வரலாற்றில் இன்று (பிப்ரவரி 24)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 24 (February 24) கிரிகோரியன் ஆண்டின் 55 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310 (நெட்டாண்டுகளில் 311) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1386 – நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான்.

1525 – எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி திருத்தந்தை 13வது கிரெகோரியினால் ஆணை ஓலை மூலம் அறிவிக்கப்பட்டது.

1739 – கர்னால் சமரில், ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷா இந்திய முகலாயப் பேரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தார்.

1809 – இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது.

1822 – உலகின் முதலாவது சுவாமிநாராயண் கோயில் அகமதாபாத்தில் திறக்கப்பட்டது.

1826 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னர் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட யாந்தபு உடன்பாட்டினை அடுத்து முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.

1848 – பிரான்சின் லூயி-பிலிப் மன்னர் முடிதுறந்தார்.

1854 – முதற்தடவையாக சிவப்புப் பென்னி என அழைக்கப்படும் துளைகளிடப்பட்ட அஞ்சல் தலை பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது.

1863 – அரிசோனா ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியமாக அமைக்கப்பட்டது.

1875 – ஆத்திரேலியக் கிழக்குக் கரையில் கோத்தன்பேர்க் என்ற கப்பல் பவளத்திட்டு ஒன்றில் மோதி முழ்கியதில் 102 பேர் உயிரிழந்தனர்.

1881 – இலி ஆற்றுப் படுகையின் கிழக்குப் பகுதியை சீனாவுக்குக் கையளிக்கும் உடன்பாடு சீனாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் எட்டப்பட்டது.

1895 – கியூபாவில் புரட்சி வெடித்ததை அடுத்து விடுதலைக்கான கியூபா போர் ஆரம்பமானது. இது 1898 இல் எசுப்பானிய அமெரிக்கப் போருடன் முடிவுக்கு வந்தது.

1916 – கொரிய ஆளுநர் தொழு நோயாளிகளுக்கான மருத்துவமனையை ஆரம்பித்தார்.

1918 – எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.

1920 – நாட்சி கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1945 – எகிப்தியப் பிரதமர் அகமது மாகிர் பாசா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.

1949 – 1948 அரபு – இசுரேல் போர்: போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.[1]

1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.

1971 – மூன்று நாட்களுக்கு முன்னர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் தலைவர் ஏமந்தகுமார் போசு கொல்லப்பட்டதை அடுத்து பா. கா. மூக்கைய்யாத்தேவர் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1981 – கிரேக்கத்தில் நிகழ்ந்த 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 16 பேர் உயிரிழந்தனர்.

1984 – லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர்.

1989 – ஒனலுலுவில் இருந்து நியூசிலாந்து நோக்கிச் சென்ற யுனைட்டட் ஏர்லைன்சு விமானத்தின் சரக்கு வழிக் கதவு திடீரெனத் திறந்ததில் ஒன்பது பயணிகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

1991 – வளைகுடாப் போர் ஆரம்பம்: தரைப் படைகள் சவூதி அரேபிய எல்லையைக் கடந்து ஈராக்கை அடைந்தன.

1999 – கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் உயிரிழந்தனர்.

2004 – வடக்கு மொரோக்கோவில் 6.3 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 628 பேர் உயிரிழந்தனர்.

2006 – பிலிப்பீன்சு அரசுத்தலைவர் குளோரியா மகபகல்-அர்ரொயோ நாட்டில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.

2007 – மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2008 – 32 ஆண்டுகளாக கியூபாவின் அரசுத்தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து இளைப்பாறினார். இவர் கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவியில் இருந்தார்.

2009 – வாட்சப் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.

2016 – கனடாவில் டாரா ஏர் விமானம் ஒன்று வீழ்ந்ததில், 23 பேர் உயிரிழ்ந்தனர்.

பிறப்புகள்

1500 – ஐந்தாம் சார்லசு, புனித உரோமைப் பேரரசர் (இ. 1558)

1670 – சத்திரபதி இராஜாராம், மராட்டியப் பேரரசர் (இ. 1700)

1886 – ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கிய இலங்கை-சிங்கப்பூர்த் தமிழர்

1920 – நானம்மாள், இந்திய யோகக்கலைப் பயிற்சியாளர் (இ. 2019)

1928 – ஏ. பி. நாகராசன், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் (இ. 1977)

1942 – காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக், இந்திய மெய்யியலாளர்

1944 – டேவிட். ஜே. வைன்லேண்டு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்

1946 – டெர்ரி வினோகிராட், அமெரிக்கக் கணிப்பொறி அறிவியலாளர், உளவியலாளர்

1948 – செ. செயலலிதா, தென்னிந்திய நடிகை, அரசியல்வாதி, தமிழ்நாட்டின் 16வது முதலமைச்சர் (இ. 2016)

1950 – ஸ்டீவ் மெக்குரி, அமெரிக்க ஊடகவியலாளர்

1955 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 2011)

1956 – ஜூடித் பட்லர், அமெரிக்க மெய்யியலாளர்

1967 – பிறையன் சிமித், நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய இயற்பியலாளர்

1977 – பிளாய்ட் மேவெதர், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்

இறப்புகள்

1810 – என்றி கேவண்டிசு, பிரான்சிய-ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1731)

1815 – ராபர்ட் ஃபுல்டன், அமெரிக்கப் பொறியாளர், கண்டுபிடிப்பாளர் (பி. 1765)

1969 – பா. தாவூத்ஷா, தமிழகப் பத்திரிகையாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் (பி. 1885)

1983 – ச. வெள்ளைச்சாமி, தமிழக சமூக ஆர்வலர், கொடை வள்ளல் (பி. 1897)

1986 – ருக்மிணி தேவி அருண்டேல், தமிழக நடனக் கலைஞர், கலாசேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)

1990 – மால்கம் போர்ப்ஸ், அமெரிக்கப் பதிப்பாளர் (பி. 1917)

1996 – அன்னா லாறினா, உருசியப் புரட்சியாளர், எழுத்தாளர் (பி. 1914)

2001 – கிளாடு சேனன், அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியாளர் (பி. 1916)

2011 – அனந்து பை, இந்திய எழுத்தாளர் (பி. 1929)

2015 – மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடமையாளர், இதழாளர் (பி. 1917)

2018 – ஸ்ரீதேவி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1963)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (எசுத்தோனியா, உருசியாவிடம் இருந்து 1918)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!