு. பதினைந்து லூனாக்கள் வெற்றிகரமானவையாகும். இவை சந்திரனைச் சுற்றவோ அல்லது தரையிறங்கவோ அனுப்பப்பட்டவை ஆகும். விண்ணில் இறங்கிய முதலாவது விண்கலம் லூனா 2 ஆகும். இவை சந்திரனில் பல ஆய்வுகளையும் நிகழ்த்தின. வேதியியல் பகுப்பாய்வு, ஈர்ப்பு, வெப்பநிலை, மற்றும் கதிரியக்கம் போன்ற பல ஆய்வுகளை நடத்தின.

லைமன் ஸ்ட்ராங் ஸ்பிட்சர் (Lyman Strong Spitzer Jr.) – 27வது நினைவு நாள்) குறிப்பிட்ட சாதனைகள்: ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் தந்தை – விண்வெளியில் தொலைநோக்கி அமைக்கும் யோசனையை முதன்முதலில் முன்மொழிந்தவர் (1946). பிளாஸ்மா இயற்பியல் & கலப்பு அணு உலை (Fusion Energy): – “ஸ்பிட்சர் டெஸ்ட் ரியாக்டர்” கண்டுபிடிப்பு. விண்மீன் உருவாக்கம் பற்றிய ஆராய்ச்சி – “ஸ்பிட்சர் விண்வெளித் தொலைநோக்கி” (2003) அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. தமிழ் விஞ்ஞான உலகத்துடன் தொடர்பு: இவரது கோட்பாடுகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி (ISRO) மற்றும் பிளாஸ்மா ஆராய்ச்சி மையங்களில் (எ.கா: ITER இணைந்த புரோஜெக்ட்) பயன்படுத்தப்படுகின்றன. நினைவு மொழி: “விண்வெளியைப் பார்க்கும் மனிதனின் கனவுகளுக்கு ஸ்பிட்சர் வித்திட்ட விஞ்ஞான விதைகள், இன்று வானியலின் பொற்காலமாக மலர்ந்துள்ளன!” P.S: இன்றைய தினம் NASA மற்றும் ஸ்பேஸ் டெலிஸ்கோப்புகளின் சாதனைகளை நினைவுகூரும் நாள்!

பணியிலிருந்த அமெரிக்காவின் கடைசிப் போர்க்கப்பலான மிசவுரி, கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற நாள் மார்ச் 31. அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே இதுதான் கடைசிப் போர்க்கப்பல்! மிகப்பெரிய பீரங்கிகளுடன், தாக்குதல் நடத்துவதற்காகவே உருவாக்கப்படுபவைதான் போர்க்கப்பல்கள். கடல் வணிகம் என்பதைக் கடந்து, பொருளாதார வாய்ப்புகளுக்காக குடியேற்றங்களை உருவாக்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில், 17ஆம் நூற்றாண்டில்தான் உலகின் முதல் போர்க்கப்பல் என்பது உருவாக்கப்பட்டது. எதிரிக் கப்பல்களை மட்டுமின்றி, புதிய நிலப்பரப்புகளுக்கு அருகில் செல்லும்போது இக்கப்பல்களில் உள்ள பீரங்கிகளால் தாக்க முடிந்ததால் இவை மிகப்பெரிய முன்னேற்றமாக இருந்தன. பாய்மரங்களை நம்பிய, மரக் கலங்களாகவே இவை இருந்த நிலையில், நீராவியால் இயங்கிய முதல் போர்க்கப்பலான நெப்போலியன் 1850இலும், இரும்பாலான முதல் போர்க்கப்பலான க்ளோரீ 1859இலும் ஃப்ரெஞ்ச்சுக் கடற்படையால் உருவாக்கப்பட்டன. ரஷ்ய-ஜப்பானியப் போரின்போது, 1905இல் நடைபெற்ற ட்சுஷிமா நீரிணை யுத்தம், நேரடியாகப் போர்க்கப்பல்களுக்கிடையே நடைபெற்று, அவற்றாலேயே முடிவுக்கும் வந்த, உலகின் முதலும், கடைசியுமான யுத்தமாகியது. அதன் அனுபவங்களைக்கொண்டு இங்கிலாந்து, 1906இல் உருவாக்கிய ட்ரெட்நாட், போர்க்கப்பல்களுக்கான சீர்தரமாகியது. ஒரு நாட்டின் பலம் என்பதை போர்க்கப்பல்களே நிர்ணயிக்கும் என்பதான நிலையேற்பட்டு, ஏராளமான போர்க்கப்பல்களை ஒவ்வொரு நாடும் தங்கள் கடற்படையில் வைத்துக்கொள்ளத் தொடங்கின. முதல் உலகப்போருக்குப்பின் எவ்வளவு சக்தியுள்ள, எத்தனைப் போர்க்கப்பல்களை ஒவ்வொரு நாடும் வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டாலும், அவை பெரும்பாலும் மீறப்பட்டன. இரண்டாம் உலகப்போர் முடியும்போது அமெரிக்கக் கடற்படையிடம் மட்டும் 6,768 (பல்வேறு)கப்பல்கள் இருந்தன. முத்துத் துறைமுகத் தாக்குதலில் ஏராளமான அமெரிக்கக் கப்பல்கள் சேதமுற்று, பயன்படுத்த முடியாதவையாயின. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்படும் கப்பல்களை, மலிவான டார்ப்பீடோக்கள், கடற்கண்ணி வெடிகள் தொடங்கி, விமானங்களாலும், வழிநடத்தப்படும் ஏவுகணைகளாலும் எளிதில் அழிக்க முடிந்தது. நாடுபிடித்த குடியேற்றக் காலங்களில், கடற்கரைப் பகுதிகளைத் தாக்குவதே முக்கியமாக இருந்த நிலை, இப்போது மாறிவிட, உள்நாட்டுக்குள் தாக்க போர்க்கப்பல்களால் இயலவில்லை. இவற்றால், போர்க்கப்பல்கள் என்பவை பயனற்றவையாகிவட, மிகப்பெரிய போர்க்கப்பல்களைக் கைவிட்டு, சிறிய ரக டெஸ்ட்ராயர் கப்பல்கள், விமானந்தாங்கிக் கப்பல்கள், ஏவுகணைகளை ஏவும் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், நீரிலும் நிலத்திலும் தாக்கும் கப்பல்கள் உள்ளிட்ட ஏராளமான புதிய வகைக் கப்பல்களுக்கு கடற்படைகள் மாறிவிட்டன. கடற்படை என்பது பெயரானாலும், 11 விமானந்தாங்கிக் கப்பல்கள் உட்பட 290 கப்பல்களைக் கொண்டுள்ள அமெரிக்கக் கடற்படையிடம், சுமார் நான்காயிரம் போர் விமானங்கள் உள்ளன என்பது, போர் என்பதன் வடிவத்திலேயே ஏற்பட்டுள்ள மாற்றத்தை விளக்குகிறது!

