வரலாற்றில் இன்று (ஜனவரி 30)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சனவரி 30 (January 30) கிரிகோரியன் ஆண்டின் 30 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 335 (நெட்டாண்டுகளில் 336) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 516 – எருசலேம் இரண்டாம் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.

1018 – போலந்து, புனித உரோமைப் பேரரசு இரண்டும் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்தின.

1607 – இங்கிலாந்தில் பிறிஸ்டல் வாய்க்கால் கரைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.[1]

1648 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னன் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். அவரது மனைவி என்றியேட்டா மரீயா பிரான்சு சென்றாள்.

1649 – பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது.

1649 – இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை.

1661 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னரின் படுகொலைக்கு வஞ்சம் தீர்ப்பதற்காக பொதுநலவாய இங்கிலாந்தின் காப்பளர் ஆலிவர் கிராம்வெல்லின் உடல் அவர் இறந்து இரண்டு ஆண்டுகளின் பின்னர் வைபவரீதியாகத் தூக்கிலிடப்பட்டது.

1789 – தாய் சொன் படைகள் சிங் சீனருடன் சண்டையிட்டு தலைநகர் அனோயை விடுவித்தன.

1820 – எட்வர்ட் பிரான்சுபீல்டு டிரினிட்டி குடாவைக் கண்டு, அந்தாட்டிக்காவைக் கண்டறிந்ததாக அறிவித்தார்.

1835 – ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.

1889 – ஆத்திரியா-அங்கேரியின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1908 – இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் மகாத்மா காந்தி இரண்டு மாதங்கள் சிறைத்தணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

1930 – குலாக் இனத்தவரை இல்லாதொழிக்கக் சோவியத் உயர்குழு கட்டலையிட்டது.

1933 – இட்லர் செருமனியின் அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: அம்போன் சமரில், சப்பானியப் படைகள் டச்சுக் கிழக்கிந்தியாவின் அம்போன் தீவைத் தாக்கி 300 கூட்டுப் படைகளின் போர்க்கைதிகளை கொன்றன.

1943 – இரண்டாம் உலகப் போர்: உக்ரைனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாட்சிகளால் கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய ஏதிலிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கிக் குண்டினால் தாக்கப்பட்டு பால்டிக் கடலில் மூழ்கியதில் 9,500 பேர் உயிரிழந்தனர்.

1948 – லிசுபனில் இருந்து 31 பேருடன் புறப்பட்ட வானூர்தி ஒன்று பெர்முடாவில் காணாமல் போனது.

1948 – மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்ற இந்து மத அடிப்படைவாதி சுட்டுக் கொன்றான்.

1959 – ஆன்சு எட்டொஃப்ட் என்ற பிரித்தானியக் கப்பல் தனது முதலாவது பயணத்தில் பனிமலை ஒன்றுடன் மோதி மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர்.

1964 – ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.

1964 – தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1972 – வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சிய துணை இரானுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1972 – பாக்கித்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது.

1976 – தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

1979 – அமெரிக்காவின் வாரிக் போயிங் 707 சரக்கு விமானம் ஒன்று டோக்கியோவில் இருந்து புறப்பட்டு 30 நிமிடத்தில் பசிபிக் பெருங்கடலில் காணாமல் போனது.

1995 – அரிவாள்செல் சோகை நோய்க்கான சிகிச்சை வெற்றியளித்ததாக அமெரிக்க .தேசிய நல கழகம் அறிவித்தது.

2000 – கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் உயிரிழந்தனர்.

2003 – பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.

2006 – தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் ஒரு பெண் உட்பட 7 இலங்கைத் தமிழர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர். இவர்கள் இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

2013 – தென் கொரியா நாரோ-1 என்ற தனது முதலாவது செலுத்து வாகனத்தை விண்ணுக்கு ஏவியது.

பிறப்புகள்

1865 – திரிகுணாதீதானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1915)

1882 – பிராங்க்ளின் ரூசவெல்ட், அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (இ. 1945)

1889 – ஜெய்சங்கர் பிரசாத், இந்தியக் கவிஞர் (இ. 1937)

1904 – வை. பொன்னம்பலம், தமிழகப் புலவர் (இ. 1973)

1910 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (இ. 2000)

1913 – அம்ரிதா சேர்கில், இந்தியப் பெண் ஓவியர் (இ. 1941)

1919 – பிரெட் கோரெமாட்சு, அமெரிக்க செயற்பாட்டாளர் (இ. 2005)

1925 – டக்லஸ் எங்கல்பர்ட், கணினிச் சுட்டியைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (இ. 2013)

1929 – இசாமு அக்காசாக்கி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர்

1929 – அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி, உருசிய மெய்யியலாளர், எழுத்தாளர், வரலாற்றாய்வாளர், தென்னாசிய பண்பாட்டு ஆய்வாளர் (இ. 2009)

1930 – இரா. இளங்குமரனார், தமிழகத் தமிழறிஞர் (இ. 2021)

1938 – இசுலாம் கரிமோவ், உசுபெக்கிசுத்தானின் 1-வது அரசுத்தலைவர் (இ. 2016)

1941 – டிக் சேனி, அமெரிக்க அரசியல்வாதி

1950 – மு. க. அழகிரி, தமிழக அரசியல்வாதி

1951 – பிரகாஷ் ஜவடேகர், இந்திய அரசியல்வாதி

1957 – பிரியதர்சன், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர்

1967 – பூர்ணிமா ராவ், இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை

1968 – எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு

1971 – தியா குமாரி, இந்திய அரசியல்வாதி

1972 – இரகுமான் அப்பாசு, புனைகதை எழுத்தாளர்

1974 – கிரிஸ்டியன் பேல், பிரித்தானிய நடிகர்

1980 – வில்மெர் வால்டெர்ராமா, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்

1990 – மிட்செல் ஸ்டார்க், ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர்

இறப்புகள்

1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (பி. 1600)

1832 – ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன், கடைசிக் கண்டி அரசன்

1838 – ஒசியோலா, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1804)

1874 – இராமலிங்க அடிகளார், ஆன்மிகவாதி (பி. 1823)

1891 – சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளர் (பி. 1833)

1948 – மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சட்டவறிஞர், மெய்யியலாளர் (பி. 1869)

1948 – ஓட்வில் ரைட், அமெரிக்க விமானி, பொறியியலாளர் (பி. 1871)

1960 – ஜே. சி. குமரப்பா, தமிழகப் பொருளியல் அறிஞர் (பி. 1892)

1968 – மாகன்லால் சதுர்வேதி, இந்தியக் கவிஞர், ஊடகவியலாளர் (பி. 1889)

1971 – சோல்பரி பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி, இலங்கை ஆளுநர் (பி. 1887)

1981 – வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் முதலாவது சனாதிபதி (பி. 1897)

1991 – ஜான் பார்டீன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1908)

1998 – விவியன் நமசிவாயம், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர், (பி. 1921)

2007 – சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1917)

2012 – இடிச்சப்புளி செல்வராசு, தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர்

2015 – காரல் ஜெராசி, ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர், எழுத்தாளர் (பி. 1923)

சிறப்பு நாள்

ஆசிரியர் நாள் (கிரேக்கம்)

தியாகிகள் நாள் (இந்தியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!