வரலாற்றில் இன்று (ஜனவரி 22)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சனவரி 22 (January 22) கிரிகோரியன் ஆண்டின் 22 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 343 (நெட்டாண்டுகளில் 344) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

613 – கான்ஸ்டண்டைன் தனது 8-வது மாதத்தில் அவனது தந்தை பைசாந்தியப் பேரரசர் எராக்கிளியசினால் துணை-பேரரசராக (சீசர்) நியமிக்கப்பட்டான்.

1506 – 150 சுவிட்சர்லாந்து பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது.

1517 – முதலாம் செலீம் தலைமையில் உதுமானியர் மம்லூக் சுல்தானகத்தைத் தோற்கடித்து, இன்றைய எகிப்தைக் கைப்பற்றினர்.

1555 – ஆவா இராச்சியம் தவுங்கூ வம்சத்திடம் (இன்றைய மியான்மர்) தோற்றது.

1808 – பிரெஞ்சு இராணுவத்தினரின் முற்றுகையை அடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் போர்த்துகலில் இருந்து வெளியேறிய போர்த்துக்கீச அரச குடும்பத்தினர் பிரேசில் வந்து சேர்ந்தனர்.

1840 – பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.

1849 – இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர்: பஞ்சாப், முல்தான் முற்றுகை ஒன்பது மாதங்களின் பின்னர் முடிவடைந்தது. கடைசி சீக்கியப் படை சரணடைந்தது.

1863 – உருசியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.

1879 – ஆங்கில-சூலூ போர்: தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1889 – கொலம்பியா கிராமபோன் வாசிங்டனில் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.

1899 – ஆறு ஆத்திரேலியக் குடியேற்றப் பிராந்தியங்களின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர்.

1901 – 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.

1905 – இரத்த ஞாயிறு: சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உருசியப் பேரரசருக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது. 200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1905 புரட்சி ஆரம்பமானது.

1906 – பிரிட்டிசு கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் உயிரிழந்தனர்.

1915 – மெக்சிக்கோ, குவாதலஹாரா நகரில் தொடருந்து ஒன்று பள்லம் ஒன்றில் வீழ்ந்ததில், 600 பேர் உயிரிழந்தனர்.

1919 – உக்ரைன் மக்கள் குடியரசும், மேற்கு உக்ரைன் தேசிய குடியரசும் இணைந்தன.

1927 – உலகின் முதல் வானொலி வர்ணனை, ஹைபரியில் நடைபெற்ற ஆர்சனல்-செப்பீல்ட் யுனைடெட் கால்பந்து போட்டி ஒலிபரப்பாகியது

1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் துப்ருக் நகரை நாட்சிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் சப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமடைந்தது.

1945 – இலங்கையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதற்கான சோல்பரி ஆணைக்குழு முதன் முதலாக கொழும்பு நகர மண்டபத்தில் கூடியது.[1]

1957 – சினாய் தீபகற்பத்தில் இருந்து இசுரேல் வெளியேறியது.

1964 – கென்னத் கவுண்டா வடக்கு றொடீசியாவின் முதலாவது அரசுத்தலைவரானார்.

1968 – அப்பல்லோ 5 விண்கலம் முதலாவது நிலாக்கலத்தைத் தாங்கி விண்வெளிக்கு சென்றது.

1969 – சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் மீது மாஸ்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் அவர் காயமெதுவுமின்றித் தப்பினார்.

1973 – அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது.

1973 – நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.

1980 – நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் ஆந்திரே சாகரவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.

1987 – பிலிப்பீன்சு பாதுகாப்புப் படைகள் மணிலாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10,000–15,000 பேர் மீது சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

1992 – சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.

1999 – இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆத்திரேலிய கிறித்தவப் போதகர் கிரகாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

2003 – பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.

பிறப்புகள்

1552 – வால்ட்டர் ரேலி, ஆங்கிலேயக் கவிஞர், படை வீரர் (இ. 1618)

1561 – பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1626)

1573 – ஜான் டன், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1631)

1711 – யொகான் பிலிப் பப்ரிசியஸ், செருமனிய மதப் போதகர், தமிழறிஞர் (இ. 1791)

1788 – ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கிலேயக் கவிஞர், நாடகாசிரியர் (இ. 1824)

1870 – சேசாத்திரி சுவாமிகள், தமிழகச் சித்தர் (இ. 1929)

1891 – அண்டோனியோ கிராம்ஷி, இத்தாலிய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1937)

1898 – செர்கீ ஐசென்ஸ்டைன், உருசியத் திரைப்பட இயக்குநர் (இ. 1948)

1906 – ராபர்ட் ஈ. ஓவார்ட், அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1936)

1909 – ஊ தாண்ட், பர்மியக் கல்வியாளர், ஐநாவின் 3வது பொதுச் செயலர் (இ. 1974)

1926 – தி. வே. கோபாலையர், தமிழகத் தமிழறிஞர் (இ. 2007)

1958 – கிருஷ்ண முரளி, தெலுங்குத் திரைப்பட நடிகர்

1976 – டி. எம். கிருஷ்ணா, தமிழகக் கருநாடக இசைப் பாடகர்

1985 – யோகி பாபு, தமிழ் நகைச்சுவை நடிகர்

இறப்புகள்

1666 – ஷாஜகான், முகலாயப் பேரரசர் (பி. 1592)

1897 – ஐசக் பிட்மன், சுருக்கெழுத்து முறையைக் கண்டுபிடித்த ஆங்கிலேயர் (பி. 1813)

1901 – ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா (பி. 1819)

1922 – பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (பி. 1854)

1922 – சே. ப. நரசிம்மலு நாயுடு, தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், பதிப்பாளர் (பி. 1854)

1947 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்துப் பன்மொழிப் புலவர் (பி. 1875)

1973 – லின்டன் பி. ஜான்சன், அமெரிக்காவின் 36-வது அரசுத்தலைவர் (பி. 1908)

2008 – ஹீத் லெட்ஜர், ஆத்திரேலிய நடிகர் (பி. 1979)

2014 – அ. நாகேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1924)

2018 – ஏ. ஈ. மனோகரன், ஈழத்துப் பொப் இசைப் பாடகர், நடிகர்

2018 – அர்சலா கே. லா குவின், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1929)

சிறப்பு நாள்

******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!