ஈபெல் கோபுரம்: உலகின் மிகவும் பிரபலமான கட்டிடச் சின்னம் தொடக்க விழா நாள் சுவாரஸ்யமான தகவல்கள்: இடம்: பாரிஸ், பிரான்ஸ் உயரம்: 330 மீட்டர் (ஆண்டெனா உட்பட) கட்ட்டிய காலம்: 2 ஆண்டுகள், 2 மாதங்கள், 5 நாட்கள் கட்டிடக்கலைஞர்: குஸ்தாவ் ஈபெல் வரலாற்று முக்கியத்துவம்: 1889 உலகக் கண்காட்சிக்காக கட்டப்பட்டது ஆரம்பத்தில் 20 ஆண்டுகள் மட்டுமே நிற்க திட்டமிடப்பட்டது ரேடியோ ஒலிபரப்புக்கான ஆண்டெனாவாக பயன்படுத்தப்பட்டு இன்றும் நிலைத்துள்ளது தொடக்க விழா: 1889 மார்ச் 31 அன்று குஸ்தாவ் ஈபெல் 1,000 விருந்தினர்களுடன் கோபுரத்தின் முதல் தளத்தில் கொண்டாட்டம் நடத்தினார் தமிழ்நாட்டுடன் இணைப்பு: சென்னை எழும்பூரில் உள்ள “ஈபெல் மேம்பாலம்” இதன் வடிவமைப்பில் ஈர்க்கப்பட்டது பல தமிழ் படங்களில் (எ.டு: “சிவாஜி”) இக்கோபுரம் காட்சியளித்துள்ளது நினைவுகூரல்: “இரும்பாலான இந்த அழகான கட்டிடம்=மனித கற்பனைக்கும் பொறியியல் திறனுக்கும் ஒரு அழியாத சான்றாக நிற்கிறது” P.S: இன்று ஈபெல் கோபுரத்தின் 135வது ஆண்டு!

