இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 2)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 2)

உலக சதுப்பு நில தினம்

ஈர நிலங்கள் என்கிற பட்டியலில் எதுவெல்லாம் வரும் எனப் பார்த்தாலே அவற்றின் பாதுகாக்க வேண்டியதன் அருமை உங்களுக்கு புரியக்கூடும். ஆறுகள், தாழ்நிலங்கள், ஈரமான புல்வெளிகள், கழிமுகங்கள், கழிமுக, கடலோர குடியிருப்பு பகுதிகள், சதுப்புநிலக்காடுகள், பவளத் திட்டுகள், மீன் குளங்கள், நெற்பயிர் நிலங்கள், நீர்த் தேக்கங்கள்….! உலகம் முழுக்க மனிதனின் தொடர் செயல்களால் இவை மிகப்பெரிய அழிவை சந்திக்கின்றன. சுற்றுலா தலங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில்கள் ஆகியனவும் இத்தகைய நிலங்களை அழிக்கின்றன.பல்லுயிரி வளம், நிலத்தடி நீர் வளம், நீரை வடிகட்டி நன்னீர் ஆக்குதல், உணவுச்சங்கிலியின் உறுதியான பிணைப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் இவற்றின் அழிவு மேற்சொன்ன எல்லாவற்றையும் காணாமல் செய்கிறது. சுனாமி நம் நாட்டை தாக்கியபொழுது சதுப்பு நிலக் காடுகள் அதன் தாக்கத்தை பெருமளவில் குறைத்தது ஞாபகம் இருக்கலாம். வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதும் இடம் சார் காலநிலை, நுண்காலநிலை என ஒழுங்காக மழை, வெயில் ஆகியன அதனதன் காலங்களில் உண்டாவதையும் உறுதி செய்கிற வேலையையும் இவைதான் செய்து வந்திருக்கின்றன. கடந்த 1971களில் ஈரானின் ரம்சார் நகரில் நாடுகள் பல சேர்ந்து சதுப்பு நிலப் பாதுகாப்பிற்கு கையெழுத்திட்டன. சதுப்பு நிலங்களை அடையாளப்படுத்தல், அதன் முக்கியத்துவத்தினை உணர்த்துவது, தேசிய சர்வதேச ரீதியில் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கங்களாக கொண்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 2 ஆம் நாள் உலக சதுப்பு நில தினமாக கொண்டாடப்படுது.

தில்லையாடி வள்ளியம்மை நினைவு நாளின்று

நாகை டிஸ்ட்ரிக் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி -ங்கற ஊரைச் சேர்ந்த முனுசாமி, மங்களத்தம்மாள் ஆகியோரது டாட்டர்தான் தில்லையாடி வள்ளியம்மை. இவருடைய பேரண்ட்ஸ் தென்னாப்பிரிக்காவுக்கு கூலி ஒப்பந்த தொழிலாளர்களாக சென்று ஜோகன்ஸ்பர்க் நகரில் வேலை பார்த்தபோ அங்கு தில்லையாடி வள்ளியம்மை பிறந்தார். இதுக்கிடையிலே தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த இந்தியர்களுக்கு ஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய அறப்போராட்டத்தில் தில்லையாடி வள்ளியம்மையும் கலந்து கொண்டு போராடினார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போ அவருக்கு வயசு ஜஸ்ட் 16. போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் சிறை அதிகாரிகள் கடுமையாக வேலை வாங்கினர். அதனால் மெலிந்த தேகம் கொண்ட வள்ளியம்மை விரைவிலேயே நோய்தாக்குதலுக்கு ஆளானார். அவரது உடல் நிலையைக் கண்ட ஆங்கில அதிகாரிகள், அபராதம் செலுத்திவிட்டு வெளியே போகுமாறு கூறினார்கள். அதை ஏற்க வள்ளியம்மை மறுத்துவிட்டார். ‘அபராதம் செலுத்துவது போராட்டக்காரர்களின் குணமல்ல. போராட்டம் வெற்றி பெறாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்’ என்று உறுதியாக கூறிவிட்டார். நாட்கள் செல்ல செல்ல அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இறுதியில் 3 மாத சிறை வாசத்துக்கு பிறகு பலகீனமான நிலையில் விடுவிக்கப்பட்ட வள்ளியம்மை வீட்டுக்கு வந்த பத்தே நாளில் மரணம் அடைந்தார். தன்னலம் கருதாமல் போராடிய இளம் மங்கை வள்ளியம்மையின் மறைவு காந்தியை வெகுவாக பாதித்தது. ”பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் உயிரை தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்” என காந்தி பாராட்டினார்.

