வரலாற்றில் இன்று (06.01.2025)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
வரலாற்றில் இன்று | Today History in Tamil
சனவரி 6 (January 6) கிரிகோரியன் ஆண்டின் ஆறாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 359 (நெட்டாண்டுகளில் 360) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1066 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார்.
1449 – பதினோராம் கான்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கிளீவ்சின் இளவரசி ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
1690 – முதலாம் லெப்பல்ட் மன்னரின் மகன் யோசப் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
1809 – நெப்போலியப் போர்கள்: பிரித்தானிய, போர்த்துக்கீச, பிரேசில் படைகள் இணைந்து கயேன் மீது தாக்குதலைத் தொடுத்தன.
1838 – ஆல்பிரட் வால் என்பவர் மோர்சுடன் இணைந்து தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். இது மோர்ஸ் தந்திக்குறிப்பு உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
1839 – அயர்லாந்தைத் தாக்கிய கடும் புயலினால் டப்லின் நகரின் 20% வீடுகள் சேதமடைந்தன.
1887 – எதியோப்பியாவின் அரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான்.
1899 – இந்தியாவின் வைசிராயாக கேர்சோன் பிரபு நியமிக்கப்பட்டார்.
1900 – இரண்டாம் பூவர் போர்: பூவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிசிமித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1907 – மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உரோமில் ஆரம்பித்தார்.
1912 – நியூ மெக்சிக்கோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1912 – கண்டப்பெயர்ச்சி பற்றிய முதலாவது ஆய்வை செருமானிய புவியியற்பியலாளர் அல்பிரட் வெக்னர் வெளியிட்டார்.
1928 – தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.
1929 – யுகொசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர் நாட்டின் அரசியலமைப்பைத் தடை செய்தார்.
1929 – அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
1930 – முதலாவது டீசல்-ஆற்றல் தானுந்து சேவை அமெரிக்காவில் இந்தியானாபோலிசு முதல், நியூயார்க் நகரம் வரை நடத்தப்பட்டது.
1936 – கலாசேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: போலாந்தின் பொஸ்னான் நகரில் நாட்சி ஜெர்மனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.
1946 – வியட்நாமில் முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.
1947 – உலகைச் சுற்றி வருவதற்கான முதலாவது பயணச்சீட்டை பான் அமெரிக்கன் ஏர்வேய்சு விற்பனைக்கு விட்டது.
1950 – ஐக்கிய இராச்சியம் சீனாவை அங்கீகரித்தது. சீனக் குடியரசு ஐக்கிய இராச்சியத்துடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது.
1951 – கொரியப் போர்: 200–1,300 வரையான தென்கொரிய கம்யூனிச ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1959 – பிடெல் காஸ்ட்ரோ கவானாவை அடைந்தார்.
1960 – ஈராக்கில் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்ய அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
1960 – நியூயார்க்கில் இருந்து மயாமி நோக்கிச் சென்று கொண்டிருந்த நேசனல் ஏர்லைன்சு 2511 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 34 பேரும் உயிரிழந்தனர்.
1974 – 1973 எண்ணெய் நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பமானது.
1989 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1992 – ஜார்ஜியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் சிவியாத் கம்சகூர்தியா நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
1993 – சம்மு காசுமீரில் சோப்போர் என்ற இடத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவினர் 55 காசுமீரியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.
2007 – கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.
2007 – இந்தியாவில் அசாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.
2017 – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் துப்பாக்கி நபர்கள் சுட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர், ஆறு பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
255 – முதலாம் மர்செல்லுஸ், திருத்தந்தை, உரோமை ஆயர் (இ. 309)
1412 – ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சிய வீராங்கனை, புனிதர் (இ. 1431)
1500 – அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1569)
1878 – கார்ல் சாண்ட்பர்க், அமெரிக்கக் கவிஞர், வரலாற்றாளர் (இ. 1967)
1883 – கலீல் ஜிப்ரான், லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (இ. 1931)
1899 – சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1960)
1910 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (இ. 1965)
1917 – சி. எஸ். ஜெயராமன், நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகர் (இ. 1995)
1924 – கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009)
1936 – க. பொ. இளம்வழுதி, புதுச்சேரி எழுத்தாளர் (இ. 2013)
1942 – தெணியான், ஈழத்து எழுத்தாளர்
1955 – ரோவன் அட்கின்சன், ஆங்கிலேய நடிகர்
1959 – கபில் தேவ், இந்தியத் துடுப்பாட்டக்காரர்
1967 – ஏ. ஆர். ரகுமான், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்
1989 – பியா பஜ்பை, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1731 – எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (பி. 1672)
1852 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தை உருவாக்கிய பிரான்சியர் (பி. 1809)
1884 – கிரிகோர் மெண்டல், செக் நாட்டு தாவரவியலாளர் (பி. 1822)
1918 – கியார்கு கேன்ட்டர், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1845)
1919 – தியொடோர் ரோசவெல்ட், அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவர் (பி. 1858)
1937 – ஆந்திரே பெசெத், கனடியப் புனிதர் (பி. 1845)
1943 – அரங்கசாமி நாயக்கர், புதுவை விடுதலைக்காகப் போராடியவர், தமிழறிஞர் (பி. 1884)
1944 – என்றி புய்சன், பிரான்சிய வளிமண்டல ஆய்வாளர் (பி. 1873)
1945 – விளாதிமிர் வெர்னாத்ஸ்கி, உருசிய வேதியியலாளர் (பி. 1863)
1966 – டி. எஸ். சொக்கலிங்கம், தமிழக இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1899)
1990 – பாவெல் செரன்கோவ், நோபல் பரிசு மெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1904)
1997 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1939)
2017 – ஓம் பூரி, இந்திய நடிகர் (பி. 1950)
சிறப்பு நாள்
நத்தார் (ஆர்மீனியா)
வேட்டி நாள் (இந்தியா)