சர்வதேச போதைப்பொருள் சோதனை தினம்.( International Day of Drug Checking ) 2017 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் சோதனை தினம் அனுசரிக்கப்படுகிறது , இது மக்களுக்கு போதைப்பொருள் குறித்த கல்வியையும் அதன் விளைவுகளையும் அறிந்து கொள்ள உதவுகிறது. இதன் நோக்கம்: இந்த நாள் மருந்துகளின் தீங்கு குறைப்பு முயற்சிகளை ஊக்குவிப்பது மற்றும் போதைப்பொருள் தொடர்பான அபாயங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி அவர்களின் குறிக்கோள், உலகம் முழுவதிலும் இருந்து மருந்து சோதனை சேவைகள் மற்றும் நிறுவனங்கள் கிடைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்

உலக காப்புப்பிரதி தினம். (world backup day) 2011, மார்ச் 31 இல் டிஜிட்டல் ஆலோசகர் இஸ்மாயில் ஜாதுனால் தொடங்கப்பட்டது. ஏப்ரல் முட்டாள்கள் தினத்திற்கு முந்தைய நாள் என்பதால் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. உங்கள் தரவை காப்புப்பிரதி எடுக்காமல் இருக்க நீங்கள் முட்டாளாக இருக்க வேண்டுமாம். காப்புப்பிரதி – இது ஒரு ஊடகத்தில் (ஹார்ட் டிஸ்க், ஃபிளாஷ் கார்டு, சிடி-டிஸ்க் மற்றும் பிற மீடியா) தரவின் நகலை உருவாக்குவதாகும், இது முக்கிய நோக்கம் சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால் தரவை மீட்டெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. கணினிகள் மற்றும் மின்னணுவியல் யுகத்தில், அர்த்தமுள்ள தகவல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, சர்வதேச காப்புப்பிரதி தினம் என்பது தகவல்களைப் பாதுகாப்பதை உறுதிசெய்வதில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், தரவு இழப்பிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய தகவல்களைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்று பல்வேறு அணுகுமுறைகள், கருவிகள் மற்றும் நிரல்கள் திறமையான காப்புப் பிரதி அமைப்பை வழங்குகின்றன. இந்த செயல்முறையை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பது ஒவ்வொரு பயனருக்கும் உள்ளது. பொருத்தமான நடவடிக்கைகளை நீங்களே எடுக்கலாம் அல்லது இந்த சிக்கலில் நிபுணர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

சர்வதேச திருநங்கைகள் தினம் இன்று. ( International Transgender Day of Visibility ) 2009 ஆம் ஆண்டில், இந்த நாள் அமெரிக்காவைச் சேர்ந்த திருநங்கை ஆர்வலரான ரேச்சல் கிராண்டால் நிறுவப்பட்டது. ரேச்சல் கிராண்டால், திருநங்கைகளுக்கு ‘தெரியும் தன்மை’ ஒரு நாளைக் கொண்டு வரவும், திருநங்கைகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பாகுபாடுகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாளை நிறுவினார். உலகெங்கிலும் உள்ள திருநங்கைகளின் நெகிழ்ச்சி மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், மார்ச் 31ம் தேதி திருநங்கைகளின் தினமாக கொண்டாடப்படுகிறது. திருநங்கைகளைக் கொண்டாடுவதும், அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மேலும் பாதுகாக்கப்பட்ட உரிமைகளுக்காக வாதிடுவதும், சமூகத்தை மேம்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும். திருநங்கையர் தினத்தை தோற்றுவித்தவர் யார்? 2009 ஆம் ஆண்டில், இந்த நாள் அமெரிக்காவைச் சேர்ந்த திருநங்கை ஆர்வலரான ரேச்சல் கிராண்டால் நிறுவப்பட்டது. பொன்மொழி மற்றும் நாளின் நோக்கம் ரேச்சல் கிராண்டால், திருநங்கைகளுக்கு ‘தெரியும் தன்மை’ ஒரு நாளைக் கொண்டு வரவும், திருநங்கைகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பாகுபாடுகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாளை நிறுவினார். 2014 ஆம் ஆண்டில், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் ஆர்வலர்களால் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது, அதே நேரத்தில் 2015 ஆம் ஆண்டில், சமூக ஊடக பிரச்சாரங்களில் பங்கேற்பதன் மூலம் பல திருநங்கைகள் இந்த நிகழ்வில் பங்கேற்றபோது இந்த நாள் பிரபலமடைந்தது. செல்ஃபிகள் மற்றும் தனிப்பட்ட கதைகளை வெளியிட்டு அந்த நாளை வெற்றிகரமாக வைரலாக்கினர். 2021 ஆம் ஆண்டில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், மார்ச் 31, 2021 ஐ திருநங்கைகளின் பார்வைத்திறன் நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், “அனைத்து திருநங்கைகளுக்கும் முழு சமத்துவத்திற்கான போராட்டத்தில் இணையுமாறு அனைத்து அமெரிக்கர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்” என்று ஒரு பகுதியாக அறிவித்தார். வெள்ளை மாளிகையும் இந்த அறிவிப்பை வெளியிட்டது; இது திருநங்கைகளின் பார்வைத்திறன் தினத்தை அங்கீகரித்து முறையான ஜனாதிபதி அறிவிப்பை வெளியிட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பிடனை உருவாக்கியது அதை ரத்து செய்தார் இப்போதைய அதிபர் என்பது அடிசினல் சேதி.

