சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் நடந்தது. இதில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி உள்ளார். இக்கட்சியின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில், பிப்ரவரி 26ம் தேதி நடந்தது. அதற்கு முன் விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 28) சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் சென்டரில் த.வெ.க., முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
17 தீர்மானங்கள் என்னென்ன?
* வக்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம்.
* இருமொழி கொள்கைக்கு ஆதரவாக தீர்மானம்.
* பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி தீர்மானம்.
* சமூக நீதியை நிலைநிறுத்த, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம்.
* டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.
* மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.
* லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என தீர்மானம்.
* பன்னாட்டு அரங்கிற்குத் ஈ.வெ.ரா., பெயர் வைக்க வலியுறுத்தி தீர்மானம்.
* கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம் என தீர்மானம்.
* மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம்.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என தீர்மானம்
* சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
* பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என தீர்மானம்.
* இலங்கைத் தமிழர் பிரச்னைக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம்.
* தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்க தலைவர் விஜய்க்கே முழு அதிகாரம் என தீர்மானம்
* புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்து தீர்மானம்.
* கட்சிகாக உழைத்து மரணமடைந்த தொண்டர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்.
கூட்டத்தில், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஆனந்த், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பேசினர்.