வரலாற்றில் இன்று (12.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சனவரி 12 (January 12) கிரிகோரியன் ஆண்டின் 12 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 353 (நெட்டாண்டுகளில் 354) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1528 – முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார்.
1554 – பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார்.
1848 – போர்பன்களுக்கு எதிராக பலெர்மோ எழுச்சி சிசிலியில் இடம்பெற்றது.
1853 – தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது.
1866 – கொழும்பு மாநகரசபைக்கு முதல்தடவையாகத் தேர்தல்கள் இடம்பெற்றன.[1]
1866 – அரச வானூர்தியியல் சங்கம் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
1872 – நான்காம் யொகான்னசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.
1908 – முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
1915 – அமெரிக்க காங்கிரசு பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
1918 – இங்கிலாந்து, இசுட்டாஃபர்ட்சயர் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 155 பேர் உயிரிழந்தனர்.
1918 – பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்தின் பல நகரங்களின் மீது உருசியா குண்டுகளை வீசியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்தது.
1964 – சான்சிபாரின் புரட்சிவாதிகள் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.
1967 – எம். ஆர். ராதா நடிகர் எம். ஜி. இராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.
1970 – நைசீரிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1976 – பலத்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.
1990 – அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் சிறுபான்மையின ஆர்மீனியர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர், ஏனையோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
1991 – பாரசீக வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்கை வெளியேற்றுவதற்கு அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்த அமெரிக்க காங்கிரசு ஒப்புதல் அளித்தது.
1992 – மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
1998 – 19 ஐரோப்பிய நாடுகள் மாந்தர் படியாக்கம் தடை செய்யப்பட்டது.
2004 – உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலான “குயீன் மேரி 2” தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.
2005 – புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.
2006 – சவூதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.
2006 – 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை அருள் சின்னப்பரைச் சுட்டுக் காயப்படுத்திய மெகுமேது அலி ஆக்கா என்பவர் துருக்கிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
2010 – எயிட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100,000 பேர் வரை உயிரிழந்தனர். தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் பெரும் பகுதி அழிந்தது.
2015 – கமரூன், கொலபாட்டா நகரில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 143 போகோ அராம் போராளிகள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1598 – ஜிஜாபாய், பேரரசர் சிவாஜியின் அன்னை (இ. 1674)
1746 – யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர் (இ. 1827)
1848 – பிரான்சு ஃபான் சாக்சுலெட்டு, செருமனிய வேளாண்மை வேதியியலாளர் (இ. 1926)
1863 – விவேகானந்தர், இந்திய மெய்யியலாளர், ஆன்மிகவாதி (இ. 1902)
1869 – பக்வான் தாஸ், இந்திய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1958)
1893 – எர்மன் கோரிங், செருமானிய இராணுவத் தலைவர், அரசியல்வாதி (இ. 1946)
1893 – ஆல்பிரட் ரோசன்பெர்க், எசுத்தோனிய-செருமானிய கட்டிடக்கலைஞர், அரசியல்வாதி (இ. 1946)
1895 – எல்லப்பிரகத சுப்பாராவ், இந்திய உயிரிவேதியியலாளர் (இ. 1948)
1918 – மகேஷ் யோகி, இந்திய-இடச்சு மதகுரு (இ. 2008)
1924 – எஸ். எம். அப்துல் மஜீத், தமிழக அரசியல்வாதி
1936 – முப்தி முகமது சயீத், இந்திய அரசியல்வாதி (இ. 2016)
1944 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர் (இ. 2011)
1949 – அமாதி ஜெபாலி, துனீசியாவின் 19வது பிரதமர்
1949 – அருக்கி முரகாமி, சப்பானிய எழுத்தாளர்
1956 – மரீ கோல்வின், பிரித்தானிய ஊடகவியலாளர் (இ. 2012)
1956 – நிக்கலாய் நசுக்கோவ், சோவியத் ஒன்றிய மற்றும் உருசிய நாட்டுப் பாடகர்
1964 – ஜெப் பெசோஸ், அமேசான்.காம் தளத்தை ஆரம்பித்த அமெரிக்கக் கணினியியலாளர், தொழிலதிபர்
1967 – சஜித் பிரேமதாச, இலங்கை அரசியல்வாதி
1972 – பிரியங்கா காந்தி, இந்திய அரசியல்வாதி
1990 – சேர்ஜே கார்ஜக்கின், உருசிய-உக்ரைனிய சதுரங்க ஆட்ட வீரர்

இறப்புகள்

1665 – பியேர் டி பெர்மா, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1601)
1909 – ஹெர்மான் மின்கோவ்ஸ்கி, லித்துவேனிய-செருமானியக் கணிதவியலாளர் (பி. 1864)
1934 – சூரியா சென், வங்காளதேசக் கல்வியாளர், செயல்பாட்டாளர் (பி. 1894)
1976 – அகதா கிறிஸ்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1890)
2000 – இரா. நெடுஞ்செழியன், தமிழக அரசியல்வாதி (பி. 1920
2005 – அம்ரீஷ் பூரி, இந்திய நடிகர் (பி. 1932)
2007 – முருகு சுந்தரம், தமிழகக் கவிஞர் (பி. 1929)
2009 – புலோலியூர் க. தம்பையா, இலங்கை எழுத்தாளர்
2013 – ஐ. கே. கே. மேனன், மலையாள எழுத்தாளர் (பி. [1919]])
2014 – அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1935)
2017 – ச. வே. சுப்பிரமணியன், தமிழக எழுத்தாளர், தமிழறிஞர் (பி. 1929)

சிறப்பு நாள்

தேசிய இளைஞர் நாள் (இந்தியா)
சான்சிபார் புரட்சி நாள் (தன்சானியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!