பொருளாதாரப் பெருமந்தத்தை எதிர்கொள்ள, அமெரிக்கா நடைமுறைப்படுத்திய நியூ டீல்திட்டங்களிலேயே அதிகப் புகழ்பெற்ற திட்டமான, ‘சிவிலியன் கன்சர்வேஷன் கார்ப்ஸ்திட்டத்தைத் தொடங்குவதற்கான, அவசரகால பேணுதல் பணிகள் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் பெருமந்தம், 1929 செப்டம்பர் 4இல் ஏற்பட்ட அமெரிக்கப் பங்குச்சந்தை வீழ்ச்சியிலிருந்து தொடங்கியதாகப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும், 1920களிலேயே தேக்கநிலை தொடங்கி, வேலையின்மை பெரும் பிரச்சினையாக உருவெடுக்கத் தொடங்கியிருந்தது. 1933 மார்ச் 1இல் அமெரிக்கக் குடியரசுத்தலைவராக ஆவதற்கு முன், 1932வரை நியூயார்க் ஆளுனராக இருந்தபோதே, வேலையின்மைக்கு மாற்றான திட்டம் ஒன்றை ஃப்ராங்க்ளின்-டி-ரூஸ்வெல்ட் செயல்படுத்தியிருந்தார். அந்த அனுபவத்திலிருந்தே, அமெரிக்கா முழுமைக்குமான சிவிலியன் கன்சர்வேஷன் கார்ப்ஸ் திட்டத்தை, மார்ச் 21 அன்று, நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். அமெரிக்காவுக்கு முன்பே, ஜெர்மெனி, பல்கேரியா, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஆஸ்திரியா ஆகிய நாடுகள் 1932இலேயே இத்தகைய வேலையின்மை மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தன. உண்மையில், 1931இலேயே இத்தகைய பணி முகாம்களைத் தொடங்கியிருந்த ஜெர்மெனிதான், இத்திட்டத்தைச் செயல்படுத்திய முதல் நாடு! அமெரிக்காவில், 18இலிருந்து 25வரை வயதுடைய இளைஞர்களுக்கு(ஆண்கள் மட்டும்) தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் 17இலிருந்து 28 வயதுவரை விரிவுபடுத்தப்பட்டது. மூன்று லட்சம் பேர்வரை பணிபுரிய வாய்ப்பளிக்கப்பட்ட இத்திட்டத்தில், செயல்படுத்தப்பட்ட 9 ஆண்டுகளில் மொத்தம் சுமார் 30 லட்சம் பேர் பணியாற்றினர். பாலங்கள், கட்டிடங்கள், தடுப்பணைகள் உள்ளிட்டவை கட்டுதல், சாலைகள், பாசனக் கால்வாய்கள், கழிவுநீர்க் கால்வாய்கள் உள்ளிட்டவை அமைத்தல், மரம் நடுதல், சுற்றுலா மையங்கள் உருவாக்குதல் என்று 300 வகையான பணிகளுக்கு இவர்கள் பயன்படுத்தப்பட்டனர். 200 பேர்கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, பணி மேற்கொள்ளப்படவேண்டிய இடங்களில் முகாம்கள் அமைத்து, தங்கவைக்கப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. (இந்தியாவின் தற்போதைய 100 நாள் வேலைத்திட்டத்தையொத்த இத்திட்டத்தில்) அவர்களுக்குத் தங்குமிடம், உடை, உணவு ஆகியவை வழங்கப்பட்டு, மாதத்திற்கு 30 டாலர்கள்(தற்போதைய மதிப்பில் 597 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.44,700) ஊதியம் வழங்கப்பட்டது. இதில் 25 டாலர்கள் நேரடியாக அவர்களது குடும்பத்திற்கு அனுப்பப்பட்டது. ஏராளமான பணிகள் முடிக்கப்பட்டதால் பலன் பெற்றவர்கள் மட்டுமின்றி, அனைத்து மக்களிடையேயும் மாபெரும் வரவேற்புப் பெற்றது இத்திட்டம். இரண்டாம் உலகப்போரின்போது, கட்டாய ராணுவச் சேவை அமெரிக்காவில் அறிமுகமானதால், இத்திட்டத்திற்கு இளைஞர்கள் வராமற்போகவே, 1942இல் நிறுத்தப்பட்டது.

இளவல் இராம.அரங்கண்ணலின் பிறந்த தினம். திராவிடர் இயக்கத் தீரர்,எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிக்கையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், கதை வசன கர்த்தா, தொழிற்சங்கத் தலைவர், குடிசை மேம்பாட்டில் அக்கறை கொண்ட அண்ணாவின் அன்புக்குரிய இளவல் இராம.அரங்கண்ணலின் பிறந்த தினம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!