வரலாற்றில் இன்று (மார்ச் 31)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 31 கிரிகோரியன் ஆண்டின் 90 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 91 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 275 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

307 – உரோமைப் பேரரசர் கான்சுடன்டைன் தனது மனைவி மினெர்வினாவை மணமுறிப்பு செய்த பின்னர், இளப்பாறிய பேரரசர் மாக்சிமியானின் மகள் பௌசுடாவைத் திருமணம் புரிந்தார்.
627 – அகழ்ப்போர்: முகம்மது நபி மதீனா (சவூதி அரேபியா) மீதான மக்காப் படையினரின் 14-நாள் முற்றுகையை எதிர்கொண்டார்.
1492 – எசுப்பானியாவில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் முசுலிம்கலும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார்.
1774 – அமெரிக்கப் புரட்சிப் போர்: மாசச்சூசெட்ஸ், பாஸ்டன் துறைமுகத்தை மூடுமாறு பிரித்தானியா உத்தரவிட்டது.
1822 – கிரேக்கத் தீவான கியோசில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை அடக்க அங்குள்ள மக்களை உதுமானிய இராணுவம் படுகொலை செய்தது.
1866 – சிலியின் வல்பரைசோ துறைமுகம் எசுப்பானியக் கடற்படையின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1885 – இலங்கையில் தமிழ், சிங்கள, இசுலாமிய வருடப் பிறப்பு நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டன.[1]
1889 – ஈபெல் கோபுரத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
1899 – முதலாவது பிலிப்பீன் குடியரசின் தலைநகர் மாலோலோசு அமெரிக்கப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
1909 – பொசுனியா எர்செகோவினா மீதான ஆஸ்திரியாவின் ஆளுமையை செர்பியா ஏற்றுக் கொண்டது.
1917 – ஐக்கிய அமெரிக்கா டானிசு மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடம் இருந்து $25 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்து அமெரிக்க கன்னித் தீவுகள் எனப் பெயர் மாற்றியது.
1918 – ஏறத்தாழ 12,000 முசுலிம் அசர்பைஜான்கள் ஆர்மீனிய புரட்சிக் கூட்டமைப்புப் படையினராலும் போல்செவிக்குகளாலும் படுகொலை செய்யப்பட்டனர்.
1918 – ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1930 – திரைப்படங்களில் பாலியல், குற்றங்கள், சமயம், வன்முறை நிகழ்வுகளைக் காண்பிப்பதற்கான குறியீடுகள் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
1931 – நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1931 – அமெரிக்காவின் டி.டபிள்யூ.ஏ வானூர்தி 599 கேன்சஸ் மாநிலத்தில் விபத்துக்குளாகியதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தீவை சப்பான் பிரித்தானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனி வானோடி ஒருவர் செருமனியில் இருந்து வெளியேறி மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 என்ற உலகின் முதலாவது ஜெட் போர் விமானத்தை அமெரிக்காவுக்குக் கையளித்தார்.
1949 – நியூபவுன்லாந்து கனடியக் கூட்டமைப்பில் 10வது மாநிலமாக இணைந்தது.
1951 – அமெரிக்கவின் யூனிவாக் 1 என்ற முதலாவது வணிகக் கணினி அந்நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறுவனத்துக்கு தரப்பட்டது.
1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் புகலிட உரிமை கோரினார்.
1964 – பிரேசிலில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு காஸ்டெலோ பிராங்கோ தலைமையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.
1970 – 12 ஆண்டுகள் விண்வெளியில் களித்த எக்ஸ்புளோரர் 1 விண்கலம் புவியின் வளிமண்டலத்துள் வந்தது.
1990 – இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.
1991 – ஜோர்ஜியாவில் 99 விழுக்காடு வாக்காளர்கள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
1995 – உருமேனியாவில் ஏ310 வானூர்தி வீழ்ந்ததில், அதில் பயணம் செய்த அனைத்து 60 பேரும் உயிரிழந்தனர்.
2004 – ஈராக் போர்: ஈராக்கின் பலூஜா நகரில் நான்கு அமெரிக்க தனியார் போர்ப்படையினர் கொல்லப்பட்டனர்.
2007 – முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.

பிறப்புகள்

1504 – குரு அங்கது தேவ், சீக்கிய குரு (இ. 1552)
1596 – ரெனே டேக்கார்ட், பிரான்சியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1650)
1685 – யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1750)
1732 – ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1809)
1865 – ஆனந்தி கோபால் ஜோஷி, இந்திய மருத்துவர் (இ. 1887)
1884 – அதிரியான் வான் மானன், டச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1946)
1890 – வில்லியம் லாரன்ஸ் பிராக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1971)
1898 – சா. ஜே. வே. செல்வநாயகம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977)
1908 – பிலிப் சைல்ட்சு கீனான், அமெரிக்க வானியலாளர் (இ. 2000)
1912 – ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர், இலங்கை அரசியல்வாதி
1914 – ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ கவிஞர் (இ. 1998)
1928 – இராம. அரங்கண்ணல், தமிழக எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், அரசியல்வாதி
1934 – கமலா தாஸ், மலையாள கவிஞர் (இ. 2009)
1938 – சீலா தீக்‌சித், கேரளத்தின் 22வது ஆளுநர் (இ. 2019)
1948 – ஆல் கோர், அமெரிக்காவின் 45வது துணை அரசுத்தலைவர், நோபல் பரிசு பெற்றவர்
1950 – ஹல்தர் நாக், இந்தியக் கவிஞர்
1962 – ராம்கி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1983 – அசீம் ஆம்லா, தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்

இறப்புகள்

1631 – ஜான் டன், ஆங்கிலேய வழக்கறிஞர், கவிஞர் (பி. 1572)
1751 – பிரெடரிக், வேல்சு இளவரசர் (பி. 1707
1861 – என்றி மார்ட்டின், ஈழத் தமிழ் எழுத்தாளர், ஓவியர், மதப் போதகர்
1917 – எமில் அடால்ஃப் வான் பெர்ரிங், நோபல் பரிசு பெற்ற செருமானிய உயிரியலாளர் (பி. 1854)
1945 – ஹான்ஸ் பிஷ்ஷர், நோபல் பரிசு பெற்ற செருமனிய வேதியியலாளர் (பி. 1881)
1965 – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், தமிழகத் தமிழறிஞர் (பி. 1904)
1972 – மீனாகுமாரி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1932)
1980 – ஜெசி ஓவென்ஸ், அமெரிக்க தடகள வீரர் (பி. 1913)
1981 – சி. கதிரவேலுப்பிள்ளை, இலங்கை அரசியல்வாதி (பி. 1924)
1995 – செலெனா, அமெரிக்கப் பாடகி (பி. 1971)
1997 – இலைமன் சுட்டிராங் சுபிட்சர், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1914)

சிறப்பு நாள்

இனவழிப்பு நினைவு நாள் (அசர்பைஜான்)
விடுதலை நாள் (மால்ட்டா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!