இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 24 திங்கட்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 24-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் மாசி மாதம் 12 ஆம் தேதி திங்கட்கிழமை 24.02.2025 சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 11.33 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி இன்று மாலை 05.04 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.ரோகிணி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று தொண்டு நடவடிக்கைகள் மற்றும் உடல் ஊனமுற்றோர் மற்றும் நோயாளிக்கு உதவுவதன் மூலம் சாதகமான பலன்களை தரும். உங்கள இலக்குகளை அடைவதில் தாமதம் காணப்படும். இன்று அதிகப் பணிகள் காணப்படும். முறையாக திட்டமிடுவதன் மூலம் சவாலான சூழ்நிலையை சமாளிக்க முடியும். நிதிநிலைமை ஏமாற்றம் அளிக்கும். இன்று மருத்துவ செலவு ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. இன்று தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. காரம் மற்றும் இனிப்பு உணவு வகைகளை தவிர்க்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். திருமணம் கோலாகரமாக நடக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று சந்திராஷ்டமம் என்பதாலல் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாக அமைகிறது. ஆதலால், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பொதுவாக இன்று அமைதி காப்பது நல்லது. இறைவனை மட்டும் வழிபடுவதால் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.

கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு முன்னேற்றம் அளிக்கும் செயல்களை நீங்கள் இன்று தொடங்கலாம். இன்று பயனுள்ள முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். நீங்கள் புதிய முயற்சிகளில் இறங்கலாம். வேலை சம்பந்தமான சிறிய பயணம் ஒன்று காணப்படும். கடின உழைப்பு மூலம் அபார வெற்றி பெறுவீர்கள். இன்று அதிக அளவில் பணம் காணப்படும். அதிகமாக சம்பாதிப்பீர்கள். அதிக பணம் சேமிப்பீர்கள். இன்று உங்களிடம் காணப்படும் மனஉறுதி காரணமாக நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். அதனை நீங்கள் கையாள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை நீங்கள் தவிர்க்கவும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும் என்பதால் உங்கள் பணிகளை அமைதியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். திட்டமிட்டு அதன்படி பணிகளை மேற்கொள்ளுங்கள். இன்று நிதிநிலைமை ஏமாற்றத்தை அளிக்கும். செலவுகள் அதிகமாக காணப்படும். சூழ்நிலையைக் கையாள்வதை கடினமாக உணர்வீர்கள். இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். சளி / இருமல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று உங்கள் அன்றாட செயல்களை கவனமாக கையாள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று சஞ்சலமான உணர்வுகளால் பாதிக்கப் படுவீர்கள். ஆன்மீக நடவடிக்கைகள் அமைதி மற்றும் ஆறுதலை அளிக்கும். அதிகப் பணிகள் காரணமாக இன்று நீங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க இயலாது. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள போதிய பணம் காணப்படாது. கூடுதல் செலவுகள் மற்றும் தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியம் மகிழ்சிகரமாக இருக்காது. ஒவ்வாமை காரணமாக இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.

துலா ராசி அன்பர்களே!

நீங்கள் விரும்பும் பலன் பெற இது சாதகமான நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்று மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கடினமான பணிகளைக் கூட விரைந்து முடிப்பீர்கள். உங்கள் திறமையின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை மூலம் இது சாத்தியம். பூர்வீகச் சொத்து வகையில் பண வரவு காணப்படும். கணிசமான தொகை சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும். நீங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று எதிர்மறை விளைவுகளை தடுக்க கவனமுடன் செயல்பட வேண்டும். எதிர்மறை எண்ணங்களை விலக்கி விடுங்கள். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று சற்று அமைதியின்மையை உணர்வீர்கள். இன்று அதிகப் பணிகள் காணப்படும். சவாலான சூழ்நிலையைக் கையாள வேண்டியிருக்கும். நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். கூடுதல் செலவுகள் காணப்படும். அதன் மூலம் பணம் கரையும். தைரியமின்மை காரணமாக சில அசௌகரியம் காணப்படும். இதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

தனுசு ராசி அன்பர்களே!

நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். சில சவால்கள் காணப்படும். நேரம் உங்கள் பொறுமையை சோதிக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படும் வாய்ப்பு உள்ளதால் அமைதியாக இருக்கவும். பணியிடத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்படும். சுமூகமான சூழ்நிலை இல்லாத காரணத்தால் சற்று கவலையுடன் காணப்படுவீர்கள். உங்கள் பணத்தை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இன்று கால் வலி மற்றும் பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. சிறந்த ஆரோக்கியம் பேண அதில் கவனம் செலுத்துங்கள்.

மகர ராசி அன்பர்களே!

வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். சிலருக்கு புது இடத்தில் வேலை கிடைக்கும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று நடுநிலையான பலன்கள் கிடைக்கும். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்று பொதுவாக திருப்தியாக இருப்பீர்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்கள் நேர்மையை பாராட்டுவார்கள். நீங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். அது சகபணியாளர்களின் கவனத்தை ஈர்க்கும். உங்களுள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர்வீர்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். இன்று கணிசமான தொகை சேமிப்பீர்கள். இந்த வளர்ச்சி உங்களுக்கு திருப்தியை அளிக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும்.

மீனராசி அன்பர்களே!

இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் தனித்த திறமை மூலம் நீங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள்.நீங்கள் உறுதியுடனும் நேர்மையாகவும் அணுகுவீர்கள். உங்களின் சிறந்த செயல்திறனுக்கு பாராட்டு பெறுவீர்கள். உங்கள் அணுகுமுறையில் நேர்மையாக இருப்பீர்கள். இதனால் உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிப்பது சாத்தியம். இன்று கனிசமான தொகை சேமிப்பீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் நிலவும் திருப்தி காரணமாக ஆரோக்கியத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *