266ஆம் திருத்தந்தை பிரான்சிசு அடிகளார் பிறந்த தினம்..🌹
✝266ஆம் திருத்தந்தை பிரான்சிசு அடிகளார் பிறந்த தினம்..🌹
🎯திருத்தந்தை பிரான்சிசு இவரது இயற்பெயர் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ பி. 17 டிசம்பர் 1936) கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆம் திருத்தந்தை ஆவார். திருத்தந்தை ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அர்ஜென்டீனாவின் புவேனோஸ் ஐரேஸ் நகரில் இத்தாலியின் வடக்குப் பகுதியில் தூரின் நகர் அமைந்துள்ள பியத்மாந்து பிரதேசத்தின் பகுதியிலிருந்து சென்று குடியேறிய இத்தாலிய பெற்றோருக்கு ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருடைய பெற்றோர் பெயர்கள் மாரியோ ஹோசே பெர்கோலியோ, ரெஜீனா மரியா சிவோரி ஆகும். மாரியோ ஹோசே தொடருந்துத் துறையில் அலுவல் பார்த்தார். ரெஜீனா மரியா வீட்டுப்பொறுப்பைப் பார்த்துக்கொண்டார்.
திருத்தந்தை பிரான்சிசு தம் இளமையில் அரசு பள்ளியில் கல்விபயின்றார். சுமார் 20 வயதில் அவருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றின் காரணமாக அவர் ஒரு நுரையீரலின் செயல்பாடு இழந்தார்.[9] புவேனோஸ் ஐரேஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வி பயின்ற இவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[10] பின்னர் தம்மைக் கடவுள் இயேசு சபைத் துறவறக் குருவாக அழைப்பதை உணர்ந்த அவர் இயேசு சபையில் 1958இல் புகுமுகத் துறவு நிலையில் சேர்ந்தார்.
1992இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பெர்கோலியோவை புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமித்தார். அவருக்கு 1992, சூன் 27ஆம் நாள் ஆயர் பட்டம் அளிக்கப்பட்டது. ஆயர் பட்டம் வழங்கிய முதன்மைத் தலைவர் புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் அந்தோனியோ குவாராசீனோ ஆவார்.
பின்னர் ஆயர் பெர்கோலியோ புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் இணை ஆயர் ஆனார். அதன் பிறகு, 1998, பெப்ருவரி 28ஆம் நாள் ஆயர் பெர்கோலியோ புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். அதே நேரத்தில் அவர் அர்ஜென்டீனா நாட்டில் வாழ்ந்து தனி அமைப்பு இல்லாத கீழைச் சபைக் கத்தோலிக்கர்களுக்கும் ஆயராக நியமிக்கப்பட்டார்.
இவர் 2013, மார்ச்சு 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வத்திக்கான் நகரின் தலைவரும் ஆவார். இவர் அர்ஜென்டீனா நாட்டைச் சார்ந்தவர். புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியவர்.
தென்னமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை இவரே. மேலும், இயேசு சபையிலிருந்து திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபரும் இவர் ஆவார். மூன்றாம் கிரகோரிக்கு பின்பு கடந்த 1200 ஆண்டுகளில் ஐரோப்பாவுக்கு வெளியே இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.[2] 913இல் திருத்தந்தை லாண்டோவுக்குப் பின்பு தனக்கு முன் இருந்த திருத்தந்தையரின் பெயரை தனது ஆட்சிப்பெயராகத் தெரிவு செய்யாத இரண்டாம் திருத்தந்தை இவர் ஆவார்.
இவர் தம் தாய்மொழியாகிய எசுப்பானியம், தம் பெற்றோரின் பூர்வீக மொழியான இத்தாலியம் மற்றும் இலத்தீன், செருமானியம், ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகளை நன்கு பேச அறிந்தவர்.
2005ஆம் ஆண்டு நடந்த திருத்தந்தைத் தேர்தல் அவையில் பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அப்போது கர்தினால்-வாக்காளராகத் தேர்தலில் பங்கேற்ற பெர்கோலியோவுக்கு 40 வாக்குகள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.[4] ஆயினும் கர்தினால் பெர்கோலியோ தமக்குத் திருத்தந்தைப் பதவிக்காக வாக்குகள் அளிக்க வேண்டாம் என்று உடன் கர்தினால்மார்களிடம் அழாக்குறையாகக் கேட்டுக்கொண்டதாகச் சில செய்திகள் கூறுகின்றன