உலக சேலை தினம்
உலக சேலை தினம்
உலக சேலை தினம் ஒவ்வொரு ஆண்டுதோறும் டிசம்பர் 21 அன்று கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் சேலையில் காலம் காலமாக நிலைத்திருக்கும் அழகு பண்பாட்டு முக்கியத்துவம் மற்றும் நிலைத்திருக்கும் கவர்ச்சி இவற்றிலன் பெருமையை போற்றுகிறது.
புடவை என்பது தெற்காசிய பெண்கள் உடுத்தும் மரபு வழி ஆடை ஆகும். இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்காளதேசம் முதலிய நாடுகளில் பெண்கள் விரும்பி உடுத்துகின்றனர் . புடவை பல மொழிகளிலும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. புடவை அணிவதற்கென்று எந்த விதமான சிறப்பு முறையும் ஏற்படுத்தப்படவில்லை. சங்க கால பெண்கள் தான் இதற்கு அடிப்படையான முறையை முதலில் கண்டறிந்தனர்.
முகலாயரின் வருகைக்குப் பிறகு புடவையில் கற்கள் மற்றும் ஜர்தோசி கற்கள் பதிப்பு போன்ற அலங்காரங்கள் புகுத்தப்பட்டன.
பொதுவாக புடவையின் நீளம் 4 அல்லது 5 யார் வரை இருக்கும்? சில புடவைகள் ஒன்பது யார்கள் வரை இருப்பதுண்டு.
ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்பு தான் ரவிக்கை மற்றும் உள்பாவாடை உடுத்தும் பழக்கம் ஏற்பட்டது. புடவைகள் பெரும்பாலும் பருத்தி நூல் பட்டு நூல் மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்றன. அந்தப் புடவைகளில் வெள்ளி மற்றும் தங்கம் உலோகங்களின் மெல்லிய இழை களை பயன்படுத்தி அழகு ஊட்டப்படுகிறது. தமிழ்நாட்டில் பருத்தி நூல் புடவை, பட்டு எடை புடவை என நெசவாளர்களால் நையப்படும் புடவைகளை அணிவதில் மிகத் திருப்தி இருக்கும்.இயந்திரம் மூலம் நெய்யப்படும் புடவைகளுக்கு நிகராக அல்லது மேலாக நெசவாளர்கள் கைத்தறி மூலம் செய்யும் புடவைகள் மிகச் சிறப்பாக இருக்கும்.
இந்திய பெண்கள் சற்று பருத்திருந்தாலும் அவர்களையும் மிகவும் அழகாக மற்றவர் முன் காண்பிப்பது நமது கலாச்சார புடவைகள் தான் .
திருமணத்தின் போது பெண்கள் அணியும் கூரை புடவை மிகவும் பிரசித்தமானது. இரண்டு இதயங்களை இணைத்த கூரை புடவை இரண்டு மூன்றாகும் பொழுது தொட்டிலாய் மாறி தாலாட்டும் பாடும். பெரும்பாலான வெளிநாட்டினரை ஈர்க்கும் இந்திய கலாச்சார உடை எதுவென்றால் நமது பாரம்பரியமான பட்டுப் புடவைகளும், கைத்தறி காட்டன் புடவைகளும் தான்.
இந்தியாவில் புடவை நெய்தலில் பிரசித்தமான நகரங்கள் காஞ்சிபுரம் ,பனாரஸ், சந்தேரி ,போச்சம்பள்ளி மற்றும் மைசூர் ஆகும்.
-திவன்யா பிரபாகரன்