வரலாற்றில் இன்று (மார்ச் 18)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 18  கிரிகோரியன் ஆண்டின் 77 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 78 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 288 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

37 – உரோமை மேலவை திபேரியசின் உயிலை ஏற்க மறுத்து, காலிகுலாவை பேரரசராக அறிவித்தது.
633 – காலிபா அபூபக்கரின் தலைமையில் அராபியத் தீபகற்பம் ஒன்றுபட்டது.
1068 – லெவண்ட்ம் அராபியத் தீபகற்பம் ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20,000 பேர் வரை இறந்தனர்.
1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் தன்னை எருசலேமின் மன்னராக அறிவித்தார்.
1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது.
1314 – தேவாலய புனித வீரர்களின் 23-வதும், கடைசியுமான வீரர் யாக் டி மோலே மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டிக் கொல்லப்பட்டார்.
1438 – ஆப்சுபர்கின் இரண்டாம் ஆல்பர்ட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1608 – சுசேனியசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.
1766 – அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முத்திரை வரியை நீக்கியது.
1834 – இங்கிலாந்தின் டோர்செட் நகரில் ஆறு பண்ணைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
1850 – அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1874 – குறிப்பிடத்தக்க வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் அவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.
1913 – கிரேக்கத்தின் முதலாவது ஜோர்ஜ் மன்னர் படுகொலை செய்யப்பட்டார்.
1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.
1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.
1925 – அமெரிக்காவின் மிசூரி, இலினோய், இந்தியானா மாநிலங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 695 பேர் இறந்தனர்.
1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியக் குடியரசுப் படைகள் இத்தாலியப் படைகளை குவாடலசாரா சமரில் வென்றன.
1937 – அமெரிக்காவின் டெக்சசு மாநிலத்தில் நியூ லண்டன் நகரப் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் எதிர்த்துப் போரிட இட்லரும் பெனிட்டோ முசோலினியும் கூட்டிணைந்தனர்.
1944 – இத்தாலியில் விசுவியசு எரிமலை தீக்கக்கியதில் 26 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெர்லின் நகரைத் தாக்கின.
1948 – சோவியத் ஆலோசகர்கள் யுகோசுலாவியாவில் இருந்து வெளியேறினர். இது டீட்டோ–இசுட்டாலின் பிளவுக்கான முன்னோடி எனக் கருதப்பட்டது.
1953 – மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 265 பேர் உயிரிழந்தனர்.
1962 – 1954 இல் ஆரம்பமான அல்சீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1965 – சோவியத் விண்ணோடி அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1970 – கம்போடியாவின் இளவரசர் நொரடோம் சீயனூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு லொன் நொல் கம்போடியாவின் பிரதமரானார்.
1971 – பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் உயிரிழந்தனர்.
1980 – உருசியாவில் வஸ்தோக்-2எம் ஏவூர்தி ஏவப்படுகையில் வெடித்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.
1989 – எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.
1990 – அமெரிக்காவில், பாஸ்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து $500 மில்லியன் பெறுமதியான 12 ஓவியங்கள் திருடப்பட்டன.[1]
1990 – கிழக்கு செருமனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக மக்களாட்சித் தேர்தல்கள் இடம்பெற்றன.
1994 – பொசுனியாவின் பொசுனியாக்களும் குரொவாசியர்களும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமைதி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன.
1996 – பிலிப்பீன்சு, குவிசோன் நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 162 பேர் இறந்தனர்.
1997 – துருக்கிக்கு சென்று கொண்டிருந்த உருசியாவின் அந்தோனொவ் ஏஎன்-24 விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 50 பேரும் உயிரிழந்தனர்.
2003 – ஐக்கிய அமெரிக்கா ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்திய வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் உசைனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.
2003 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் சப்பான் ஆக்கோன் நகரில் ஆரம்பமாயின.
2014 – உருசிய, கிரிமியா நாடாளுமன்றங்கள் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டன.
2015 – தூனிசியா, பார்டோ தேசிய அருங்காட்சியகம் தாக்கப்பட்டதில் 23 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1702 – முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1732)
1837 – குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் 22வது அரசுத்தலைவர் (இ. 1908)
1858 – ருடோல்ப் டீசல், டீசல் பொறியைக் கண்டுபிடித்த செருமானியப் பொறியியலாளர் (இ. 1913)
1862 – பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி, இந்திய நிருவாகி, அதிகாரி, அரசியல்வாதி (இ. 1927)
1863 – எதுவார்து சீர்ம், ஆசுத்திரிய கண் மருத்துவர் (இ. 1944)
1869 – நெவில் சேம்பர்லேன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1940)
1893 – வில்ஃபிரட் ஓவன், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1918)
1905 – மாலதி பேடேகர், மராத்தி எழுத்தாளர் (இ. 2001)
1914 – குர்பக்‌ஷ் சிங் தில்லான், இந்திய தேசிய இராணுவ அதிகாரி (இ. 2006)
1926 – அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி, மலையாளக் கவிஞர் (இ. 2020)
1936 – அலெக்சாந்தர் போக்சென்பர்கு, பிரித்தானிய அறிவியலாளர்
1936 – பிரடெரிக் வில்லியம் டி கிளர்க், தென்னாப்பிரிக்காவின் 2வது அரசுத்தலைவர், நோபல் பரிசு பெற்றவர்
1938 – சசி கபூர், இந்திய நடிகர், தயாரிப்பாளர்
1945 – மெர்சி ரவி, கேரள அரசியல்வாதிம் சமூக ஆர்வலர், எழுத்தாளர் (இ. 2009)
1947 – டேவிட் லொயிட், ஆங்கிலேயத் துடுப்பாளர், ஊடகவியலாளர்
1958 – ரிச்சர்ட் டி சொய்சா, இலங்கை ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1990)
1959 – சர்ஜனா சர்மா, இந்தியப் பத்திரிகையாளர்
1959 – லுக் பெசோன், பிரான்சியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர்
1980 – சோபியா மைல்ஸ், ஆங்கிலேய நடிகை
1981 – ஜெய் ஆகாஷ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1987 – மேகா, தமிழ்ப் பின்னணிப் பாடகி
1989 – லில்லி காலின்ஸ், ஆங்கிலேய-அமெரிக்க நடிகை
1997 – சிகாரா பிரேவோ, அமெரிக்க நடிகை

இறப்புகள்

1712 – ஆசிம்-உசு-சான், முகலாய அரச குடும்பத்தவர், ஆளுநர் (பி. 1664)
1977 – சித்தேசுவரி தேவி, இந்துத்தானி பாடகி (பி. 1908)
1989 – அரோல்டு ஜெப்ரீசு, ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர், புள்ளியியலாளர் (பி. 1891)
2007 – பாப் வுல்மர், இந்திய-ஆங்கிலேயத் துடுப்பாளர், பயிற்சியாளர் (பி. 1948)

சிறப்பு நாள்

ஆசிரியர் நாள் (சிரியா)
கலிப்பொலி நினைவு நாள் (துருக்கி)
ஆண்கள், மற்றும் போர்வீரர்கள் நாள் (மங்கோலியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!