மு.இராகவையங்கார் (1878 – 1960) காலமான நாள்

பிப்ரவரி 2 முத்துசுவாமி இராகவையங்கார் (1878 சூலை 26 – 1960 பிப்ரவரி 2) என்னும் மு. இராகவையங்கார் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் தமிழ் ஆய்வாளர்; பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர். தமிழ் இலக்கியங்களை தேடி தேடி கண்டு பிடித்து அதை பதிப்பித்த தமிழ் தாத்தா உ.வே. சுவாமிநாத ஐயர்.மற்றொருவர்,மு.இராகவையங்கார் !இருபதாம் நூற்றாண்டில் தமிழுக்கு அரும்பணி ஆற்ற தோன்றிய மகான் இவர் ..! இராமநாதபுரத்தில் சேதுபதி அவைப்புலவராக விளங்கிய முத்துசுவாமி ஐயங்காருக்கு மகனாக 1878 சூலை 26 ஆம் நாள் இராகவையங்கார் பிறந்தார். இவர் இளமையிலேயே தன் தந்தையை இழந்துவிட்டார். அதன் பின்னர் பாண்டித்துரை தேவர் இவரை வளர்த்து கல்வி புகட்டினார்.பாண்டித்துரைத் தேவரால் 1901 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் ஓர் உறுப்பான செந்தமிழ்க் கல்லூரியில் 1901 ஆம் ஆண்டில் மு. இராகவையங்கார் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அப்பணியை 1912 ஆம் ஆண்டு வரை ஆற்றினார். 1944 ஆம் ஆண்டில் சென்னை இலயோலாக் கல்லூரியில் கீழ்த்திசை மொழியியல் இளவர் (பி. ஓ. எல்.) பட்ட வகுப்புத் தொடங்கப்பட்ட பொழுது, மு. இராகவையங்கார் அத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.1945 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் இராம. அழகப்பச் செட்டியார் வழங்கிய நன்கொடையால் தமிழ் ஆராய்ச்சித் துறை தொடங்கப்பட்டது. மு. இராகவையங்கார் அத்துறையின் தலைவராக அவ்வாண்டிலேயே பொறுப்பேற்றார். 1951 ஆம் ஆண்டு வரை அப்பணியை ஆற்றினார். பின்னாளில் தமிழர் நேசன், கலைமகள், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.. இதெல்லாம் என்ன பத்திரிக்கைகள் என்று கேட்பவர்களுக்கு … எதோ தமிழ் இலக்கியங்கள் என்று சொல்லுறாங்களே அவைகள் நிறைய வந்த பத்திரிக்கைகள இவை என்று சொல்லிகிறாங்க !! மு.இராகவையங்கார் தம் 24 ஆம் வயதில் முதன்முதல் “செந்தமிழ்” இதழ் மூலம் ஆய்வுப்பணியைத் தொடங்கி ஏறத்தாழ 58 ஆண்டுகள் வரை எழுத்துப் பணியைத் தம் மூச்சாகக் கொண்டிருந்தார்,தமிழ் தொன்மையான மொழி என்பதை நாம் அறிவோம் .. அதில் நிறைய பாட பேதங்கள் ஏற்பட்டு (பல வார்த்தைகள் காலத்தால் பதிவு எடுக்கும் பொது மாறி விடுதல் ) அவைகளை திருத்தி பதிவிட்டவர் இவரே !! இவரது எழுத்துக்கள் சில தமிழ் தாய்க்கு ஆரங்களை பழுது நீக்கி புது பொலிவு அளித்திட்ட இந்த மாகனை போற்றுவோம்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர், தத்துவவாதியான பெர்ட்ரண்ட் ஆர்தர் வில்லியம் ரஸல் (Bertrand Arthur William Russell) நினைவு தினம் இன்று.

