பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி தமிழ்நாடு வருகை..!
பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய ரெயில் பாலம் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
இதற்கிடையில், பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா தைப்பூச தினமான 11-ந் தேதியோ அல்லது அதற்கு முந்தைய நாளோ இருக்க வாய்ப்புள்ளது என்றும் புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார் என்றும் ரெயில்வே கட்டுமான நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.