வரலாற்றில் இன்று (பிப்ரவரி 12)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

பெப்ரவரி 12 (February 12) கிரிகோரியன் ஆண்டின் 43 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 322 (நெட்டாண்டுகளில் 323) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1502 – எசுப்பானியாவின் காஸ்டில் அரசி முதலாம் இசபெல்லா அவ்விராச்சியத்தில் உள்ள அனைத்து முசுலிம்களையும் கிறித்துவத்திற்கு மாற உத்தரவிட்டார்.[1]

1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.

1554 – இங்கிலாந்தின் முடிக்கு உரிமை கோரி ஓராண்டில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் ஜேன் கிரே கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.

1593 – ஏறத்தாழ 3,000 கொரிய யோசன் வம்சப் படைகள் யப்பானின் 30,000 படைகளை எதிர்த்து வெற்றி கண்டன.

1689 – ஐக்கிய இராச்சியத்தின் கடைசி கத்தோலிக்க மன்னர் இரண்டாம் யேம்சு 1688 இல் பிரான்சுக்கு தப்பியோடியமை முடி துறந்ததாகக் கருதப்படும் என இங்கிலாந்து நாடாளுமன்றம் தீர்மானித்தது.

1733 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா பிர்த்தானியாவின் பதின்மூன்று குடியேற்றங்களில் 13-வது குடியேற்ற நாடாக யேம்சு ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.

1771 – சுவீடன் மன்னன் அடொல்ஃப் பிரெடெரிக் இறந்ததை அடுத்து அவனது மகன் மூன்றாம் குசுத்தாவ் மன்னன் ஆனான்.

1818 – சிலி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1819 – கண்டிப் போர்கள்: கண்டியில் இராணுவச் சட்டம் முடிவுக்கு வந்தது.[2]

1825 – கிறீக் பழங்குடியினர் ஜோர்ஜியாவில் இருந்த தமது கடைசி நிலங்களை அமெரிக்க அரசுக்கு கொடுத்து விட்டு மேற்கு நோக்கி குடிபெயர்ந்தனர்.

1832 – கலாபகசுத் தீவுகளை எக்குவாடோர் இணைத்துக் கொண்டது.

1855 – மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1909 – நியூசிலாந்தின் பென்குயின் என்ற பயணிகள் கப்பல் வெலிங்டன் துறைமுகத்துக்கு அருகே மூழ்கி வெடித்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.

1909 – ஐக்கிய அமெரிக்காவின் மிக பழைமையான சிறுபான்மைச் சமூக உரிமை சங்கம் நிறப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கான தேசிய சங்கம் அமைக்கப்பட்டது.

1912 – சீனாவின் கடைசி அரசன் உவான்தொங் முடி துறந்தான்.

1912 – சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.

1921 – போல்செவிக் படைகள் சியார்சியா மீது தாக்குதலைத் தொடுத்தன.

1927 – முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.

1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.

1935 – ஈலியம்-நிரப்பப்பட்ட வான்கப்பல் மேக்கோன் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கரையில் மூழ்கியது.

1947 – மிகப்பெரும் இரும்பு விண்வீழ்கல் சோவியத் ஒன்றியம் சிக்கோட்-ஆலின் என்ற இடத்தில் விண்கல் வீழ் பள்ளம் ஒன்றை உருவாக்கியது.

1961 – வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.

1974 – 1970 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சோவியத் எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்செனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறினார்.

1994 – நோர்வே தேசிய அருங்காட்சியகத்தினுள் நுழைந்த நால்வர் எட்வர்ட் மண்ச்சின் புகழ்பெற்ற அலறல் ஓவியத்தைத் திருடிச் சென்றனர்.

2001 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

2002 – யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபதான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின. நான்கு ஆண்டுகளின் பின்னர் விசாரணை முடிவடையும் முன்னர் அவர் இறந்தார்.

2002 – ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் உயிரிழந்தனர்.

2009 – அமெரிக்காவின் கோல்கன் விமானம் நியூயார்க்கில் வீடு ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும், தரையில் ஒருவரும் உயிரிழந்தனர்.

2016 – 1054 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும் சமயப்பிளவிற்குப் பின்னர் முதற்தடவையாக திருத்தந்தை பிரான்சிசு, மாஸ்கோவின் மறைமுதுவர் கிரீல் ஆகியோர் சந்தித்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்தனர்.

பிறப்புகள்

1768 – இரண்டாம் பிரான்சிசு, புனித உரோமைப் பேரரசர் (இ. 1835)

1804 – ஹைன்ரிக் லென்ஸ், செருமானிய-இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1865)

1809 – சார்லஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியலாளர், நிலவியலாளர் ரி. 1882)

1809 – ஆபிரகாம் லிங்கன், அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (இ. 1865)

1814 – ஜென்னி வான் வெசுட்பலென், கார்ல் மார்க்சின் மனைவி (இ. 1881)

1824 – தயானந்த சரசுவதி, ஆரிய சமாசத்தை உருவாக்கிய இந்திய குரு (இ. 1883)

1851 – ஆய்கென் வொன் பொம் போவர்க், ஆத்திரிய பொருளியலாளர், மார்க்சிய விமர்சகர் (இ. 1914)

1922 – உசேன் ஓன், மலேசியாவின் 3வது பிரதமர் (இ. 1990)

1948 – ரே கர்ஸ்வயில், அமெரிக்கக் கணினி அறிவியலாளர்

1967 – என். ரவிகிரண், தென்னிந்திய சித்திரவீணைக் கலைஞர்

1969 – டேரன் அரோனாப்ஸ்கி, அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்

1986 – ஆரி, தமிழகத் திரைப்பட நடிகர்

1980 – ஹூவான் கார்லோஸ் ஃபெரேரோ, எசுப்பானிய டென்னிசு வீரர்

இறப்புகள்

1713 – சகாந்தர் சா, முகலாயப் பேரரசர் (பி. 1664)

1804 – இம்மானுவேல் கண்ட், செருமானிய மெய்யியலாளர் (பி. 1724)

1908 – ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820)

1912 – கெரார்டு ஆன்சன், நோர்வே மருத்துவர் (பி. 1841)

1916 – ரிச்சர்டு டீடிகைண்டு, செருமானிய கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1831)

1964 – சாம். அ. சபாபதி, இலங்கை வழக்கறிஞர், 1-வது யாழ்ப்பாண முதல்வர் (பி. 1898)

1988 – எஸ். நடராஜா, இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி, மேலவை உறுப்பினர்

2009 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, தமிழீழ ஊடகவியலாளர்

2009 – முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (பி. 1982)

2013 – சங்கரலிங்கம் ஜெகந்நாதன், காந்தியவாதி, இந்திய விடுதலைப்போராட்ட வீரர் (பி. 1914)

2015 – நிக் அப்துல் அசிஸ் நிக் மாட், மலேசிய அரசியல்வாதி (பி. 1931)

சிறப்பு நாள்

டார்வின் நாள்

செங்கை நாள்

ஒன்றிய நாள் (மியான்மர்)

இளைஞர் நாள் (வெனிசுவேலா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!