இங்கிலாந்தின் டிரெல்லக் என்ற ஊரில் (1872) பிறந்தார். 2 வயதில் தாயையும், 4 வயதில் தந்தையையும் பறிகொடுத்தார். இதனால், பாட்டியிடம் வளர்ந்தார். வீட்டிலேயே கல்வி கற்றார். இளமைப் பருவம் தனிமையில் கழிந்ததால் மிகுந்த விரக்தியுடன் இருந்தார். # அண்ணன் வாயிலாக இவருக்கு கணிதத்தில் நாட்டம் ஏற்பட்டது. அதுவே வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படவும் காரணமாக அமைந்தது. கணிதம் குறித்து மேன்மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வம் பிறந்தது. சிறந்த எழுத்தாற்றலும் கொண்டிருந்தார். # கல்வி உதவித்தொகை பெற்று கேம்ப்ரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதம், தத்துவம் பயின்றார். இளங்கலைப் பட்டமும் ஃபெல்லோஷிப்பும் பெற்றார். அரசியலில் ஆர்வம் கொண்டார். ‘ஜெர்மன் சோஷியல் டெமாக்ரசி’ என்ற தனது முதல் நூலை 1896-ல் வெளியிட்டார். கணிதம் தொடர்பான நூல்களையும் தொடர்ந்து வெளியிட்டார். லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். # வாழ்நாள் முழுவதும் அரசியல், தத்துவம், சமுதாயக் கோட்பாடுகள் குறித்து பேசியும் எழுதியும் வந்தார். இவரது மானசீக குரு ஜான் ஸ்டூவர்ட் மில். அவரது எழுத்துகளின் தாக்கம் ரஸலின் படைப்புகளில் அதிகம் காணப்படும். # முதல் உலகப்போர் நடந்தபோது, தீவிர அரசியலில் ஈடுபட்டார். அமைதிக்கு ஆதரவாகவும், கட்டாய ராணுவ சேவைக்கு எதிராகவும் பேசியதால் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் வேலையை இழந்தார். சிறையில் இருந்தபோது, கணித தத்துவங்கள் குறித்த நூலை எழுதினார். # போருக்குப் பிறகு, வேலை போன இடத்திலேயே மீண்டும் வேலைவாய்ப்பு வந்தது. அதை நிராகரித்தவர், பத்திரிகையாளர், எழுத்தாளராகப் பணியாற்ற முடிவு செய்தார். தொடர்ந்து பல நூல்களை எழுதினார். # சொந்த வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் எழுதுவதை மட்டும் இவர் நிறுத்தியதே இல்லை. இளமைப் பருவம் தொடங்கி தினமும் சராசரியாக 3,000 வார்த்தைகள் வரை எழுதியுள்ளார். இவரது ‘தி பிராப்ளம்ஸ் ஆஃப் ஃபிலாசஃபி’ (1911), ‘ஹிஸ்டரி ஆஃப் வெஸ்டர்ன் ஃபிலாசஃபி’ (1945) ஆகிய நூல்கள் விற்பனையில் சாதனை படைத்தவை. # கல்வி, மதம், அரசியல், சமூகப் பிரச்சினைகள் குறித்து தனது நூல் களில் எழுதினார். ‘தி ஏபிசி ஆஃப் ஆடம்ஸ்’, ‘தி ஏபிசி ஆஃப் ரிலேடிவிட்டி’ உள்ளிட்ட பல அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார். தன் சுயசரிதை நூலை 3 தொகுதிகளாக வெளியிட்டார். # சிகாகோ பல்கலைக்கழகத்தில் 66-வது வயதில் ஆசிரியராக சேர்ந்தார். பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி னார். 1949-ல் ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது பெற்றார். 1950-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். தனது இறுதி ஆண்டுகளில் அணு ஆயுதங்கள், வியட்நாம் போருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். # மிகுந்த மனஉறுதி படைத்தவர். தன் கருத்துகளை துணிச்சலுடன் வெளியிடக்கூடியவர். தத்துவவாதி, சிந்தனையாளர், சமூக சீர்திருத்த வாதி, தர்க்கவாதி, கணிதவியலாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட பெர்ட்ரண்ட் ரஸல் 98-வது வயதில் பிப்ரவரி 2(1970) மறைந்தார்.

