வரலாற்றில் இன்று (ஜனவரி 29)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜனவரி 29 கிரிகோரியன் ஆண்டின் 29 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 336 (நெட்டாண்டுகளில் 337) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1595 – ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது.
1676 – மூன்றாம் பியோதர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.
1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் ரஷ்யாவை வெற்றி பெற்றது.
1819 – ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.
1861 – கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.
1863 – ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் ஷோஷோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1916 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியரின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.
1929 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி துருக்கியை அடைந்தார்.
1940 – ஜப்பான், ஒசாக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று வெடித்ததில் 181 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கொனியூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இராணுவத்தினரினால் பெண்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 38 பேர் கொல்லப்பட்டனர்.
1946 – ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது.
1996 – இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்பரா மாளிகையான லா ஃபெனீஸ் தீயினால் அழிந்தது.
2005 – சீனாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 1949ம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது.

பிறப்புகள்

1737 – தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர் (இ. 1809)

1843 – வில்லியம் மெக்கின்லி, அமெரிக்காவின் 25-வது அரசுத்தலைவர் (இ. 1901)

1853 – கிடசாடோ சிபாசாபுரோ, சப்பானிய மருத்துவர், நுண்ணுயிரியலாளர் (இ. 1931)

1860 – ஆன்டன் செக்கோவ், உருசிய எழுத்தாளர் (இ. 1904)

1866 – ரோமைன் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 1944)

1881 – ஆலிஸ் கேத்தரின் எவன்ஸ், அமெரிக்க உயிரியலாளர் (இ. 1975)

1899 – மார்க்கண்டு சுவாமிகள், யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (இ. 1984)

1915 – வி. வி. சடகோபன், தமிழக நடிகர், கருநாடக இசைப் பாடகர், கல்வியாளர், ஊடகவியலாளர், எழுத்தாளர்

1922 – ராஜேந்திர சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 2003)

1926 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானிய-பிரித்தானிய இயற்பியலாளர் (இ. 1996)

1935 – விக்டர் இசுடெங்கர், அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர் (இ. 2014)

1939 – ஜெர்மைன் கிரீர், ஆத்திரேலிய ஊடகவியலாளர், நூலாசிரியர்

1941 – காமினி ஜயவிக்கிரம பெரேரா, இலங்கை அரசியல்வாதி

1947 – லிண்டா பக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்

1954 – ஓப்ரா வின்ஃப்ரே, அமெரிக்க தொலைக்காட்சி அரட்டைக் காட்சி தொகுப்பாளர்

1970 – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய துப்பாக்கி சுடு வீரர், அரசியல்வாதி

1982 – மீரா வாசுதேவன், இந்தியத் திரைப்பட நடிகை

1995 – தீப்தி சதி, இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

661 – அலீ, நான்காவது கலீபா, முகம்மது நபியின் மருமகன் (பி. 601)

1820 – மூன்றாம் ஜார்ஜ், பிரித்தானிய மன்னர் (பி. 1738)

1859 – வில்லியம் கிரேஞ்சு பாண்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1789)

1933 – சாரா டீஸ்டேல், அமெரிக்கக் கவிஞர் (பி. 1884)

1934 – பிரிட்சு ஏபர், நோபல் பரிசு பெற்ற போலந்து-செருமானிய வேதியியலாளர் (பி. 1868)

1963 – இராபர்ட் புரொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (பி. 1874)

1980 – எஸ். வி. சுப்பையா தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர்

1983 – பிலு மோடி, இந்திய அரசியல்வாதி (பி. 1926)

1991 – வ. ந. நவரத்தினம், இலங்கை தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1929)

1995 – சி. எஸ். ஜெயராமன், நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகர் (பி. 1917)

1998 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)

2003 – பண்டரிபாய், தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1928)

2009 – கு. முத்துக்குமார், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தனக்குத்தானே தீயிட்டுத் தற்கொலை செய்த தமிழ்நாட்டவர்

2010 – சு. ராஜம், தமிழக ஓவியர், திரைப்பட நடிகர், கருநாடக இசைக்கலைஞர் (பி. 1919)

2019 – ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்திய அரசியல்வாதி (பி. 1930)

சிறப்பு நாள்

*****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!