நடிகை சோனா, ‘ஸ்மோக்’ பட காட்சி வீடியோவை தர மறுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெப்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நடிகை சோனா பெப்சி அமைப்பு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்மோக்’ பட காட்சி வீடியோவை தராமல் இழுத்தடிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராடி வருகிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு பேசியுள்ள சோனா, “எல்லாருக்கும் வணக்கம் நான் சோனா பேசுறேன். இந்த இண்டஸ்ட்ரி 25 வருஷமா இருக்கேன். படம் தயாரிக்கிறேன். என்னென்னமோ பண்ணிட்டு இருக்கேன். ஆனா 10 வருஷம் பாத்தீங்கன்னா என்ன வேலை செய்ய விடுவதில்லை.
ஒரே ஒரு வாட்டி வாய தொறந்து என் மேல ஒருத்தன் கைய வைச்சிட்டான் சொல்லிட்டேன். அதுக்கு இத்தன வருஷமா உட்கார வச்சிட்டாங்க. இதுதான் நடக்கும்னு தெரியும். அதனால நான் ஒதுங்கிவிட்டேன். நான் ஒரு படத்தை இயக்கி, ஓடிடியில் ஒப்பந்தம் போட்டேன். பூஜை போட்ட நாளில் இருந்து பிரச்சினை. எல்லாமே பிரச்சினை.
எல்லா பிரச்சினையும் முடிந்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். ஒரு மேனேஜர் வேலையில வைச்சிருந்தோம். காசை வாங்கி ஏமாற்றிவிட்டார். என்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்க் கேமரா யூனிட்டிடம் கொடுத்துவிட்டார். இது தொடர்பாக பெப்சி அமைப்பிடம் புகார் அளித்தேன். அவர்கள் பிரச்சினை சரி செய்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், பின்னர் அதை என்பக்கமே திருப்பிவிட்டனர்.
அவருக்கு காசு தர வேண்டும் என்று கூறினர். அந்த பிரச்சினை தாண்டி வந்தபின்பு, தற்போது என்னுடைய ஒரு ஹார்ட் டிஸ்கை வாங்கி கொண்டு தர மறுக்கின்றனர். இரவு 1 மணிக்கு போன் செய்து மிரட்டுகின்றனர். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை பெப்சி அலுவலகத்தில் இருந்து போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.