ஜப்பானின்மீது அணுக்குண்டுகள் வீசப்பட்ட நிகழ்வுகளில் (தனித்தனியாக) இறந்தோர் எண்ணிக்கையைவிட இது அதிகம். 1945 மார்ச் 9இல் அமெரிக்க விமானங்கள் தீயை உருவாக்கும் 1,665 டன் குண்டுகளை ஒரே நேரத்தில் வீசிய, மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய வான்வழித்தாக்குதலின்போது மட்டுதான், இதற்கிணையான உயிரிழப்பு ஏற்பட்டது. மெய்ரெகி என்பது ஜப்பானில் அப்போது (ஏப்ரல் 1655லிருந்து ஜூலை 1658வரை) நடைமுறையிலிருந்த காலத்தின் பெயராகும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அல்லாமல், புதிய அரசர் பதவியேற்கும்போது, பெரிய மாற்றங்கள் நிகழும்போது என்று இந்தப் பெயர்கள் சூட்டப்படும். அவ்வாறு சூட்டப்பட்டதிலிருந்து, 0லிருந்து ஆண்டுகள் கணக்கிடப்படும். (தற்போது 1989லிருந்து ஹெய்செய் காலம் நடைபெறுகிறது. 2019ஆம் ஆண்டு ஹெய்செய் 31 என்று குறிப்பிடப்படுகிறது.) சாபப்பட்ட அங்கி ஒன்றை ஒரு பூசாரி கொளுத்தியபோது இத்தீவிபத்து ஏற்பட்டது. அந்த அங்கியின் உரிமையாளர்களான சகோதரிகள், அதை அணிய முடியாமலே ஒருவர்பின் ஒருவராக இறந்ததால் அதை சாபப்பட்ட அங்கியென்று அவர் கொளுத்தினாராம். அக்காலத்தில் ஜப்பானின் பெரும்பாலான கட்டிடங்கள் மரமும் காகிதமும் பயன்படுத்திக் கட்டப்பட்டிருக்கும். கோவிலும் மரத்தாலானதே. அதற்குள் கொளுத்தியபோது, கோவிலே தீப்பற்றிக்கொண்டது. குறுகிய தெருக்களால் கட்டிடங்கள் நெருக்கமாக அமைந்திருந்ததுடன், முந்தைய ஆண்டில் நிலவிய வறட்சியால் நன்கு உலர்ந்தும் இருந்தன. காற்றினால் வேகமாகப் பரவிய தீ, மூன்று நாட்களுக்குப்பின் காற்றின் திசை மாறியபின்னரே முடிவுக்கு வந்தது. இடோ நகரில் தீயணைப்புத்துறை இருந்தாலும், அக்காலத்தில் இவ்வளவு பெரிய தீயை அணைக்குமளவுக்கு ஆட்களோ, கருவிகளோ இல்லை. தீ அணைந்தாலும், அடர்த்தியான கரும்புகை விலகாததால், அடுத்த பலநாட்களுக்கு மீட்புப்பணிகளைச் செய்ய முடியவில்லை. 24 நாட்கள் கழித்துத்தான் உடல்கள் மொத்தமாகப் புதைக்கப்பட்டு, அந்த இடத்தில் ஒரு வழிபாட்டுக்கூடமும் கட்டப்பட்டது. நகரை மறுகட்டமைப்புச் செய்ய 2 ஆண்டுகள் ஆயின.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...