வரலாற்றில் இன்று (மார்ச் 25)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 25  கிரிகோரியன் ஆண்டின் 84 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 85 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 281 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

708 – சிசீனியசை அடுத்து கான்சுடண்டைன் 88வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
717 – மூன்றாம் தியோடோசியசு பைசாந்தியப் பேரரசர் பதவியில் இருந்து விலகி மதகுருவானார்.
1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னர் பிரான்சுடன் இடம்பெற்ற சண்டையில் காயமடைந்தார். இவர் ஏப்ரல் 6 ஆம் நாள் இறந்தார்.
1306 – இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்து மன்னராகப் பதவியேற்றார்.
1409 – பீசா பொதுச்சங்கம் ஆரம்பமானது.
1584 – சர் வால்ட்டர் ரேலி வர்ஜீனியாவில் குடியேற்றத்தை ஏற்படுத்த காப்புரிமம் பெற்றார்.
1655 – டைட்டன் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறித்தியான் ஐகன்சு கண்டுபிடித்தார்.
1802 – பிரான்சுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே “உறுதியான அமைதி உடன்பாடு” எட்டப்பட்டது.
1807 – அடிமை வணிகம் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டது.
1807 – சுவான்சி-மம்பில்சு ரெயில்வே என்ற உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பிரித்தானியாவில் ஆரம்பமாகியது.
1811 – இறைமறுப்பின் தேவை என்ற பிரசுரத்தை வெளியிட்டமைக்காக பெர்சி பைச்சு செல்லி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
1821 – ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். கிரேக்க விடுதலைப் போர் (யூலியன் நாள்காட்டியில் 1821 பெப்ரவரி 23 இல் ஆரம்பமானது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில், கூட்டமைப்புப் படைகள் இசுட்டெட்மன் கோட்டையைத் தற்காலிகமாக அமெரிக்கப் படைகளிடம் இருந்து கைப்பற்றின.
1911 – நியூயோர்க் நகரில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1918 – பெலருஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1931 – இசுக்காட்பரோ சிறுவர்கள் அலபாமாவில் கைது செய்யப்பட்டு வன்கலவிக்காகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: அச்சு அணி நாடுகள் அமைப்பில் யுகோசுலாவியா இணைந்தது.
1947 – அமெரிக்காவில் இலினோய் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற வெடிப்பில் 111 பேர் உயிரிழந்தனர்.
1949 – எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 குலாக்குகள் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.
1953 – ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.
1954 – முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்சிஏ நிறுவனம் வெளியிட்டது. (12″ திரையளவு, விலை: $1,000).
1954 – இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
1957 – மேற்கு செருமனி, பிரான்சு, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகியவற்ற உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.
1965 – மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் தமது 4-நாள் 50-மைல் எதிர்ப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார்.
1971 – வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவம் கிழக்கு பாகித்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
1975 – சவூதி அரேபிய மன்னர் பைசால் தனது உளப் பிறழ்ச்சி கொண்ட மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1988 – செக்கோசிலோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சிக்கு எதிராக மெழுகுவர்த்திப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1992 – சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.
1996 – மாட்டுப் பித்தநோய் காரணமாக பிரித்தானிய மாட்டிறைச்சி மற்றும் அதன் துணைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தது.

பிறப்புகள்

1347 – சியன்னா நகர கத்ரீன், இத்தாலிய மெய்யியலாளர், இறையியலாளர், புனிதர் (இ. 1380)
1914 – நார்மன் போர்லாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மனித நேயர் (இ. 2009)
1920 – உசா மேத்தா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 2000)
1926 – கே. டானியல், ஈழத்து எழுத்தாளர்
1927 – ப. சண்முகம், புதுச்சேரி மாநிலத்தின் 13வது முதல்வர் (இ. 2013)
1934 – குளோரியா இசுடீனெம், அமெரிக்க பெண்ணியவாதி
1945 – ந. மணிமொழியன், தமிழகத் தமிழறிஞர், தொழிலதிபர் (இ. 2016)

இறப்புகள்

1857 – வில்லியம் கோல்கேட், ஆங்கிலேயத் தொழிலதிபர் (பி. 1783)
1931 – கணேஷ் சங்கர் வித்யார்த்தி, இந்திய இதழியலாளர், அரசியல்வாதி (பி. 1890)
1975 – முசிரி சுப்பிரமணிய ஐயர், கர்நாடக இசைப் பாடகர் (பி. 1899)
1989 – சி. எல். ஆனந்தன், தமிழகத் திரைப்பட நடிகர்
1996 – ம. மு. உவைஸ், இலங்கை இசுலாமியத் தமிழறிஞர், கல்வியாளர் (பி. 1922)
2014 – தி. க. சிவசங்கரன், தமிழக மார்க்சிய திறனாய்வாளர் (பி. 1925)

சிறப்பு நாள்

புரட்சி நாள் (கிரேக்கம், உதுமானியப் பேரரசிடம் இருந்து, 1821)
அன்னையர் நாள் (சுலோவீனியா)
சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள்
அடிமை வணிகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் பன்னாட்டு நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!