கதிர் – ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவான “சுழல் 2” வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கதிர் மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் கடந்த 2022ம் ஆண்டு வெளியான சுழல் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இதில் கதிருடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் ஸ்ரேயா ரெட்டி, பார்த்திபன், நிவேதிதா சதீஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, இத்தொடரின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாக இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி தெரிவித்திருந்தனர். தற்போது இத்தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸிக்கு தயாராகவுள்ளது.
இந்நிலையில், ‘சுழல் 2’ வெப் தொடர் வரும் 28-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் முதன்மை கதாபாத்திரத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை கவுரி கிஷன், மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மலைக் கிராமத்தில் காணாமல் போன சிறுமியை தேடும் கிரைம் திரில்லர் கதையாக உருவான ‘சுழல்’தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.