ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்..!
![ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்..!](https://i0.wp.com/minkaithadi.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-04-085455.jpg?resize=584%2C410&ssl=1)
தமிழக வீரர் வேலவன் மராட்டியத்தின் ராகுல் பாய்தாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் 3-0 என்ற கணக்கில் மராட்டியத்தின் ராகுல் பாய்தாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார் .
பளுதூக்குதலில் ஆண்களுக்கான 109 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் சர்வீசஸ் வீரர் லவ்பிரீத் சிங் (367 கிலோ) தங்கப்பதக்கத்தை வென்றார். தமிழக வீரர் ருத்ரமாயன் ‘ஸ்னாட்ச்’ முறையில் 175 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 180 கிலோவும் என மொத்தம் 355 கிலோ எடைதூக்கி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.